The Village | LEO | Kaadhal The Core | Napolean
The Village | LEO | Kaadhal The Core | NapoleanCanva

இந்த வாரம் ரெண்டு LEO... மற்றவை என்னன்னு தெரியுமா..?

2021ல் வெளியாகி பெரிய கவனம் குவித்த கொரிய மொழி சீரிஸ் Squid Game. இதை மையமாக வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவாக `Squid Game: The Challenge’ஐ உருவாக்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வெற்றியாளருக்கான பரிசுத்தொகை $4.56 மில்லியன்

1. The Village (Tamil) Prime - Nov 24

The Village
The VillagePrime

மிலந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சீரிஸ் `தி வில்லேஜ்'. கௌதம் தனது குடும்பத்துடன் பயணம் செல்லும் போது கார் பிரேக் டவுன் ஆகி கட்டியன் என்ற கிராமத்தில் நின்றுவிடுகிறது. அந்த கிராமம் மிகுந்த ஆபத்து நிறைந்தது, அங்கிருந்து இந்தக் குடும்பம் எப்படி தப்புகிறது என்பதே கதை.

2. Stamped from the Beginning (English) Netflix - Nov 20

Stamped from the Beginning
Stamped from the Beginning Netflix

Roger Ross Williams இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் `Stamped from the Beginnin’. அமெரிக்காவில் நிலவிய நிறவெறி பற்றி Ibram X. Kendi எழுதிய Stamped from the Beginning: The Definitive History of Racist Ideas in America புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஆவணப்படம்.

3. Leo (English) Netflix - Nov 21

Leo
LeoNetflix

Robert Marianetti, Robert Smigel, David Wachtenheim இயக்கியிருக்கும் அனிமேஷன் படம் `Leo’. 74 வயதான லியோ என்ற பல்லி மற்றும் அதன் நண்பனான ஆமையும் ஒரு பள்ளி வகுப்பறையில் அழகுக்காக கண்ணாடித் தொட்டியில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பல வருடங்களாக சிறைப்பட்டிருக்கும் அவர்கள், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.

4. Squid Game: The Challenge (English) Netflix - Nov 22

Squid Game: The Challenge
Squid Game: The ChallengeNetflix

2021ல் வெளியாகி பெரிய கவனம் குவித்த கொரிய மொழி சீரிஸ் Squid Game. இதை மையமாக வைத்து ஒரு ரியாலிட்டி ஷோவாக `Squid Game: The Challenge’ஐ உருவாக்கியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். வெற்றியாளருக்கான பரிசுத்தொகை $4.56 மில்லியன்

5. Unstoppable with NBK ft. Animal team (Telugu) Aha - Nov 24

Unstoppable with NBK ft. Animal team
Unstoppable with NBK ft. Animal teamAha

காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் தர லோக்கல் வெர்ஷன் தான் தெலுங்கில் 2 சீசன்களாக வந்த `Unstoppable with NBK' நிகழ்ச்சி. நடிகர் பாலகிருஷ்ணா தொகுப்பாளராக பல பிரபலங்களை பேட்டி எடுப்பார். இந்த முறை இந்திப் படமான `Animal' படக்குழுவினர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். படு ஜாலியான, கலாட்டாவான பேட்டி கன்ஃபார்ம்.

6. Chatrapathi (Hindi) Prime - Nov 20

Chatrapathi
ChatrapathiPrime

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து 2005ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் `சத்ரபதி’. இந்தப் படத்தை அதே பெயரில் இந்தியில் வி வி விநாயக் இயக்க, பாலிவுட்டில் காலெடுத்து வைத்தார் பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ். சிறு வயதில் தாயை பிரிந்த மகன், பெரிய கேங்க்ஸ்டர் ஆன பிறகு மீண்டும் தாயை சந்திக்கிறார். ஆனால் அவர்தான் மகன் என சொல்ல முடியாத சூழல். இதன் பின் என்ன ஆகிறது என்பதை ஆக்‌ஷன் - செண்டிமெண்ட் கலந்து தெலுங்கில் ஹிட்டடித்தார் ராஜமௌலி. இந்தியில் எப்படி இருக்கிறது என நீங்களே பார்த்துக் கொள்ளவும்.

