latest OTT releases
latest OTT releaseslatest OTT releases

இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

அடுத்த வார லியோ திரைப்படம் வருவதால் இந்த வாரம் திரையரங்குகளில் பெரிய படம் எதுவும் வெளியாகவில்லை.

1. Mathagam P2 (Tamil) Hotstar - Oct 12

Mathagam
MathagamHotstar

பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில் உருவான வெப் சீரிஸ் `மத்தகம்’. படாளம் சேகரை பிடிக்க போலீஸின் திட்டங்களும் முயற்சிகளும் தான் சீரிஸின் களம். சீரிஸின் முதல் பாகம் வந்து பாராட்டப்பட்ட நிலையில், மீதிக் கதையும் வெளியாகவிருக்கிறது.

2. The Fall of the House of Usher (English) Netflix - Oct 12

The Fall of the House of Usher
The Fall of the House of Usher Netflix

Edgar Allan Poe எழுதிய ஹாரர் கதைகள், சீரிஸாக எடுக்கப்பட்டிருப்பதுதான் `The Fall of the House of Usher'. பல திக் திக் திகில் கதைகள் அடங்கிய சீரிஸ் இது.

3. Sultan Of Delhi (Hindi) Hotstar - Oct 13

Sultan Of Delhi
Sultan Of Delhi

Milan Luthria, Suparn Verma இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் Sultan Of Delhi. அர்ஜுன் பாட்டியா, அதிகாரத்தை அடைவதற்காக என்ன எல்லா செய்கிறார் என்பதுதான் கதை.

4. Everybody Loves Diamonds (Italian) Prime - Oct 13

Everybody Loves Diamonds
Everybody Loves Diamonds

Gianluca Maria Tavarelli இயக்கியிருக்கும் இத்தாலிய மொழி சீரிஸ் `Everybody Loves Diamonds’. விலைமதிப்பு மிக்க வைரத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு குழு. அவர்களின் திட்டம் வெற்றியடைந்ததா இல்லையா என்பதுதான் கதை.

5. Goosebumps (English) Hotstar - Oct 13

Goosebumps
Goosebumps

R. L. Stine எழுதிய Goosebumps நாவல் அதே பெயரில் சீரிஸாக உருவாகியிருக்கிறது. ஐந்து மாணவர்கள், அமைதியாய் இருந்த பூதத்தை கிளப்பிவிடுகிறார்கள். அதன் பின் நடக்கும் அமானுஷ்யங்களும், அதைத் தடுக்க முயலும் போராட்டமும் தான் கதை.

6. Big Vape: The Rise and Fall of Juul (English) Netflix - Oct 11

Big Vape: The Rise and Fall of Juul
Big Vape: The Rise and Fall of Juul

R.J. Cutler இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆவணப்படம் `Big Vape: The Rise and Fall of Juul'. வேப் என்றழைக்கப்படும் ஈ சிகரெட் தயாரிப்பு வெற்றியடைந்ததில் இருந்து, பின்பு அதற்கு வரவேற்பு இல்லாமல் தோல்வியடைந்தது வரையிலுமான விஷயங்களை பேசுகிறது இந்த் ஆவணப்படம்.

7. Awareness (Spanish) Prime - Oct 11

Awareness
Awareness

Daniel Benmayor இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழிப் படம் `Awareness’. தனக்கு இருக்கும் சக்திகளை வைத்து சின்ன சின்ன திருட்டுகளை செய்கிறாப் ஒரு பதின் வயது சிறுவன். ஒரு கட்டத்தில் இந்த வேலைகள் எல்லை மீற, அவருக்கு ஆபத்து வருகிறது. அதை எப்படி சமாளிக்கிறான் என்பதே கதை.

8. Once Upon a Star (Thai) Netflix - Oct 11

Once Upon a Star
Once Upon a Star

Nonzee Nimibutr இயக்கியிருக்கும் தாய் மொழிப் படம் `Once Upon a Star'. 1970களில் நடைபெறும் கதை. தாய்லாந்து முழுவதும் ஊர் ஊராக சுற்றி திரைப்படங்களை திரையிடும் ஒரு குழு, அவர்களுக்கு வரும் சிக்கல்கள் என்ன? என்பதுதான் கதை.

9. In My Mother's Skin (Tagalog) Prime - Oct 12

In My Mother's Skin
In My Mother's Skin

Kenneth Dagatan இயக்கத்தில் உருவான டேகலாக் மொழிப் படம் `In My Mother's Skin'. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிலிப்பைன்ஸில் நடக்கும் கதை. மரணப்படுக்கையில் இருக்கும் தனது தாயை காப்பாற்றப் போராடும் மகள் என்ன சிக்கல்களை சந்திக்கிறார் என்பதே படம்.

10. Prema Vimanam (Telugu) Zee5 - Oct 13

Prema Vimanam
Prema Vimanam

Santosh Kata இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Prema Vimanam'. விமானத்தில் பயணிக்க வேண்டும் எனக் கனவுடன் இருக்கும் இரண்டு சிறுவர்கள் ஒருபுறம், அவசரமாக விமானத்தைப் பிடிக்க செல்லும் ஒரு இளம் தம்பதி மறுபுறம். இவர்களின் பாதை ஒன்றோடு ஒன்று குறுக்கிடும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.

