The preview Show
The preview Showcanva

இந்த வாரம் நிறைய SuperHero வர்றாங்க..! #OTTGuide

ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் `வீரன்’ சூப்பர் ஹீரோ ஜானர் படமாக வருகிறது.

1. Asur S2 (Hindi) Jio Cinema - June 1

Asur S2
Asur S2

ஒனி சென் இயக்கத்தில் உருவான இந்தி சீரிஸ் Asur. நிகில் நாயர் முன்னாள் தடயவியல் நிபுணர், இந்நாள் ஆசிரியர். அவர் மறுபடி சிபிஐயில் இணைந்ததும் ஒரு சீரியல் கில்லரை கண்டுபிடிக்கும் பொறுப்பு வருகிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதே முதல் சீசனின் கதை. இப்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது.

2. School Of Lies (Hindi) Hotstar- June 2

School Of Lies
School Of Lies

தனியார் பள்ளியில் இருந்து பன்னிரண்டு வயது சிறுவன் காணாமல் போகிறார். இதனைத் தொடர்ந்து வெளிவரும் உண்மைகள் தான் School Of Lies இந்தி சீரிஸின் கதை.

3. Scoop (Hindi) Netflix - June 2

Scoop
Scoop

ஹன்சல் மெஹ்தா இயக்கத்தில் கரீஷ்மா தனா நடித்திருக்கும் இந்தி சீரிஸ் Scoop. மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் படுகொலைக்குப் பிறகு, ஒரு க்ரைம் ரிப்போர்டரின் வாழ்க்கை தலைகீழாகிறது. அது ஏன்? எதனால்? என்பதே சீரிஸின் கதை.

4. Manifest S4 Part2 (English) Netflix - June 2

Manifest
Manifest

நெட்ஃப்ளிக்ஸின் பிரபலமான சீரிஸ் Manifest. இப்போது இதன் நான்காவது சீசன் வெளியாகியிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானம் ஒன்று திரும்ப வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்ற மர்மத்தை சுவாரஸ்யமாக சொல்கிறது சீரிஸ்.

5. The Ride (English) Prime - May 30

The Ride
The Ride

எட்டு எப்பிசோட்களாக வந்திருக்கும் இந்த The Ride ஆவணத் தொடர் Professional Bull Riders பற்றி பேசுகிறது. அந்த விளையாட்டு பற்றி, அதன் வளர்ச்சி பற்றி, அதிலிருக்கும் ஆபத்து போன்றவற்றை விளக்குகிறது இந்த ஆவணத் தொடர்.

6. Sulaikha Manzil (Malayalam) Hotstar - May 30

Sulaikha Manzil
Sulaikha Manzil

ஹாலா - அமீன் திருமணம் அவசர அவசரமாக ஏற்பாடாகிறது. இந்த அவசரகதி திருமணத்தில் இரு வீட்டாருக்கும் நடக்கும் சிக்கல்களும் கலாட்டாக்களுமே Sulaikha Manzil மலையாளப்படத்தின் கதை.

7. Vortex (French) Netflix - June 2

Vortex
Vortex

மனைவியின் மரணத்திற்குப் பிறகும் அவளை சந்திக்க ஒரு வாய்ப்பு அமைகிறது கணவருக்கு. இதன் மூலம் அவளின் இறப்புக்கு பின் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்கிறார் கணவர். இதுவே ஃப்ரெஞ்ச் மொழியில் வெளியாகியாகும் Vortex படத்தின் கதை.

8. Mumbaikar (Hindi) Jio Cinema - June 2

Mumbaikar
Mumbaikar

சந்தோஷ் சிவன் இயக்கத்திகில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மெஸ்ஸி, ஹ்ருது நடித்திருக்கும் இந்திப் படம் Mumbaikar. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய `மாநகரம்’ படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கிறது படம்.

9. Ghar Banduk Biryani (Marathi) Zee5 - June 2

Ghar Banduk Biryani
Ghar Banduk Biryani

ஹேமந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மராத்தி படம் Ghar Banduk Biryani. ஒரு சமையல் கலைஞர், ஒரு காவலதிகாரி, ஒரு புரட்சிப்படையின் தலைவர் இந்த மூவரின் பாதை ஒருவரை ஒருவர் குறுக்கிடும் போது என்ன ஆகிறது என்பதே படத்தின் கதை.

