OTT Release
OTT ReleasePT web

Kaadhal The Core | Tejas | EXPENDABLES 4 | இந்த வார ஓடிடி லிஸ்ட்-ல் இவ்ளோ படங்களா....!

நெட்ஃப்ளிக்ஸில் Fool Me Once, அமேசான் பிரைமில் காதல் தி கோர், ஜீ 5-ல் தேஜஸ் என பல படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. அந்த லிஸ்ட்-ஐ இங்கே தெரிந்துகொள்ளுங்கள்...

1. SERIES

Fool Me Once (English) Netflix - Jan 1

Fool Me Once
Fool Me Once

Danny Brocklehurst எழுதிய Fool Me Once நாவல் அதே பெயரில் வெப் சீரிஸாக உருவாகியிருக்கிறது. தனது கணவர் ஜோ கொலை செய்யப்பட, அந்த சிசிடிவி வீடியோ காட்சியைப் பார்த்த மாயா அதிர்ந்து போகிறார். இன்னொரு புறம் அவளது உறவினர்களான அபி - டேனியல் இருவரும் தங்களது அம்மாவைக் கொன்றது யார் என்ற தேடுதலில் இருக்கிறார்கள். இந்த இரு கொலைகளும் ஒரே புள்ளியில் இணைகிறது. அதன் பின் நடப்பவையே மீதிக்கதை.

2. The Brothers Sun (English) Netflix - Jan 4

The Brothers Sun
The Brothers Sun

ப்ளாக் காமெடி ஆக்‌ஷன் சீரிஸாக உருவாகியிருக்கிறது `The Brothers Sun'. சார்லஸ் சன் பெரிய கேங்க்ஸ்டர். தன் அப்பா ஒரு காண்ட்ராக்ட் கில்லரால் கொலை செய்யப்படுகிறார், அம்மா - தம்பி உயிரும் ஆபத்தில் இருப்பதால் அவர்களைக் காப்பாற்ற மறுபடி சொந்த ஊருக்கு வருகிறார். அதன் பின் நடக்கும் அடிதடிகளே கதை.

3. Perilloor Premier League (Malayalam) Hostar - Jan 5

Perilloor Premier League
Perilloor Premier League

பிரவீன் சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Perilloor Premier League’. மலையாளத்தில் `Kunjiramayanam', `The Priest', `Padmini' போன்ற படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய தீபு பிரதீப் இந்த சீரிஸ்க்கு கதை. பெரிலூருக்கு தன் பாய்ப்ரெண்டை தேடி வருகிறார் மாளவிகா. ஆனால் வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக அந்த ஊரின் பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஆகிவிடுகிறார். இதில் நிகழும் கலாட்டாக்கள் தான் கதை. நிகிலா விமல், சன்னி வெய்ன் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள்.

4. DOCUMENTARY

Bitconned (English) Netflix - Jan 1

Bitconned
Bitconned

Cryptocurrencyயில் நடந்த ஒரு கொள்ளையைப் பற்றியதே `Bitconned’ ஆவணப்படம். மூன்று நபர்கள் இணைந்து Cryptocurrencyயில் ஊழலைச் செய்து, வந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது பற்றி விவரிக்கிறது இந்த ஆவணப்படம்.

5. You Are What You Eat: A Twin Experiment (English) Netflix - Jan 1

You Are What You Eat: A Twin Experiment
You Are What You Eat: A Twin Experiment

உணவு, உடல்நலன் பற்றி விளக்கும் ஆவணத் தொடரே, `You Are What You Eat: A Twin Experiment'. ஒரே தோற்றத்தில் இருக்கும் இரட்டையர்களின், டயட் ப்ளானையும் வாழ்க்கை முறையையும் ஒரு எட்டு வாரங்களுக்கு மாற்றுவதால், அவர்கள் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என ஆராய்ந்திருக்கிறார்கள்.

6. Man on the Run (English) Netflix - Jan 5

Man on the Run
Man on the Run

Cassius Michael Kim இயக்கியிருக்கும் ஆவணப்படம் `Man on the Run’. 1MDB என்றழைக்கப்படும் 1Malaysia Development Berhad scandal என்பதைத் தான் இந்த ஆவணப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது. மலேஷிய முன்னேற்றத்திறாகான முதலீட்டை கொண்டு வரும் செயலில் நடந்த ஊழல்களை பேச இருக்கிறது இந்த ஆவணப்படம்.

