king of kotha
king of kothaCollage

இத்தனை படம் வந்தா என்னதான் பண்றது..?

இந்த வாரத்தில் அதிக அளவிலான படங்களில் வெளியாகின்றன. ஆனால், அவற்றுள் குறிப்பிட்டு சொல்லிக்கொள்ளும் படி இருப்பது மிகக் குறைவே..!

Ahsoka (English) Hotstar - Aug 23

Ahsoka
AhsokaDisney Hotstar

ஸ்டார் வார்ஸ் பட வரிசையின் ஸ்பின் ஆஃபாக உருவாகியிருக்கிறது Ahsoka. கேலக்ஸிக்கு வரும் ஆபத்துகளை முன்னாள் Jedi Knight எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

Who is Erin Carter? (English) Netflix - Aug 24

Who is Erin Carter?
Who is Erin Carter?Netflix

சூப்பர் மார்கெட் ஒன்றில் ஒரு கொள்ளை நடக்கிறது. அதில் ஒரு கொள்ளையன், அங்கிருந்த எரின் கார்ட்டரை பார்த்து உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே எனக் கூறுகிறான். உண்மையில் எரின் கார்டர் யார் என்பதே `Who is Erin Carter?’ சீரிஸ் கதை.

Aakhri Sach (Hindi) Hotstar - Aug 25

Aakhri Sach
Aakhri SachHotstar

தமன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `Aakhri Sach'. ஒரு குடும்பத்தை பற்றிய ரகசியங்கள் கண்டுபிடிக்கப்படும் போது என்ன பிரச்சனைகள் கிளம்புகிறது என்பதே கதை.

Killer Book Club (Spanish) Netflix - Aug 25

Killer Book Club
Killer Book ClubNetflix

Carlos Alonso-Ojea இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழிப் படம் `Killer Book Club’. ஹாரர் விரும்பி நண்பர்கள் எட்டு பேர், அவர்கள் உயிருக்குப் போராடும் நிலை வரும் போது என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

You Are So Not Invited to My Bat Mitzvah (English) Netflix - Aug 25

You Are So Not Invited to My Bat Mitzvah
You Are So Not Invited to My Bat MitzvahNetflix

Sammi Cohen இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `You Are So Not Invited to My Bat Mitzvah'. ஸ்டேஸி தனது Bat Mitzvahவிற்கு தயாராகிறார். ஆனால் அவளுடைய திட்டமெல்லாம் குளறுபடியாகி சொதப்புகிறது. அதன் பின் என்ன ஆகிறது என்பதை நகைச்சுவையாக சொல்கிறது படம். கூடவே ஆடம் சேண்ட்லரும் தன்னுடைய பங்கிற்கு காமெடி சேர்த்திருக்கிறார்.

Thalainagaram 2 (Tamil) Prime - Aug 20

Thalainagaram 2
Thalainagaram 2 Prime

சுந்தர் சி நடிப்பில் துரை இயக்கிய படம் `தலைநகரம் 2’. பிரச்சனைகளில் இருந்து விலகி வாழ நினைக்கிறார் ரைட்டு. ஆனால் மூன்று ரௌடிகள் அவரை அப்படி வாழ விடாமல் தொல்லை தருகிறார்கள். அதன் பிறகு என்ன ஆனது என்ற இரத்தக் களரி தான் படம்.

Archar & Co (Kannada) Prime - Aug 22

Archar & Co
Archar & Co Prime

சிந்து ஸ்ரீனிவாச மூர்த்தி இயக்கத்தில் உருவானா கன்னடப்படம் `Archar & Co'. சுமா மற்றும் அவரது ஒன்பது உடன் பிறந்த சகோதர சகோதரிகள் பற்றிய கதையை காமெடி கலந்து சொல்கிறது படம்.

Marlowe (English) Prime - 20

Marlowe
MarlowePrime

நீல் ஜோர்டன் இயக்கத்தில் லியம் நீல்சன் நடித்த படம் `Marlowe'. பே நகரத்தில் 1930களில் நடக்கும் கதை, டிடெக்டிவ் ஒருவருக்குக் கொடுக்கப்படும் வேலை, அதன் மூலம் அவர் தெரிந்து கொள்ளும் ரகசியங்கள் என நகரும்.

Bro (Telugu) Netflix - Aug 25

Bro
BroNetflix

தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய `விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவானது `Bro’. பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இணைந்து நடித்திருந்தார்கள். வாழ்வில் எதற்கும் நேரமில்லை நேரமில்லை என ஓடிக் கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்வில், அந்த நேரமே ஒரு கதாபாத்திரமாக நுழைந்தால்? எப்படியிருக்கும் என்பதே கதை.

Baby (Telugu) Aha - Aug 25

Baby
BabyAha

சாய் ராஜேஷ் இயக்கத்தில் உருவான தெலுங்குப் படம் `Baby'. விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோ. ஒரே பெண்ணை காதலிக்கும் இருவர் என்ற முக்கோண காதல் கதைதான். பள்ளி வரை ஒருவரைக் காதலிக்கும் வைஷ்ணவிக்கு, கல்லூரி சென்றதும் இன்னொருவர் மீது ஈர்ப்பு வருகிறது. இது என்ன சிக்கலைக் கொடுக்கிறது என்பதே கதை.

