Leo | Dream Girl 2 | Creature | Kaala Paani
Leo | Dream Girl 2 | Creature | Kaala Paani CAnva

LEO பார்த்தாச்சா... இந்த வீக்கெண்டுக்கான மற்ற படங்கள், ஓடிடி லிஸ்ட் இதோ..!

நாலு நாள் வீக்கெண்டைக் கொண்டாட 25க்கும் மேற்பட்ட படைப்புக்களை ஓடிடிக்களில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

1. Rick and Morty: Season 7 (English) Netflix - Oct 16

Rick and Morty: Season 7
Rick and Morty: Season 7Netflix

அதிபுத்திசாலியான சைண்டிஸ் ரிக் மற்றும் அவரது பேரன் மார்ட்டி இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளே, `Rick and Morty' என்ற அனிமேஷன் சீரிஸ். இதுவரை வந்த ஆறு சீசன்களும் சூப்பர் ஹிட். அதோடு நிறைவடைகிறது என சொல்லப்பட்ட வேளையில், தற்போது ஏழாவது சீசன் என்ரி ஆகிறது.

2. Mansion 24 (Telugu) Hotstar - Oct 17

Mansion 24
Mansion 24Hotstar

ஓம்கார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு சீரிஸ் `Mansion 24’. அமுதா மேன்ஷனில் இருந்து காணாமல் போன தனது தந்தையை தேடும் போது நடக்கும் ஹாரர் சம்பவங்கள் தான் கதை.

3. Permanent Roommates S3 (Hindi) Prime - Oct 18

Permanent Roommates S3
Permanent Roommates S3Prime

TVF உருவாக்கி மிகப் பிரபலமான இந்தி சீரிஸ் `Permanent Roommates’. இப்போது அதன் மூன்றாவது சீசன் வெளியாக இருக்கிறது. மூன்று வருடங்களாக டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் ஒரு ஜோடி, திருமணம் என்பதை எப்படி பார்க்கிறார்கள் என்பதே கதை.

4. Kaala Paani (Hindi) Netflix - Oct 18

Kaala Paani
Kaala PaaniNetflix

சமீர் - அமித் இயக்கியிருக்கும் இந்தி சீரிஸ் ` Kaala Paani'. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மர்மமான வியாதி ஒன்று பரவுகிறது. அதிலிருந்து உயிர்பிழைக்கப் போராடும் மக்களின் கதைதான் சீரிஸ்.

5. Bodies (English) Netflix - Oct 19

Bodies
BodiesNetflix

டிசி கிராஃபிக் காமிக்ஸை தழுவி உருவாக்கப்பட்டுள்ள சீரிஸ் `Bodies’. நான்கு டிடெக்டிவ்ஸ், நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் ஒரே கொலையைப் பற்றி விசாரிக்கிறார்கள். இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதே சீரிஸ்.

6. Neon (English) Netflix - Oct 19

Neon
NeonNetflix

மூன்று நண்பர்களைப் பற்றிய சீரிஸ் `Neon'. ஃப்ளோரிடாவின் சின்ன நகரத்தைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் reggaeton என்ற இசைக்கலையில் சாதிக்க நினைக்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதே கதை.

7. Creature (Turkish) Netflix - Oct 20

Creature
CreatureNetflix

துருக்கிய மொழியில் உருவான சைன்ஸ்ஃபிக்‌ஷன் சீரிஸ். இஸ்தான்புல் சைண்டிஸ்ட் ஒருவரின் கண்டுபிடிப்பை, அவரது மாணவன் உபயோகப்படுத்துகிறார். அதனால் ஏற்படும் விளைவுகள் தான் கதை.

8. Upload S3 (English) Prime - Oct 20

Upload
UploadPrime

மிகப்பிரபலமான `Upload’ சீரிஸின் மூன்றாவது சீசன் வருகிறது. இறந்த பிறகு விர்சுவல் உலகத்தில் உயிர்த்து எழும் நடைமுறை வருகிறது. அந்த உலகத்தில் நிகழும் விஷயங்கள் தான் சீரிஸ்ன் களம், இந்த முறை நாதன் - நோராவின் கதை சொல்லப்படுகிறது.

