Series
Suits சீரிஸின் இரண்டாவது ஸ்பின் ஆஃப் ஆக உருவாகியிருக்கிறது `Suits: L.A.’. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட லா ஃபர்ம், கிரிமினல் குற்றங்கள் மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் துறை சார்ந்த குற்றங்களையும் எப்படி கையாள்கிறது என்பதே கதை.
சோனாலி போஸ் இயக்கியுள்ள சீரிஸ் `Ziddi Girls'. Matilda House Collegeல் இணையும் ஐந்து ஃப்ரெஷ்ஷர்ஸ் பற்றிய கதை.
பிரகாஷ் ஜா இயக்கத்தில் பாபி தியோல் நடித்துள்ள சீரிஸ் `Aashram'. இதன் மூன்றாவது சீசனின் இரண்டாம் பாகம் இப்போது வெளியாகிறது. ஆன்மிகத்தை மையப்படுத்து நடக்கும் விஷயங்கள் பற்றிய கத
Jon Erwin உருவாக்கியுள்ள சீரிஸ் `The House of David'. புராண கதாப்பாத்திரமான சவுல் அரசரைப் பற்றிய கதை.
பிரம்மா, சர்ஜூன் இயக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சீரிஸ் `சுழல் 2’. முதல் பாகத்திற்குப் பிறகு, இந்த பாகத்தில் புதிய வழக்கு, ஒரு கொலை. சந்தேகிக்கப்படும் நபர்கள் 8 பெண்கள். அதை செய்தது யார்? என்? எப்படி? என்பதே கதை.
விஷ்ணு ராகவ் இயக்கத்தில் நீரஜ் மாதவ், அஜூ வர்கீஸ், கௌரி கிஷன் நடித்துள்ள சீரிஸ் `Love Under Construction'. வினோத் தன் சொந்தவீட்டை கட்ட முடிவு செய்கிறார். அதில் வரும் சிக்கல்களை அவர் சமாளித்தாரா என்பதே கதை.
சபானா ஆஸ்மி, ஜோதிகா, நிமிஷா சஜயன் நடித்துள்ள சீரிஸ் `Dabba Cartel'. ஐந்து பெண்கள் இணைந்து போதைப் பொருள் கார்ட்டல் நடத்துவது பற்றிய கதை.
Post Theatrical Digital Streaming
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகம், கலையரசன் நடித்த படம் `மெட்ராஸ்காரன்'. இருவரின் மோதல், மிகப்பெரிய பகையாக மாறிய பின்பு என்ன ஆகிறது என்பதே கதை.
எழில் பெரியவேடி இயக்கிய படம் `பராரி’. தொழிளாலர்களின் சிக்கல்களைப் பேசும் படம்.
Guillem Morales இயக்கிய படம் `The Wasp'. பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறார்கள் ஹீத்தர் - க்ளாரா. ஹீத்தர் ஒரு ஆஃபரை க்ளாராவுக்கு தெரிவிக்க, அதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.
Jeff Fowler இயக்கத்தில் ஜிம் கேரி நடித்துள்ள படம் `Sonic the Hedgehog 3'. இந்த முறை டாக்டர் எக்மேன் செய்யும் வில்லத்தனத்தை ஹெட்ஜ்டாக் எப்படி முறியடிக்கிறது என்பதே கதை.
Tim Burton இயக்கிய படம் `Beetlejuice Beetlejuice'. டீனாவின் மகள் செய்யும் ஒரு விஷயத்தால் விபரீத சிக்கலில் சிக்கிக் கொள்கிறது குடும்பம். அதன் பின் என்னாகிறது என்பதே கதை.
Theatre
திரிந்தாராவ் இயக்கியுள்ள சந்தீப் கிஷன்,ரிது வர்மா நடித்துள்ள படம் `Mazaka'. ஒரே நேரத்தில் தந்தை மகன் இருவரும் தங்கள் காதலை கண்டடைகின்றனர். ஆனால் அதற்கு பிறகு வரும் பிரச்சனைகள் என்ன என்பதே கதை.
போபன் சாமுவேல் இயக்கியுள்ள படம் `Machante Malakha’. சஜீவன் - பிஜுமோல் தம்பதியின் வாழ்க்கையே கதை.
அறிவழகன் - ஆதி கூட்டணியில் ஈரம் படத்திற்கு பிறகு உருவாகியிருக்கும் படம் `சப்தம்’. சத்தத்தை மையப்படுத்திய ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.
பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன், ராஷி கண்ணா நடித்துள்ள படம் `அகத்தியா’. சாதாரண மனிதன், ஒரு மாய உலகத்திற்குள் நுழையும் அட்வென்சர் தான் கதை.
நிதின் இயக்கத்தில் எஸ் ஏ சந்திரசேகர் நடித்துள்ள படம் `கூரன்’. ஒரு தெருநாயின் நீதிப் போராட்டமே கதை.
நவீன் குமார் இயக்கியுள்ள படம் `கடைசி தோட்டா’. புதிதாக திருமணம் முடித்த ரக்ஷன் - ஸ்ருதி ரிசார்ட் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு நடக்கும் ஒரு சம்பவத்தை பார்க்கு ரக்ஷன், அதன் பின் எதிர்கொள்ளும் பிரச்சனைகளே கதை.
ரீமா இயக்கியுள்ள படம் `Superboys Of Malegaon’. நசீர் சைக் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பற்றிய கதை.
கிரிஷ் கோலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Crazxy’. அபிமன்யு என்ற மருத்துவரின் அட்வென்சர் பயணமே கதை.
Brady Corbet இயக்கியுள்ள படம் ` The Brutalist'. கட்டுமான துறையை சேர்ந்த கணவன் - மனைவி இணைந்து உருவாக்கும் விஷயங்களே படம்.
Gints Zilbalodis இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Flow’. வெள்ளம் ஒன்றினால் தன் வீட்டை இழக்கும் பூனையின் பயணமே கதை.
Jacques Audiard இயக்கியுள்ள படம் `Emilia Perez'. போதைப் பொருள் விற்கும் லீடர் செய்யும் ஒரு விஷயமும் அதன் விளைவுகளுமாக நகரும் கதை.