7. OTT

Foe (English) Prime - Jan 5

Foe
Foe

Iain Reid எழுதிய Foe புத்தகம் அதே பெயரில் படமாக்கப்பட்டிருக்கிறது. Lion, Mary Magdalene போன்ற படங்களை இயக்கிய Garth Davis இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு தம்பதியின் வாழ்க்கை திடீரென வரும் ஒரு தகவலால் தலைகீழ் ஆகிறது. கணவருக்கு ஸ்பேஷ் ஸ்டேஷனில் பணியாற்ற அழைப்பு வருகிறது. பூமியில் மனைவிக்குத் துணையாக ஒரு ரோபோட் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் பின் நடப்பவையே கதை.

8. Good Grief (English) Netflix - Jan 5

Good Grief
Good Grief

Daniel Levy இயக்கி நடித்திருக்கும் படம் `Good Grief'. தனது துணையை இழந்த சோகத்தில் இருக்கிறார் மார்க். மனமாற்றத்திற்காக தன் இரு நண்பர்களுடன், பாரிஸுக்கு ட்ரிப் செல்கிறார். இந்த பயணம் அவர்கள் மூவர் வாழ்வில் என்ன மாற்றுகிறது என்பதே கதை.

9. Post Theatrical Digital Streaming

Calling Sahasra (Telugu) Prime - Jan 1

Calling Sahasra
Calling Sahasra

Arunvikkirala இயக்கத்தில் உருவான படம் `Calling Sahasra'. சைபர் எக்ஸ்பர்ட் அஜய். அவர் வாழ்வில் நடக்கும் ஒரு திருப்பம், அதைத் தொடர்ந்து நிகழும் விஷயங்களுமே கதை.

10. Tholvi F. C (Malayalam) Prime - Jan 2

Tholvi F. C
Tholvi F. C

George Kora இயக்கத்தில் வெளியான படம் `Tholvi F. C’. குருவில்லா மற்றும் குடும்பத்தினரின் கதை தான் இது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு. ஆனால் அனைவருமே அதில் தோல்வியை மட்டுமே சந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை காமெடி கலந்து சொல்கிறது படம்.

11. Talk To Me (English) Prime - Jan 3

Talk To Me
Talk To Me

Danny Philippou, Michael Philippou இயக்கத்தில் வெளியான ஹாரர் படம் `Talk To Me'. ஓஜா போட் கான்செப்ட்டை கொஞ்சம் திருப்பிப் போட்டு, கை போன்ற சிலையை வைத்து பேயுடன் ஷேக் ஹேண்ட்ஸ் கொடுத்திருந்தார்கள். அந்த சிலை கையைப் பிடித்து ”உன்னை நான் உள்ளே வர அனுமதிக்கிறேன்” எனக் கூறினால் எதிரே பேய் வரும். த்ரில்லுக்காக ஹீரோயினும் அவளது நண்பர்களும் இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் ஆட்டம் எல்லை மீற, பேயின் கை ஓங்குகிறது. பின்பு என்ன ஆனது என்பதே கதை.

12. Hi Nanna (Telugu) Netflix - Jan 4

Hi Nanna
Hi Nanna

நானி, மிருணாள் தாக்குர் நடித்த படம் `Hi Nanna'. சிங்கிள் ஃபாதராக தன் மகளை வளர்க்கிறார் ஹீரோ. அம்மாவுக்கு என்ன ஆனது என்ற குழந்தையின் கேள்வி, மீண்டும் அவரைத் தேடி வரும் இன்னொரு காதல் இவற்றால் அவர் வாழ்வில் சந்திப்பவை என்ன என்பதே கதை.

13. Kotabommali PS (Telugu) Aha - Jan 5

Kotabommali PS
Kotabommali PS

தேஜா மர்னி இயக்கத்தில் ஸ்ரீகாந்த், வரலக்‌ஷ்மி, ராகுல் விஜய், ஷிவானி நடித்த படம் `Kotabommali PS’. 2021ல் வெளியான மலையாளப்படம் `Nayattu’வின் தெலுங்கு ரீமேக் தான் இது. சில காவலர்கள் ஒரு சதி வலையில் சிக்கிக் கொள்ள, அதிகாரமும், அரசியலும் அவர்களை எப்படி வேட்டையாடுகிறது என்பதே கதை.

