Manjummel Boys
Manjummel BoysManjummel Boys

Manjummel Boys | பர்த்மார்க் | ரணம் | இந்த வார OTT தியேட்டர் லிஸ்ட் இதோ..!

சில வாரங்கள் கழித்து இந்த வாரம் நிறைய படங்கள், ஓடிடிக்கள்..!

1. Constellation (English) Apple TV + - Feb 21

Constellation
ConstellationApple TV

Michelle MacLaren இயக்கியிருக்கும் சீரிஸ் `Constellation’. விண்வெளி ஆராய்ச்சியாளரான ஜோ, ஸ்பேஸூக்கு சென்று பூமி திரும்புகிறார். வந்ததும் தான், வாழ்வில் பல விஷயங்களை இழந்திருப்பது புரிகிறது. அவற்றின் பின்னால் செல்லும் ஜோவுக்கு புரிவது என்ன? என்பதே கதை.

2. Will Trent S2 (English) Hotstar - Feb 21

Will Trent S2
Will Trent S2 Hotstar

சென்ற வருடம் வெளியாகி வரவேற்பை பெற்ற சீரிஸ் `Will Trent'. அதன் இரண்டாவது சீசன் தற்போது தயாராகியிருக்கிறது. ஸ்பெஷல் ஏஜெண்ட் வில் ட்ரெண்ட், சென்ற சீசனில் தனக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது எனப் போராடினார். இந்த பாகம் என்ன என்பது வந்தால் தான் தெரியும்.

3. Avatar the Last Airbender (English) Netflix - Feb 22

Avatar the Last Airbender
Avatar the Last Airbender Netflix

2005-2008 வரை நிக்கலோடின் சேனலில் வந்த அனிமேஷன் தொடர் `Avatar the Last Airbender' இது 2010ல் நை ஷ்யாமலன் இயக்கத்தில் படமாகவும் வந்தது. இப்போது லைவ் ஆக்‌ஷன் தொடராக அதே பெயரில் வருகிறது. அவதார் என்ற சிறுவனுக்கு பூமி, நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பூதங்களை அடக்கி ஆளும் சக்தி உண்டு. அவன் எப்படி பூமியை தீய சக்தியிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பதே கதை.

4. Poacher (Hindi) Prime - Feb 23

Poacher
PoacherPrime

2019ல் வெளியான `Delhi Crime’ சீரிஸை இயக்கிய ரிச்சி மெஹ்தா, தற்போது இயக்கியுள்ள சீரிஸ் `Poacher’. வன காவலர்கள், தன்னார்வளர்கள், போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் சில சாமானியர்கள் இணைந்து, யானை தந்தங்களை கடத்தும் குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த போராடுவதே கதை. அலியா பட் இந்த சீரிஸை தயாரித்திருக்கிறார்.

5. Messi's World Cup: The Rise of a Legend (English) Apple TV + - Feb 21

Messi's World Cup: The Rise of a Legend
Messi's World Cup: The Rise of a LegendApple TV

கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பற்றிய ஆவணத்தொடர் `Messi's World Cup: The Rise of a Legend’. மெஸ்ஸி, தனது பயணத்தப் பற்றியும், விளையாட்டு பற்றியும் என பல விஷயங்கள் இதில் பகிர்ந்துள்ளார்.

6. Can I Tell You A Secret? (English) Netflix - Feb 21

Can I Tell You A Secret?
Can I Tell You A Secret?Netflix

ஆன்லைன் ஸ்டாக்கிங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை, மூன்று பெண்கள் கூறும் ஆவணப்படம் `Can I Tell You A Secret?’.

7. The Indrani Mukerjea Story: Buried Truth (Hindi) Netflix - Feb 23

The Indrani Mukerjea Story: Buried Truth
The Indrani Mukerjea Story: Buried TruthNetflix

ஜாலி ஜோசஃப் ஆவணத்தொடரை தொடர்ந்து, அடுத்த க்ரைம் ஸ்டோரியாக நெட்ஃப்ளிக்ஸ் எடுத்திருப்பது `The Indrani Mukerjea Story: Buried Truth'. 25 வயதான ஷேனா போரா காணமல் போனதன் பின்னணியில் இருந்த மர்மங்களை சொல்கிறது இந்த ஆவணத்தொடர்.