10. Hatyapuri (Bengali) Zee5 - June 2

Hatyapuri
Hatyapuri

சத்யஜித்ரேவின் புகழ்பெற்ற கற்பனைக் கதாபாத்திரம் டிடக்டிவ் ஃபெலூடா. அந்தக் கதாப்பாத்திரம் தனது விடுமுறையைக் கொண்டாட செல்லும் இடத்தில் நடக்கும் கொலையை விசாரிக்கத் துவங்குகிறது. அந்தக் கொலையை செய்தது யார் என்பதே பெங்காலி படமான Hatyapuri படத்தின் கதை.

11. Godavari (Marathi) Jio Cinema - June 3

Godavari
Godavari

கோதாவரி கரையில் வாழும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதைதான் Godavari என்ற மராத்திப் படத்தின் கதை. அந்தக் குடும்பம் ஒரு மரணத்தை எப்படி எதிர் கொள்கிறது என்பதே படத்தின் மையம்.

12. Spider-Man: Across The Spider-Verse (English) - June 1

Spider-Man: Across The Spider-Verse
Spider-Man: Across The Spider-Verse

Miles Morales இந்த முறை சந்திக்கும் பிரச்சனைகளும், வெவ்வேறு பரிமாணங்களில் இருந்து வந்த ஸ்பைடர் மேன்கள் எப்படி புதிய பிரச்சனையை கையாள்கிறார்கள் என்பதுமே Spider-Man: Across The Spider-Verse படத்தின் கதை.

13. Veeran (Tamil) - June 2

Veeran
Veeran

மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `வீரன்’. ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் இது சூப்பர் ஹீரோ ஜானர் படமாக வருகிறது. தன்னுடைய ஊரைக் காப்பாற்ற ஹீரோ செய்யும் சாகசங்கள் தான் இந்த ஃபேண்டசி படத்தின் கதை.

14. Kather Basha Endra Muthuramalingam (Tamil) - June 2

Kather Basha Endra Muthuramalingam
Kather Basha Endra Muthuramalingam

பலம் வாய்ந்த கேங்ஸ்டருக்கும் - முரட்டுத்தனமான ஹீரோவுக்கும் இடையேயான மோதல் தான் ஆர்யா நடித்திருக்கும் `காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை. முத்தையாவின் ட்ரேட்மார்க் அடிதடி, செண்டிமெண்ட் உடன் இந்த முறை இந்து - முஸ்லீம் சகோதரத்துவத்தையும் பேச இருக்கிறது படம்.

15. Pareshan (Telugu) - June 2

Pareshan
Pareshan

ரூபக் ரோல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் Pareshan. கிராமத்து இளைஞனின் நட்பு, காதல், குடும்பம் இவற்றுக்குள் வரும் சிக்கல்களும், அதை அவர் எப்படி சரி செய்கிறார் என்பதே படம்.

16. Zara Hatke Zara Bachke (Hindi) - June 2

Zara Hatke Zara Bachke
Zara Hatke Zara Bachke

லுக்கா சுப்பி, மிமி படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் உடேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் Zara Hatke Zara Bachke. விக்கி கௌஷல் - சாரா அலிகான் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். கபில் - சௌமியா தம்பதி கூட்டுக் குடும்பத்தில் வாழும் தம்பதி. ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய நினைக்கிறார்கள், இதன் பின் என்ன நடக்கிறது என்பதை காமெடியும் எமோஷனும் கலந்து சொல்கிறது படம்.

17. The Boogeyman (English) - June 2

The Boogeyman
The Boogeyman

எழுத்தாளர் ஸ்டீஃபன் கிங் எழுதிய சிறுகதையைத் தழுவி உருவாகியிருக்கும் படம் The Boogeyman. ஏற்கனவே ஒரு மரணத்தால் உடைந்து போயிருக்கும் ஒரு குடும்பத்திற்கு, அடுத்தடுத்து வரும் துன்பங்களை ஹாரராக சொல்ல இருக்கிறது படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com