Kurukkan (Malayalam) manoramaMAX - Aug 25

Kurukkan
KurukkanmanoramaMAX

சீனிவாசன், வினீத் சீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்த மலையாளப்படம் Kurukkan. சுயநலமான காவலதிகாரி தனது பதவி உயர்வுக்காக செய்யும் ஒரு காரியம், அவருக்கே தலை வலியாக வந்து முடிகிறது. அதனைத் தொடர்ந்து நடக்கும் காமெடிகளே படம்.

King Of Kotha (Malayalam) - Aug 24

King Of Kotha
King Of Kotha

துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருக்கும் மலையாளப்படம் `King Of Kotha'. கொத்தா என்ற இடத்தில் நடக்கும் கேங்ஸ்டர் மோதல்கள் தான் படத்தின் கதை.

Partner (Tamil) - Aug 25

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, யோகிபாபு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் `பார்ட்னர்’. ஆதி - யோகிபாபு இருவரும் திருடர்கள், ஒரு சைன்ஸ் லேபிள் திருடப்போகும் போது அங்கி நடக்கும் விஷயத்தால், யோகிபாபு பெண்ணாக (ஹன்சிகா) மாறுகிறார். அதன் பிறகு நடக்கும் காமெடிகளே படம்.

Adiye (Tamil) - Aug 25

G V Prakash Kumar
G V Prakash KumarAdiye

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கௌரி கிஷன் நடித்திருக்கும் படம் `அடியே’. காதலுக்காக யுனிவர்ஸ் விட்டு யுனிவர்ஸ் போகும் ஒரு இளைஞனின் சை-ஃபை ஜர்னி தான் படம்.

Harkara (Tamil) - Aug 25

Harkara
Harkara

ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில் காளிவெங்கட் நடித்திருக்கும் படம் `ஹர்காரா’. தபால் காரர் பற்றிய படமாக துவங்கி, உலகின் முதல் தபால்காரர் பற்றிய ஃப்ளாஷ்பேக் வரை பயணிக்கிறது படம்.

Bedurulanka 2012 (Telugu) - Aug 25

Bedurulanka
Bedurulanka

Clax இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் `Bedurulanka 2012’. 2012 டிசம்பர் 21ம் தேதியோடு உலகம் அழியப்போகிறது என்ற வதந்தியை நம்பி பீதியாகும் ஒரு கிராமம். மூட நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஒரு கும்பல். இவற்றுக்கு நடுவே ஹீரோ என்ன செய்கிறார் என்பதே கதை.

Gandeevadhari Arjuna (Telugu) - Aug 25

Gandeevadhari Arjuna
Gandeevadhari Arjuna

பிரவீன் இயக்கத்தில் வருண் தேஜ் நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Gandeevadhari Arjuna’. அர்ஜூனுக்கு, அமைச்சர் ஆதியராஜ் பஹதூரை பாதுகாக்கும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அதற்கு வரும் இடைஞ்சல்கள் என்ன? என்பதே கதை.

Ramachandra Boss and Co (Malayalam) - Aug 25

Ramachandra Boss and Co
Ramachandra Boss and Co

ஹனீஃப் அதேனி இயக்கத்தில் நிவின் பாலி நடித்து தயாரித்திருக்கும் மலையாளப்படம் `Ramachandra Boss and Co'. துபாயில் பெரிய பணக்காரர் ஒருவரிடம் கொள்ளையடிக்க திட்டமிடும் கோமாளி கும்பல் பற்றிய காமெடி கதைதான் படம்.

RDX (Malayalam) - Aug 25

RDX
RDX

Antony Varghese, Shane Nigam, Neeraj Madhav நடித்திருக்கும் மலையாளப்படம் `RDX’. Robert Dony Xavier இந்த மூவரும் ஒரு பழிவாங்கும் படலத்தில் இருக்கிறார்கள். ஏன்? எதற்கு? என்பதுதான் கதை.

Toby (Kannada) - Aug 25

Toby
Toby

ராஜ் பி ஷெட்டி நடித்திருக்கும் கன்னடப் படம் `Toby'. தோபி என்ற மர்மமான மனிதனைப் பற்றிய கதை தான் படம்.

Dream Girl 2 (Hindi) - Aug 25

Ayushmann Khurrana
Ayushmann Khurrana Dream Girl 2

ராஜ் ஷாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குராணா நடித்திருக்கும் இந்திப் படம் `Dream Girl 2'. 2019ல் வெளியான முதல் பாகத்தின் அதே ஃப்ளேவரோடு உருவாகியிருக்கிறது படம். சென்ற பாகத்தில் பெண் குரலில் பேசுவதால் ஹீரோவுக்கு வரும் சிக்கல்களைக் காட்டியிருந்தார்கள். இந்த பாகத்தில் ஒரு புதுப் பிரச்சனை.

Retribution (English) - Aug 25

Liam Neeson
Liam NeesonRetribution

லியம் நீல்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `Retribution'. வங்கிப் பணியாளரான ஹீரோவுக்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு வெடி குண்டு மிரட்டல் வருகிறது. அவர் ஓட்டிக் கொண்டிருக்கும் காரில் பாம் இருக்கிறது, காரை நிறுத்தினாலோ, இறங்கினாலோ வெடித்துவிடும். இதன் பின் என்னகிறது என்பதே பரபர படம்.

Gran Turismo (English) - Aug 25

Gran Turismo
Gran Turismo

Neill Blomkamp இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Gran Turismo'. வீடியோ கேமில் ரேஸ் கார் ஓட்டிக் கொண்டிருந்த ஹீரோ, நிஜ ரேஸ் கார் ஓட்ட விரும்புகிறான். அவனின் விருப்பம் நிறைவேறியதா என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com