The Fall Guy | Migration | Aranmanai 4
The Fall Guy | Migration | Aranmanai 4 Canva

Malayalee From India | The Fall Guy | அரண்மனை 4... இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட்..!

Deadpool 2, Bullet Train படங்களை இயக்கிய David Leitch தற்போது இயக்கியுள்ள படம் `The Fall Guy'.

The Veil (English) Hotstar - Apr 30

The Veil
The Veil Hotstar

Steven Knight எழுத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `The Veil’. இரண்டு பெண்களின் உண்மை - பொய்களை வைத்து நகரும் கதை. ஒரு பெண்ணிடம் இருக்கும் ரகசியத்தை, இன்னொரு பெண் அம்பலப்படுத்த வேண்டும். இல்லை என்றால் பல உயிர்களுக்கு ஆபத்து. இறுதியில் என்ன ஆனது என்பதே கதை. முதல் இரு எப்பிசோடுகள் ஏப்ரல் 30லும், அதன் பின் வாரம் ஒரு எப்பிசோட் எனவும் வெளியாகவுள்ளது.

Heeramandi: The Diamond Bazaar (Hindi) Netflix - May 1

Heeramandi: The Diamond Bazaar
Heeramandi: The Diamond BazaarNetflix

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Heeramandi: The Diamond Bazaar', சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்தில் ஒரு உல்லாச விடுதியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. அதனுள் நடக்கும் அரசியல், துரோகம் எனப் பலதும் சேர்ந்த கதை.

Hacks S3 (English) Jio Cinema - May 3

Hacks S3
Hacks S3 Jio Cinema

Jean Smart நடித்துள்ள சீரிஸ் `Hacks’ ஏற்கெனவே இரு சீசன்கள் வெளியான நிலையில் இப்போது மூன்றாவது சீசன் வெளியாகிறது. ஸ்டாண்டப் காமெடி ஸ்டார் Deborah Vanceவு பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது.

The Idea of You (English) Prime - May 2

The Idea of You
The Idea of YouPrime

Anne Hathaway மற்றும் Nicholas Galitzine நடித்துள்ள படம் `The Idea of You'. சோலன்ஸ் நாற்பது வயதான சிங்கிள் மதர். அவருக்கு 24வயது இளைஞன் மேல் வரும் காதல், அதைத் தொடந்து நடக்கும் நிகழ்வுகள் இதுதான் கதை.

DeAr (Tamil) Netflix - Apr 28

DeAr
DeArNetflix

`செத்தும் ஆயிரம் பொன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் `டியர்’. புதுமணத் தம்பதி இடையே குறட்டைப் பிரச்சனை பூகம்பமாக வெடிக்கிறது. அது எப்படி சரியானது என்பதே கதை.

Avatara Purusha 2 (Kannada) Prime - Apr 30

Avatara Purusha 2
Avatara Purusha 2Prime

சிம்பிள் சுனி இயக்கத்தில் உருவான படம் `Avatara Purusha 2’. வழக்கம் போல் ஒரு ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

Migration (English) Jio Cinema - May 1

Migration
MigrationJio Cinema

Illumination நிறுவனம் தயாரித்த அனிமேஷன் படம் `Migration'. வாத்து குடும்பம் ஒன்று, ஒரு சுற்றுலா செல்கிறது. பயணத்தில் அந்த குடும்பம் சந்திக்கும் விஷயங்களே படம்.

Wonka (English) Jio Cinema - May 3

Wonka
WonkaJio Cinema

Charlie and the Chocolate Factory கதையில் வரும் கற்பனைக் கதாப்பாத்திரமான Willy Wonka பற்றிய படம் தான் `Wonka’. பதின் வயதுக்காரனான Willy எப்படி ஜீனியஸ் சாக்லேட் மேக்கர் Wonka ஆனார் என்பதைச் சொல்லும் படம்.

Malayalee From India (Malayalam) - May 1

Malayalee From India
Malayalee From India

`Jana Gana Mana' படத்தின் மூலம் கவனம் பெற்ற டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி நடித்துள்ள படம் `Malayalee From India'. கோபி வேலையில்லாமல் சுற்றும் பொறுப்பற்ற இளைஞன். ஒரு கட்டத்தில் ஊரைவிட்டு வெளியேறும் சூழல் அவனுக்கு உருவாகிருறது. அது என்ன என்பதே கதை.

படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்யுங்கள்.