8. Hideo Kojima - Connecting Worlds (English) Hotstar - Feb 23

Hideo Kojima - Connecting Worlds
Hideo Kojima - Connecting WorldsHotstar

பிரபல கேம் டிசைனர் Hideo Kojima பற்றிய ஆவணப்படம் `Hideo Kojima - Connecting Worlds'. வீடியோ கேமுக்கான உலகை கட்டமைப்பதில் உள்ள சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.

9. Mea Culpa (English) Netflix - Feb 23

Mea Culpa
Mea CulpaNetflix

Tyler Perry இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Mea Culpa'. க்ரிமினல் லாயர் மியா, கொலை கேஸில் சிக்கிய ஒரு ஆர்டிஸ்ட்டுக்காக வாதாட ஒப்புக் கொள்கிறார். அதன் பின் நடப்பவையே கதை.

10. Singapore Saloon (Tamil) Prime - Feb 23

Singapore Saloon
Singapore SaloonPrime

கோகுல் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்த படம் `சிங்கப்பூர் சலூன்’. படிப்பில் கில்லி, நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு இருந்தும், தன் மனதுக்குப் பிடித்த சிகை அலங்கார நிபுணராக ஆசைப்படும் ஒரு இளைஞன் பற்றிய கதை. அவன் சந்திக்கும் சவால்கள் என்ன? அவனது கனவு நிறைவேறியதா? என்பதே கதை.

11. Malaikottai Vaaliban (Malayalam) Hotstar - Feb 23

Malaikottai Vaaliban
Malaikottai VaalibanHotstar

லிஜோ ஜோஷ் பெல்லிஷெரி இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் `Malaikottai Vaaliban’. பீரியட் பின்னணியில், மக்களைக் கப்பாற்றும் ஒரு வீரனைப் பற்றிய கதையாக உருவானது.

12. Saw X (English) Lionsgate Play - Feb 23

Saw X
Saw X Lionsgate Play

Saw VI, Saw 3D, Jessabelle படங்களை இயக்கிய Kevin Greutert இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான படம் `Saw X’. ஹாலிவுட் இந்தியன் தாத்தா John Kramer கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதை குணப்படுத்தும் சிகிச்சை எங்களிடம் உள்ளது என ஒரு நிறுவனம், ஜான் தலையில் மிளகாய் அரைத்து பணத்தை அபேஸ் செய்கிறது. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும், அந்த நிறுவனத்தினரை போட்டு பொளப்பதே கதை.

13. Manjummel Boys (Malayalam) - Feb 22

Manjummel Boys
Manjummel Boys

Jan. E. Man படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சிதம்பரம் பொடுவல் தற்போது இயக்கியுள்ள படம் `Manjummel Boys'. ஒரு நண்பர்கள் குழு குணா குகையில் சிக்கிக் கொண்ட நண்பனை மீட்க செல்கிறார்கள். ஆனால் அங்கு நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அவர்களை ஆபத்தில் சிக்க வைக்கிறது. பிறகு என்ன ஆனது என்ற சர்வைவல் த்ரில்லரே படம்.

14. Birthmark (Tamil) - Feb 23

Birthmark
Birthmark

விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்ணா நடித்துள்ள படம் `Birthmark’. ஆறு மாத கர்ப்பிணியான தன் மனைவியை ஒரு பிரத்யேக இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் டேனியல். அங்கு நிகழும் சம்பவங்களே கதை.

15. Ranam (Tamil) - Feb 23

Ranam
Ranam

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ்வதி நடித்துள்ள படம் `ரணம்’. வைபவின் 25வது படம் இது. நகரத்தில் நிகழும் கொலைகளை விசாரிக்கிறது போலீஸ். அந்த விசாரணைக்கு உதவும் ஹீரோ, கண்டுபிடிப்பவை என்ன? குற்றவாளியை பிடிக்க முடிந்ததா? என்பதே கதை.

16. Operation Laila (Tamil) - Feb 23

Operation Laila
Operation Laila

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்து உருவாகியிருக்கும் படம் `ஆப்ரேஷன் லைலா’. பள்ளி ஒன்றில் அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. இதற்கு காரணம் பேய் என சொல்லப்பட, அது யாருடைய ஆத்மா, அவருக்கு என்ன நடந்தது போன்றவற்றை சொல்கிறது படம்.

17. Pambattam (Tamil) - Feb 23

Pambattam
Pambattam

வி.சி வடிவுடையான் இயக்கத்தில் நான்கு வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட படம் `பாம்பாட்டம்’. இப்போது ஒரு வழியாக படம் வெளியீட்டுக்கு தயாராகியிருக்கிறது. மல்லிகா ஷெராவத், ஜீவன் நடிப்பில் ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கிறது.