7. Karumegangal Kalaigindrana (Tamil) Prime - Nov 21

Karumegangal Kalaigindrana
Karumegangal Kalaigindrana Prime

தங்கர்பச்சான் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் மேனன் நடித்த படம் `கருமேகங்கள் கலைகின்றன’. குடும்ப உறவுகள் பற்றியும் அதன் சிக்கல்கள் பற்றியும் பேசும் படம்.

8. Partner (Tamil) Prime - Nov 21

Partner
PartnerPrime

ஆதி, ஹன்சிகா நடிப்பில் உருவான படம் `பார்ட்னட்’. ஒரு பொருளை திருட விஞ்ஞானியின் லேபுக்கு சென்று, அங்கு நடக்கும் விபத்தால், யோகி பாபு பெண்ணாக மாறிவிடுகிறார். அதன் பின் நடக்கும் கலாட்டாக்கள் தான் படத்தின் கதை.

9. Pulimada (Malayalam) Netflix - Nov 23

Pulimada
PulimadaNetflix

ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மலையாளப்படம் `Puli Mada'. வின்சென்ட் தனது திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அதே வேளையில் ஊருக்குள் ஒரு புலி நுழைந்து விடுகிறது. மக்களைக் காப்பாற்ற ஊரடங்கு அமலுக்கு வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

10. Fukrey 3 (Hindi) Prime - Nov 23

Fukrey 3
Fukrey 3Prime

மிக்தீப் சிங் லாம்பா இயக்கத்தில் உருவான இந்திப்படம் `Fukrey 3’. அவர் இயக்கிய முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இதுவும் மூன்று நண்பர்களைப் பற்றியது. அவர்கள் செய்யும் விஷயத்தால் ஏற்படும் பிரச்சனை அதை சரி செய்ய அவர்கள் செய்யும் காமெடிகள் தான் கதை.

11. Leo (Tamil) Netflix - Nov 24

Leo
LeoNetflix

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் `லியோ’. பார்த்திபன் தன் மனைவி குழந்தைகளுடன் அமைதியாக வாழ்கிறார். திடீரென நீ பார்த்திபன் அல்ல, லியோ என்ற பெர்ஸ்பெக்ட்டிவை கிளப்பிவிடுகிறது தாஸ் அண்ட் கோ. இதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

12. Sathiya Sodhanai (Tamil) SonyLIV - Nov 24

Sathiya Sodhanai
Sathiya SodhanaiSonyLIV

ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவான படம் `சத்திய சோதனை’. ஊருக்குள் ஒரு கொலை நடக்கிறது, அந்த வழியாக சென்ற பிரதீப்பின் மீது கொலைப் பழி விழுகிறது. இந்த சிக்கலில் இருந்து பிரதீப் தப்பினாரா இல்லையா என்பதே கதை.

13. Demon (Tamil) aha - Nov 24

Demon
Demonaha

ரமேஷ் இயக்கத்தில் உருவான படம் `டீமன்’. விக்னேஷ் சிவனுக்கு வினோதமான கனவுகள் வருகிறது. அது உளரீதியாக அவனை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.

14. Chaaver (Malayalam) SonyLIV - Nov 24

Chaaver
ChaaverSonyLIV

மலையாளத்தில் Swathanthryam Ardharathriyil, Ajagajantharam படங்களை இயக்கிய தினு பாப்பச்சன் இயக்கத்தில் வந்த படம் `Chaaver'. அரசியல்வாதிகளுக்காக பல குற்றங்களை செய்யும் ஒரு கும்பல், அதனை துரத்தும் காவல்துறை இதுவே படத்தின் கதைக்களம்.

15. Gran Turismo (English) Netflix - Nov 25

Gran Turismo
Gran TurismoNetflix

Neill Blomkamp இயக்கத்தில் உருவான படம் `Gran Turismo'. உலகின் மிகப் பணக்கார விளையாட்டான ரேஸ் கார் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவனைப் பற்றிய கதை. ஆர்ச்சி வீடியோ கேமான Gran Turismoன் தீவிரமான ரசிகர். வீடியோவில் விளையாடியதை, நிஜமாக ஆட ஒரு வாய்ப்பு அவனுக்கு வருகிறது. விளையாட்டில் வென்றான இல்லையா என்பதே கதை.

