august 16,1947 | burqa | The Pope's eXorcist
august 16,1947 | burqa | The Pope's eXorcist Aha

'1947' முதல் The Pope's Exorcist வரை இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide

தமிழில் வெளியான எட்டு தோட்டாக்கள் படமும், தடம் திரைப்படமும் இந்த வாரம் வேற்றுமொழிகளில் ரீமேக்காகி வெளியாகின்றன.

இந்த வாரம் வெளிவர இருக்கும் ஓடிடி சீரிஸ், திரைப்படங்கள், திரையரங்கில் வெளியாகவிருக்கும் படங்கள் போன்றவற்றின் அறிமுகமே இந்த லிஸ்ட்டிக்கிள்.

1. August 16, 1947 (Tamil)

August 16, 1947
August 16, 1947

முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன் குமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். செங்காடு என்கிற கிராமத்திற்கு மட்டும் சுதந்திர தின விழா ஒருநாள் தள்ளிப்போகிறது. இதனால் அங்கு ஏற்படும் பிரச்னைகளை சொல்கிறது இந்தப் படம்.

2. முந்திரிக்காடு 

Munthirikkaadu
Munthirikkaadu

இரண்டு சமூகங்களுக்கிடையே நடக்கும் காதல் கதை தான் முந்திரிக்காடு படத்தின் களம். மு.களஞ்சியம் இயக்கியிருக்கும் இப்படத்தில் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

3. Corona Papers (Malayalam)

Corona Papers
Corona Papers

தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் ரீமேக் இந்த கொரோனா பேப்பர்ஸ். ஷேன் நிகாம், டாம் ஷைன் சாக்கோ, காயத்ரி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரியதர்ஷன்.

4. Kolambi

kolambi
kolambi

டிகே ராஜீவ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் நித்யா மேனன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்.

5. Gumraah

Gumraah
Gumraah

தமிழில் ஹிட் அடித்த தடம் படத்தின் இந்தி வெர்சன் தான் இந்த கும்ரா. மிரினால் தாக்கூர், ஆதித்யா ராய் கபூர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

6. The Pope's Exorcist (English)

The Pope's Exorcist
The Pope's Exorcist

பாதிரியார் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அமானுஷ்ய சம்பவங்கள் பற்றிப் பேசுகிறது இந்த The Pope's Exorcist  . ரஸல் க்ரோ இந்தப் படத்தில் பாதிரியராக நடித்திருக்கிறார்.

7. The Super Mario Bros. Movie (English) 

The Super Mario Bros.
The Super Mario Bros.

The Super Mario Bros. அனிமேஷன் திரைப்படம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் வீடியோ கேம் விளையாட்டான சூப்பர் மேரியோவை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

8. Burqa (Tamil) Aha - Apr 7 (Movie)

Burqa
Burqa

SM சர்ஜுன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கலையரசனும், மிர்னாவும் நடித்திருக்கிறார்கள். Aha OTT தளத்தில் இப்படம் வெளியாகிறது.

9. Chupa (English) Netflix - Apr 7 (Movie)

Chupa
Chupa

வினோத மிருகத்துக்கும் சிறுவனுக்குமான பிணைப்பே இந்த Chupa திரைப்படம். நெட்பிளிக்ஸில் இப்படம் வெளியாகிறது.

10. Oh Belinda (Turkish) Netflix - Apr 7 (Movie)

Oh Belinda
Oh Belinda

நடிகையின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைப் பற்றிய துருக்கிஷ் புனைவு இந்த Oh Belinda .

11. Hunger (Thai) Netflix - Apr 8 (Movie)

Hunger
Hunger

சாதாரண உணவகத்தில் வேலை பார்க்கும் செஃபுக்கு பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வாய்ப்பு வருகிறது. அதோடு பிரச்னைகளும் வருகிறது. என்ன பிரச்னைகள் என்பதுதான் இந்த தாய்லாந்து படத்தின் ஒன்லைன்.

12. War Sailor (Norwegian) Netflix Apr 2 (Series)

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு நார்வே அரசு சார்பாக அனுப்பப்பட்ட படம் இந்த war sailor. அதை மூன்றாகப் பிரித்து சீரிஸாக்கியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். நார்வே நாட்டில் அதிக பொருட்செலவில் உருவான படம் இதுதானாம்.

13. Beef (English) Netflix - Apr 6

Beef
Beef

யாரென்றே அறிமுகமில்லாத இரண்டு நபர்களுக்கிடையே உருவாகும் மேஜிக் தான் இந்த பீஃப்.

14. Jubilee (Hindi) Prime - Apr 7

Jubilee
Jubilee

விக்ரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணைய தொடர் இந்த ஜூப்ளி. சுதந்திரம் அடைந்த பிறகு சினிமா துறை எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றி பேசும் தொடர்.

15. Dave S3 (English) Hotstar - Apr 7

Dave
Dave

ராப் பாடகராக நினைக்கும் தேவ் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டதே இந்த வெப் சீரிஸ். இது இந்தத் தொடரின் மூன்றாவது சீசன்

16. Thicker Than Water (English) Netflix - Apr 7

Thicker Than Water
Thicker Than Water

பெண் பத்திரிகையாளர் ஒருவர் தனது உறவினருக்கு உதவப் போய், அதனால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை

17. Pallu Padama Paathuka (Tamil) Prime - Apr 2

Pallu Padama Paathuka
Pallu Padama Paathuka

டெம்பிள் மங்கீஸ் புகழ் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவான படம் இந்த PPP. ஒரு ஸாம்பி கூட்டத்தில் சிக்கிக் கொள்ளும் சில நபர்களை பற்றிய காமெடி கதை.

18. The Woman King (English) Netflix - Apr 3

The Woman King
The Woman King

1800களில் வாழ்ந்த போர் வீராங்கனைகள் பற்றிய படம் இந்த வுமன் கிங். தாமோ என்ற அரசைக் காப்பாற்ற அவர்கள் செய்த போர்களும் தியாகங்களுமே கதை.

19. Romancham (Malayalam) Hotstar - Apr 7

Romancham
Romancham

திரையரங்கில் வெளியான போதே பலரது பாராட்டுகளையும் பெற்றது ரோமான்ச்சம். சில நண்பர்களின் வாழ்க்கையைப் பற்றி காமெடி கலந்து சொல்லும் படம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com