18. Byri (Tamil) - Feb 23

Byri
Byri

ஜான் க்ளாடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `பைரி’. புறா ரேஸை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம்.

19. Vithaikaaran (Tamil) - Feb 23

Vithaikaaran
Vithaikaaran

வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்திருக்கும் படம் `வித்தைக்காரன்’. ஏர்போர்ட்டில் சிக்கிக் கொண்ட 25 கோடி மதிப்புள்ள வைரத்தை மீட்கும் பொறுப்பு ஹீரோவுக்கு வருகிறது. அதை ஹீரோ செய்து முடித்தான என்பதே கதை.

20. Glassmates (Tamil) - Feb 23

Glassmates
Glassmates

சரவண சக்தி, அங்கையர்கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `க்ளாஸ்மேட்’. மதுவுக்கு அடிமையான இருவர் செய்யும் கலாட்டாக்களே கதை.

21. Ninaivellam Neeyada (Tamil) - Feb 23

Ninaivellam Neeyada
Ninaivellam Neeyada

ஆதிராஜன் இயக்கத்தில் பிரஜின் நடித்திருக்கும் படம் `நினைவெல்லாம் நீயடா’. பள்ளியில் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் வாழும் இளைஞனைப் பற்றிய கதை.

22. Siddharth Roy (Telugu) - Feb 23

Siddharth Roy
Siddharth Roy

யஷ்வி இயக்கத்தில் தீபக் சரோஜ் நடித்திருக்கும் படம் `Siddharth Roy'. காதல் - காமம் இரு உணர்வுகளில் கட்டுப்பாடு இல்லாத ஒரு இளைஞன் சந்திக்கும் சிக்கல்களே படத்தின் கதை.

23. Sundaram Master (Telugu) - Feb 23

Sundaram Master
Sundaram Master

கல்யாண் சந்தோஷ் இயக்கியிருக்கும் படம் `Sundaram Master'. அரசுபள்ளி ஆசிரியர் மிர்யலமெட்டா என்ற கிராமத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்கிறது படம்.

24. Crakk (Hindi) - Feb 23

Crakk
Crakk

ஆதித்யா தத் இயக்கத்தில் வித்யுத் ஜம்வால், அர்ஜூன் ராம்பால், எமி ஜாக்சன் நடித்துள்ள படம் `Crakk’. சித்தார்த் என்ற இளைஞன், மிக ஆபத்துகள் நிறைந்த போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறான். அதில் அவர் வென்றாரா இல்லையா என்பதே கதை.

25. Article 370 (Hindi) - Feb 23

Article 370
Article 370

ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் யாமி கௌதம், ப்ரியாமணி நடித்துள்ள படம் `Article 370'. தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட நினைக்கும் அதிகாரி ராஜேஷ்வரி, ஸூனி ஹக்சர் என்ற ஏஜெண்டை ஒரு மிஷனுக்காக அனுப்புகிறார். அதில் நடக்கும் ஆக்‌ஷன்களே படம்.

26. All India Rank (Hindi) - Feb 23

All India Rank
All India Rank

வருண் க்ரோவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `All India Rank’. 17வயது மாணவன் விவேக் ஐஐடி தேர்வு எழுத தயாராகிறான். அதில் அவன் சந்திக்கும் சிக்கல்களை பேசுகிறது படம்.

27. Demon Slayer: Kimetsu no Yaiba - To the Hashira Training (Japanese) - Feb 23

Demon Slayer: Kimetsu no Yaiba - To the Hashira Training
Demon Slayer: Kimetsu no Yaiba - To the Hashira Training

அனிமி உலகைக் கலக்கும் Demon Slayerன் புதிய திரைப்படம் `Demon Slayer: Kimetsu no Yaiba - To the Hashira Training’. Haruo Sotozaki இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

28. Mean Girls (English) - Feb 23

Mean Girls
Mean Girls

Samantha Jayne மற்றும் Arturo Perez Jr இயக்கியுள்ள படம் `Mean Girls'. கேடி ஹீரோன் புதிய பள்ளியில் சேர்கிறார். அங்கு ஒருவரைப் பார்த்து காதல் வயப்பட, துவங்குகிறது பிரச்சனை. அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை. தெலுங்கில் மகேஷ்பாபுவின் `பிரம்மோத்சவம்’, தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷின் `பூமிகா’ ஆகிய படங்களில் நடித்த அவந்திகா இப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com