11. Past Lives (Korean) Lionsgate Play - Oct 13

Past Lives
Past Lives

Celine Song இயக்கியிருக்கும் கொரிய மொழிப் படம் `Past Lives'. நோரா மற்றும் ஹே சங் இருவரும் குழந்தைப் பருவத்திலிருந்து நண்பர்கள். சூழல் காரணமாக நோராவின் குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர்கிறது. 20 வருடங்கள் கழித்து இந்த இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

12. The Conference (Swedish) Netflix - Oct 13

The Conference
The Conference

Patrik Eklund இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்வீடிஷ் மொழிப் படம் `The Conference'. நகராட்சி ஊழியர்கள் சிலர் ஒரு கான்ஃபரன்ஸில் கலந்து கொள்கிறார்கள். அங்கு நடக்கத் துவங்கும் அமானுஷ்யமான விஷயங்கள் கண்டு மிரளுகிறார்கள். பின்பு என்ன ஆனது என்பதே கதை.

13. The Burial (English) Prime - Oct 13

The Burial
The Burial

Jamie Foxx மற்றும் Tommy Lee Jones நடித்திருக்கும் படம் `The Burial’. இறுதிச்சடங்குகளை நடத்தி வைக்கும் மையத்திற்கு ஒரு பிரச்சனை. அதை நடத்திவரும் குடும்பத்தை அந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வக்கீல் ஒருவர் போராடுகிறார். இந்தப் போராட்டம் என்ன ஆனது என்பதே கதை.

14. Mark Antony (Tamil) Prime - Oct 13

Mark Antony
Mark Antony

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் எஸ்.ஜே சூர்யா நடித்த படம் `மார்க் ஆண்டனி’. டைம் ட்ராவல் செய்து மற்றவர்களுடன் உரையாடச் செய்யும் ஒரு போன், அது ஹீரோ கையிலும், வில்லன் கையிலும் சிக்கும் போது நடக்கும் கலாட்டாங்கள் தான் கதை.

15. Matti Katha (Telugu) Aha - Oct 13

Matti Katha
Matti Katha

பவன் இயக்கத்தில் உருவான தெலுங்குப் படம் `Matti Katha'. ஹைதராபாத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நண்பர்களைப் பற்றிய கதையாக உருவாகியிருக்கிறது. ஊர் தலைவரால் உருவாகும் ஒரு பிரச்சனை, அதனைத் தொடர்ந்து நடக்கும் குழப்பங்கள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதே படம்.

16. Kasargold (Malayalam) Netflix - Oct 13

Kasargold
Kasargold

மிர்துள் நாயர் இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `Kasargold'. ஆல்பர்ட், ஃபைசல் இருவரும் ஒரு கொள்ளைக்கு திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.

17. Little Miss Rawther (Malayalam) - Oct 12

Little Miss Rawther
Little Miss Rawther

கௌரி கிஷன் லீட் ரோலில் நடித்திருக்கும் மலையாளப்படம் `Little Miss Rawther'. ஒரு காதல் உறவில் வரும் சிக்கலை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது படம்.

18. Samara (Malayalam)) - Oct 13

Samara
Samara

பரத் - ரஹ்மான் நடித்திருக்கும் மலையாளப்படம் `Samara’. ஆலனை சந்திக்க அரவது மகள் ஜானி வரும் வழியில் விபத்துக்குள்ளாகி இறந்து போகிறார். இது விபத்த? கொலையா? என்பதே கதை.

19. Akku (Tamil) - Oct 13

Akku
Akku

ஸ்டாலின் இயக்கத்தில் பிரஜின் நடித்திருக்கும் படம் `அக்கு’. தொடர் கொலைகள் நடக்கிறது, அதில் குற்றவாளியாக சந்தேகித்து ஹரீஷ் கைதாகிறார். நிஜமாக கொலைகள் செய்வது யார்? ஹரீஷுக்கு என்னாகிறது என்பதே கதை.

20. Guthlee Ladoo (Hindi) - Oct 13

இஷார்த் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Guthlee Ladoo’. குதேலி என்ற சிறுவனுக்கு பள்ளி சென்று படிக்க விருப்பம். ஆனால் அவனது சாதியை காராம் காட்டி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருப்பமிருந்தாலும், ஆதிக்க சாதியினரை எதிர்க்க துணிவில்லை. இதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

21. Dhak Dhak (Hindi) - Oct 13

Dhak Dhak
Dhak Dhak

தருண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Dhak Dhak'. நான்கு பெண்கள் கிளம்பிச் செல்லும் ஒரு பைக் பயணமே படத்தின் கதை.

22. Paw Patrol: The Mighty Movie (English) - Oct 13

Paw Patrol: The Mighty Movie
Paw Patrol: The Mighty Movie

டிவி தொடராக புகழ்பெற்ற Paw Patrolலின் திரைப்படம் வெர்ஷனே இந்தப் பட வரிசை. இதில் மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கிறது `Paw Patrol: The Mighty Movie'. ஒரு மாயசக்தி நிரம்பிய எரி நட்சத்திரம் நகரத்தில் விழுந்து, PAW Patrol பப்பிக்களுக்கு சூப்பர்பவர்களை தருகிறது. இதன் பின் நடக்கும் கலாட்டாக்களே படம்.

23. Dumb Money (English) - Oct 13

Dumb Money
Dumb Money

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் `Dumb Money'. Keith Gill ஸ்டாக் மார்கெட் பற்றி பேசும் வீடியோக்கள், அதனால் நடந்த நம்ப முடியாத விஷயங்களும் தான் கதை.

24. Month of Madhu (Telugu) - Oct 14

Month of Madhu
Month of Madhu

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Month of Madhu’. திருமண உறவில் 20 வருடம் பயணித்த ஒரு தம்பதி தங்கள் உறவை முறித்துக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். இந்த தம்பதியினுடனான பயணமே படம். சென்ற வாரமே ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகி பயங்கர வரவேற்பை பெற்றிருக்கிறது படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com