16. Kaathal - The Core (Malayalam) - Nov 23

Kaathal - The Core
Kaathal - The Core

The Great Indian Kitchen படம் மூலம் கவனம் ஈர்த்த ஜோ பேபி, தற்போது இயக்கியிருக்கும் மலையாளப்படம் `Kaathal - The Core'. மம்மூட்டி - ஜோதிகா லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். மேத்திவ் தனது வார்டில் நடக்கும் தேர்தலில் போட்டியிட தயாராகிறார். அப்போது கிளம்பும் ஒரு பிரச்சனை அவரை திணறடிக்கிறது. அது என்ன என்பதே படம்.

17. 80s Buildup (Tamil) - Nov 24

80s Buildup
80s Buildup

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள படம் `80s பில்ட் அப்’. சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஃபேண்டஸி காமெடி படம் இது. சாவு வீட்டில் நிகழும் காமெடி + ஃபேண்டசி எல்லாம் தான் கதை.

18. Kuiko (Tamil) - Nov 24

Kuiko
Kuiko

ஆண்டவன் கட்டளை படத்தின் கதாசிரியர் அருள்செழியன் இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் `குய்கோ’. துபாயில் வேலை பார்க்கும் நாயகனின் தாய் இறந்துவிட, அவர் ஊருக்கு திரும்பும் வரை உடலை ஐஸ் பாக்ஸில் வைக்கிறார்கள். இதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

19. Joe (Tamil) - Nov 24

Joe
Joe

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா, பவ்யா நடித்திருக்கும் படம் `ஜோ’. கல்லூரியில் நடக்கும் ஒரு காதல் கதை. அந்தக் காதலில் என்ன பிரச்சனை வருகிறது? சரியானதா இல்லையா என்பதெல்லாம் தான் படம்.

20. Locker (Tamil) - Nov 24

Locker
Locker

ராஜசேகர் & யுவராஜ் கண்ணன் இயக்கியிருக்கும் படம் `லாக்கர்’. ஜனா, கதிர், வெங்கட் பல ஏமாற்று வேலைகள் செய்து பணம் பார்ப்பவர்கள். ஜனாவுக்கு ஒரு பெண் மீது காதல் வந்த பிறகு எல்லாம் தலைகீழாகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதே படம்.

21. Kattil (Tamil) - Nov 24

Kattil
Kattil

ஈ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கட்டில்’. படத்தின் கதை கட்டிலை மையப்படுத்தி சில விஷயங்களை பேச இருக்கிறது.

22. Sila Nodigalil (Tamil) - Nov 24

Sila Nodigalil
Sila Nodigalil

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சில நொடிகளில்’. ராஜ் தனது மனைவிக்குத் தெரியாமல், மாயா என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். திடீரென மாயா மர்மமான முறையில் இறந்து விட, அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

23. Devil: The British Secret Agent (Telugu) - Nov 24

Devil: The British Secret Agent
Devil: The British Secret Agent

நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Devil: The British Secret Agent'. 1945ல் பிரிட்டிஷ் இந்தியாவில் நடக்கும் கதை. பிரிட்டிஷின் ரகசிய ஏஜெண்ட் தான் டெவில். அவருக்கு ஒரு மர்மத்தை தீர்க்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது. அதை அவர் செய்தாரா இல்லையா என்பதே படம்.

24. Aadikeshava (Telugu) - Nov 24

Aadikeshava
Aadikeshava

பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ஸ்ரீ லீலா நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Aadikeshava’. காதல், குடும்பம் என ஜாலியாக வாழும் இளைஞன் பாலு. ஒரு பிரச்சனை வரவே ஊரில் பவர்ஃபுல்லான ஆளை எதிர்த்து நிற்கிறார். அதன் பின் என்ன என்பதே கதை.

25. Kotabommali PS (Telugu) - Nov 24

Kotabommali PS
Kotabommali PS

தேஜா மர்னி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Kotabommali PS'. மூன்று காவலதிகாரிகள் ஒரு கொலைக் குற்றத்தில் சிக்க வைக்கப்படுகிறார்கள். இந்தக் கொலையை நாங்கள் செய்யவில்லை என அவர்கள் நிரூபித்தார்களா? இல்லையா? என்பதே கதை.