14. Kaathal the core (Malayalam) - Prime Video - Jan 5

Kaathal the core
Kaathal the core

மலையாளத்தில் மம்முட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காதல் தி கோர் திரைப்படம், அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜனவரி 5 வெளியாகிறது. தமிழ், மலையாள, இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

15. Tejas (Hindi) Zee5 - Jan 5

Tejas Hindi
Tejas Hindi

கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் `Tejas’

இந்திய விமானப்படையை சேர்ந்த தேஜஸ்வினி கில் ஒரு இந்திய உளவாளியைக் காப்பாற்றி வரும் பொறுப்பு அளிக்கப்படுகிறது. அந்த போரட்டத்தின் இடையே அவரது கடந்த கால வாழ்க்கையும் சில மோசமான நினைவுகளை கிளறிவிடுகிறது. இதை சமாளித்து கொடுக்கப்பட்ட மிஷனை முடித்தாரா இல்லையா என்பதே கதை.

16. The Expendables 4 (English) Lionsgate Play - Jan 5

The Expendables 4
The Expendables 4

Scott Waugh இயக்கத்தில் Jason Statham, Sylvester Stallone, Megan Fox, Tony Jaa மற்றும் பலர் நடித்து வெளியான படம் `The Expendables 4'. வழக்கம்போல் Expendables குழுவினர் கையில் எடுக்கும் ஒரு பணி,  அதில் வரும் சிக்கல்கள் தான் கதை. Expendables பட வரிசையிலேயே இதுதான் மிக மோசமான ரிவ்யூஸ் வாங்கியது என்பது சோகம்.

17. Theatre

Aranam, Kumbari - Jan 5

அடுத்த வாரம் பொங்கல் ரிலீஸ் என்பதால் இந்த வாரம் தியேட்டரில் பெரிய ரிலீஸ் எதுவும் இல்லை.

Kumbari தமிழில் பாடலாசிரியர் ப்ரியன் இயக்கி, நடித்துள்ள `அரணம்’, கெவின் ஜோசப் இயக்கிய `கும்பாரி’ ஆகிய படங்கள் வெளியாகிறது. 

18. Double Engine (Telugu) - Jan 5

Double Engine
Double Engine

Rohit Penumatsa இயக்கத்தில் வெளியாகும் படம் `Double Engine'. டேனி தன் நண்பர்களுடன் இணைந்து டபுள் எஞ்ஜின் என்ப்படம் இரட்டைத் தலைபாம்பை பிடிக்கும் முயற்சியில் இருக்கிறான். ஷேர் ஆட்டோ ஓட்டும் டேனி, தனது பிறந்த நாளை கொண்டாட சொந்த கிராமத்துக்கு செல்கிறான். ஆனால் அங்கு அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அவை என்ன என்பதே படம்.

19. Aattam (Malayalam) - Jan 5

Aattam
Aattam

Anand Ekarshi இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Aattam’. ஒரு நாடகக்குழுவைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது. 

20. Anyone But You (English) - Jan 5

Anyone But You
Anyone But You

`Easy A;, `Friends with Benefits’, `Peter Rabbit’, `Peter Rabbit 2’ போன்ற படங்களை இயக்கிய Will Gluck படம் `Anyone But You’. தங்களது முதல் டேட்டிலேயே முட்டிக் கொள்ள இனி சந்திக்கக் கூடாது என நினைத்து பிரிகிறார்கள்  Bea மற்றும் Ben. ஆனால் மீண்டும் ஒரு திருமணத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்கையில் என்ன ஆகிறது என்பதே கதை.

21. Night Swim (English) - Jan 5

Night Swim
Night Swim

2014ல் McGuire மற்றும் Rod Blackhurs இயக்கி வெளியிட்ட நான்கு நிமிடக் குறும்படம் `Night Swim’. இப்போது அதே பெயரில் படமாக, Bryce McGuire உருவாகியிருக்கிறார். வல்லர் தனது குடும்பத்துடன் புது வீட்டுக்குள் குடிபெயர்கிறார். அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. பின்பு என்ன ஆகிறது என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com