Deepak Kumar Mishra இயக்கத்தில் வெளியாகிறது Panchayat சீரிஸின் நான்காவது சீசன். கிராம பஞ்சாயத்துக்கு செகரெட்ரியாக வரும் இளைஞன் சந்திக்கும் சவால்களாக ஆரம்பித்த கதை, இந்த முறை பஞ்சாயத்து தேர்தலை மையமாக வைத்து வருகிறது.
Derek Haas இயக்கியுள்ள சீரிஸ் `Countdown'. காவலதிகாரி ஒருவர் குற்றத்துக்கு எதிராக போராடுவதே கதை.
கார்மன் தனது குடும்பத்திற்கு சொந்தமான உணவகத்தை எடுத்து நடத்தும் போது அவருக்கு வரும் சவால்களே `The Bear’ சீரிஸின் கதை.
பொலுரு கிருஷ்ணா இயக்கியுள்ள சீரிஸ் `Viraatapalem: PC Meena Reporting'. கிராமம் ஒன்றில் முதலிரவின் போது நடக்கும் கொலை பற்றிய விசாரணையே கதை.
ரிஷப் சேத் இயக்கியுள்ள சீரிஸ் `Mistry'. முன்னாள் காவலர் அர்மான் பல கேஸ்களை தீர்த்து வைக்கிறார். ஆனால் OCD-யால் அவருக்கு வரும் பிரச்சனைகளே கதை.
Hwang Dong-hyuk இயக்கிய சீரிஸ் `Squid Game'. மிகப்பெரிய ஹிட்டான இந்த சீரிஸின் மூன்றாவது மற்றும் இறுதி சீசன் வெளியாகவுள்ளது. இம்முறை என்ன டெரர் விளையாட்டுகள் வருகிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Dennis Lehane இயக்கியுள்ள சீரிஸ் `Smoke'. சிக்கலுக்குள்ளான ஒரு டிடெக்டிவ் மற்றும் தீயணைப்பு நிபுணருமான ஹீரோ தீர்க்க நிலைக்கு ஒரு கேஸ் பற்றிய கதை.
பிரபுதேவா நடித்த படம் `பேட்டா ராப்’. சினிமாவில் நடிகனாகும் ஆசைப்படும் இளைஞன் பல அவமானங்களை சந்திக்கிறான். அதன் விளைவாக தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கிறான். சாகும் முன்பு சொகுசான வாழ்வை வாழ நினைக்கும் அவனின் பயணமே கதை.
உல்சாவ் - பஹத் இயக்கிய படம் `Pariwar'. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைகள், பிரச்சனைகளே கதை.
கிருஷ்ணா ஷங்கர் இயக்கத்தில் வரலக்ஷ்மி - ஸ்ருதி ஹரிஹரன் நடித்த படம் `தி வெர்டிக்ட்'. பெண் ஒருவர் கொலை செய்யப்பட, சந்தேக பார்வை நம்ருதா நோக்கி திரும்புகிறது. அவர் நடத்தும் சட்டப்போராட்டமே கதை.
ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்த படம் `RAID 2'. வருமான வரித்துறை அதிகாரி அமய் இம்முறை ரெய்ட் செல்லும் போது ஏற்படும் சம்பவங்களே கதை.
ஜார்ஜ் இயக்கிய படம் `Azadi'. பிரசவத்திற்காக மருத்துவமனை வரும் கொலைக் குற்றவாளி, அவரை தப்பிக்க வைக்க அவளின் கணவன் போடும் திட்டமே கதை.
ஷண்முக ப்ரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்துள்ள படம் `லவ் மேரேஜ்'. வீட்டினர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு தயாராகும் இளைஞன் வாழ்வில் நடப்பவையே கதை.
எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் `மார்கன்'. மர்மமாக நடக்கும் கொலைகளை விசாரிப்பதே கதை.
விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள படம் `கண்ணப்பா'. கண்ணப்ப நாயனார் - சிவன் கதையை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம்.
சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள படம் `Nikita Roy'. எழுத்தாளரும் - இன்வஸ்டிகேட்டருமான நிகிதா ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர போராடுவதே கதை.
சென்ற ஆண்டு வெளியான `ஷைத்தான்' படத்தின் ஸ்பின் ஆஃப் ஆக உருவாகியுள்ள படம் `Maa'. சந்திரபூர் என்ற கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யங்கள் பற்றிய படம்.
Gerard Johnstone இயக்கியுள்ள படம் `M3GAN 2.0'. மனித வடிவில் இருக்கும் ரோபோ இம்முறை என்ன தீமைகளை செய்கிறது, எப்படி கட்டுப்படுத்தபடுகிறது என்பதே கதை.
Joseph Kosinski இயக்கியுள்ள பிராட் பிட் நடித்துள்ள படம் `F1'. பிரபல ஃபார்முலா ரேஸ் டிரைவர் ஓய்விலிருந்து திரும்ப வந்து பயிற்சி அளிப்பதே கதை.