26. Adrishya Jalakangal (Malayalam) - Nov 24

Adrishya Jalakangal
Adrishya Jalakangal

டொவினோ தாமஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Adrishya Jalakangal’. மனநல காப்பகத்தில் இருந்து வெளியே வரும் இளைஞன், தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு பிணவறையில் நைட் வாட்ச்மேனாக வேலையும் கிடைக்கிறது. அங்கு அவருக்கு நிகழும் அமானுஷ்ய விஷயங்கள் தான் கதை.

27. Philip's (Malayalam) - Nov 24

Philip's
Philip's

ஆல்ஃப்ரெட் குரியன் ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Philip's'. ஃபிலிப்ஸ் குடும்பத்தில் சந்தோஷத்தை குலைக்கும் ஒரு சம்பவம் நடக்கிறது. அதிலிருந்து அந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே கதை.

28. Rajni (Malayalam) - Nov 24

Rajni
Rajni

வினில் சர்க்காரியா இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `Rajni’. தமிழில் `அவள் பெயர் ரஜ்னி’ என டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. நவீன் மற்றும் கௌரி ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பிக்க ரஜ்னி யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

29. Swathi Mutthina Male Haniye (Kannada) - Nov 24

Swathi Mutthina Male Haniye
Swathi Mutthina Male Haniye

கன்னடத்தில் Ondu Motteya Kathe, Garuda Gamana Vrishabha Vahana படங்களை இயக்கிய ராஜ் பி ஷெட்டி இப்போது இயக்கியுள்ள படம் `Swathi Mutthina Male Haniye’. இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு கவுன்சிலிங் செய்பவர் பெரேர்னா. அனிகேத் என்பவர் அவருக்கு அறிமுகமாகிறார். அதன் பின் அவர்களின் ரிலேஷன்ஷிப் என்னவாகிறது என்பதே கதை.

30. Farrey (Hindi) - Nov 24

Farrey
Farrey

நெட்ஃப்ளிக்ஸில் பிரபலமான இந்தி தொடர் Jamtaraவை இயக்கிய சோமேந்த்ர பதி இயக்கியுள்ள இந்திப்படம் `Farrey’ 2017ல் வெளியான தாய் மொழிப் படமான `Bad Genius' ரீமேக் தான் Farrey என சொல்லப்படுகிறது. நியாதி ஒரு புத்திசாலி மாணவி. அவளுக்கு மிகப் பெரிய பள்ளியில் சேரும் வாய்ப்பு அமைகிறது. அங்கு படிப்பு ஏறாத பணக்கார மாணவர்கள் சிலர், பரீட்சையில் பிட் அடிக்க நியாதியிடம் பிசினஸ் பேசுகிறார்கள். அவளும் அதை ஏற்றுக் கொள்ள, பின்னர் நடப்பவை என்ன என்பதே கதை. சல்மான் கானின் சகோதரி மகள் அலிஸ் அக்னிஹோத்ரி தான் படத்தில் நியாதி ரோலில் நடித்து சினிமாவில் களம் இறங்கியிருக்கிறார்.

31. Manush - Child of Destiny (Bengali) - Nov 24

Manush - Child of Destiny
Manush - Child of Destiny

பெங்கால் சூப்பர் ஸ்டார் ஜீத் நடித்திருக்கும் பெங்காலி படம் `Manush - Child of Destiny'. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் விற்பவராக மாறும் சூழல் ஏற்படுகிறது. இதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

32. Wish (English) - Nov 24

Wish
Wish

Tarzan, Frozen போன்ற படங்களை இயக்கிய Chris Buck உடன் இணைந்து Fawn Veerasunthorn இயக்கியிருக்கும் படம் `Wish’. ரோசாஸ் கிங்டமில் வசிக்கும் ஆஷாவுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது, அதை வைத்து ஒரு ஆபத்தை எப்படி தடுக்கிறர் என்பதே கதை.

33. Napoleon (English) - Nov 24

Napoleon
Napoleon

Alien, Blade Runner, Gladiator, American Gangster, Robin Hood, The Martian எனப் பல புகழ்பெற்ற படங்களை இயக்கிய Ridley Scott இயக்கியிருக்கும் படம் `Napoleon '. பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் பயோ பிக்காக உருவாகியிருக்கிறது. இதில் நெப்போலியனாக Joaquin Phoenix நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com