Aranmanai 4 (Tamil) - May 3

Aranmanai 4
Aranmanai 4

சுந்தர் சியின் ”கஷ்டம் வரும் போது கபால்னு தொறந்து பாரு” என்ற பெட்டி தான் `அரண்மனை’ படவரிசை. இந்த நாலாவது பேய் வேட்டையின் சீசனில் தமன்னா, ராஷி கண்ணாவுடன் கைகோர்த்து கிளம்பியிருக்கிறார்.

Kurangu Pedal (Tamil) - May 3

Kurangu Pedal
Kurangu Pedal

மதுபானக்கடை என்ற தரமான படத்தைக் கொடுத்த கமலக்கண்ணன், இப்போது இயக்கியுள்ள படம் `குரங்கு பெடல்’. தந்தை - மகன் - சைக்கிள் இம்மூன்றையும் வைத்து ஒரு கதையை சொல்ல இருக்கிறார்.

The Proof (Tamil) - May 3

The Proof
The Proof

சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `தி ப்ரூஃப்’. ஒரு பெண்ணின் கொலை வழக்கு, போதைப் பொருள் கடத்தல் இரண்டும் இணையும் புள்ளி எது என கண்டுபிடிக்கப்பட்டதா? என்பதே கதை.

Akkaran (Tamil) - May 3

Akkaran
Akkaran

எம். எஸ். பாஸ்கர் லீட் ரோலில் நடித்துள்ள படம் `அக்கரன்’. மல்யுத்த வீரர் வீரபாண்டியின் மகள், இரு மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறாள். இதனை எதிர்த்து வீரபாண்டி செய்வதென்ன என்பதே கதை.

Ninnu Vilayadu (Tamil) - May 3

Ninnu Vilayadu
Ninnu Vilayadu

தினேஷ் மாஸ்டர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நின்னு பேசும்’. பரிசாக வந்த மாடுகள் காணாமல் போக, அவற்றை தேடும் கணவன் மனைவி என்ன செய்தார்கள் என்பதே கதை.

Prasanna Vadanam (Telugu) - May 3

Prasanna Vadanam
Prasanna Vadanam

அர்ஜூன் இயக்கத்தில் சுஹாஸ் நடித்திருக்கும் படம் `Prasanna Vadanam'. மனித முகங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற வினோதமான Face Blindness பிரச்சனை உள்ள ஹீரோ, ஒரு கொலை வழக்கின் சாட்சியாகிறார். இதன் பின் நடக்கும் திருப்பங்களே படம்.

Aa Okkati Adakku (Telugu) - May 3

Aa Okkati Adakku
Aa Okkati Adakku

மல்லி அன்கம் இயக்கத்தில் அல்லரி நரேஷ் நடித்துள்ள படம் `Aa Okkati Adakku'. கல்யாணமே அமையாமல் இருக்கும் ஒரு இளைஞனுக்கு, ஒரு பெண் பரிட்சயம் ஆகிறாள். அவர்களது உறவு கல்யாணத்தில் முடிகிறதா என்பதே கதை.

Sabari (Telugu) - May 3

Sabari
Sabari

அனில் இயக்கத்தில் வரலட்சுமி நடித்திருக்கும் படம் `Sabari’. தனது கணவரை விட்டுப் பிரிந்து வந்த பின் சஞ்சனா தெரிந்து கொள்ளும் உண்மைகளும், அதைத் தொடர்ந்து அவள் எடுக்கும் முயற்சிகளுமே படம்.

Nadikar (Malayalam) - May 3

Nadikar
Nadikar

லால் ஜூனியர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் `Nadikar’. எதிர்பாராத விதமாக சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆகிவிடும் ஒருவனின் பயணத்தைப் பற்றி சொல்லும் படம்.

Exhuma (Korean) - May 3

Exhuma
Exhuma

Jang Jae-hyun இயக்கியுள்ள படம் `Exhuma’. கல்லரை ஒன்றை நகர்த்தும் பணியின் போது நடக்கும் அசம்பாவிதமும், அதன் பின் நடக்கும் ஹாரர்களுமே கதை.

Tarot (English) - May 3

Tarot
Tarot

Spenser Cohen, Anna Halberg இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Tarot’. ஒரு நண்பர்கள் குழு பிரச்சனைக்குரிய விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார்கள். அதில் சில விதிகளை மீற அதன்பின் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.

The Fall Guy (English) - May 3

The Fall Guy
The Fall Guy

Deadpool 2, Bullet Train படங்களை இயக்கிய David Leitch தற்போது இயக்கியுள்ள படம் `The Fall Guy'. சினிமா ஸ்டண்ட் மேன் ஒருவருக்கு, காணாமல் போன ஹீரோவை கண்டுபிடிக்கும் பொறுப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து நடக்கும் ஆக்‌ஷன்களே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com