9. The Devil on Trial (English) Netflix - Oct 17

The Devil on Trial
The Devil on Trial Netflix

The Conjuring: The Devil Made Me Do It படம் எந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானதோ அதே சம்பவத்தை பற்றிய ஆவணப்படம் தான் இது. ஒரு கொலை நிகழ்கிறது, ஆனால் கொலை செய்தவர் அதை தான் செய்யவில்லை பேய் தான் செய்தது என சொல்கிறார். இந்த சம்பவத்தின் உண்மைகளை ஆராயும் ஆவணப்படம் தான் இது.

10. Vjeran Tomic : The Spiderman of Paris (French) Netflix - Oct 20

Vjeran Tomic : The Spiderman of Paris
Vjeran Tomic : The Spiderman of Paris Netflix

Vjeran Tomic என்ற திருடனைப் பற்றிய ஃப்ரென்ச் மொழி ஆவணப்படம் தான் `Vjeran Tomic : L'homme-araignée de Paris'. 2010ல் பாரிஸ் ம்யூசியத்தில் நடந்த ஓவியத் திருட்டைப் பற்றிய ஆவணப்படமாக உருவாகியிருக்கிறது.

11. The Wandering Earth II (Mandarin) Prime - Oct 18

The Wandering Earth II
The Wandering Earth IIPrime

2019ல் வெளியான மான்டரின் மொழிப் படம் `The Wandering Earth’ படத்தின் ப்ரீகுவலாக உருவாகியிருக்கிறது `The Wandering Earth II’. பூமியிலிருந்து வெளியேறி வசிக்க வேறு இடம் இருக்கிறதா என தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆனால் அப்போது ஏற்படும் பிரச்சனை, பூமிக்கே ஆபத்தாக முடிகிறது. அதை எப்படி சரி செய்கிறார்கள் என்பதே கதை.

12. Sayen: Desert Road (Spanish) Prime - Oct 20

Sayen: Desert Road
Sayen: Desert RoadPrime

Alexander Witt இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழிப் படம் `Sayen: Desert Road'. அட்டகமா பாலைவனத்தில் வசிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை. அவள் தன் தந்தைமீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்கவும், நகரத்தைக் காப்பாற்றவும் அவள் எடுக்கும் முயற்சிகளே கதை.

13. Old Dads (English) Netflix - Oct 20

Old Dads
Old Dads Netflix

Bill Burr இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `Old Dads'. குடும்பம் வேலை என காலங்களை கடத்திய மூன்று நண்பர்கள், இளைய தலைமுறையினரை புரிந்து கொள்ள முடியாமல் போராடுவதே கதை.

14. Kandasamys: The Baby (English) Netflix - Oct 20

Kandasamys: The Baby
Kandasamys: The BabyNetflix

Jayan Moodley இயக்கத்தில் உருவானவை Kandasamys பட வரிசை. இதற்கு முன் Keeping Up with the Kandasamys, Kandasamys: The Wedding, Trippin' with the Kandasamys படங்களைத் தொடர்ந்து அடுத்த பாகமாக வர இருக்கிறது `Kandasamys: The Baby'. இரு இந்திய குடும்பங்களைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

15. The Other Zoey (English) Prime - Oct 20

The Other Zoey
The Other ZoeyPrime

Sara Zandieh இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Other Zoey’. ஸோயி மிக புத்திசாலித்தமான பெண். ஆனால் காதல் மீது எந்த ஆர்வமும் இல்லாதவர். ஆனால் பள்ளியின் கால்பந்தாட்ட நட்சத்திரம் ஸாக் அவளது வாழ்க்கையில் வந்ததும் எல்லாம் தலைகீழாகிறது. ஸோயி அதை எப்படி எதிர்க் கொள்கிறாள் என்பதே கதை.

16. Maggie Moore(s) (English) Lionsgate Play - Oct 20

Maggie Moore(s)
Maggie Moore(s) Lionsgate Play

John Slattery இயக்கியிருக்கும் ப்ளாக் காமெடி படம் `Maggie Moore(s)'. சாண்டர்ஸ் என்ற காவலதிகாரி மேகி மோர் என்ற ஒரே பெயர் கொண்ட இரு பெண்கள் கொலை செய்யப்பட்டதை விசாரிக்கிறார். போன இடத்தில் ரிட்டாவை சந்திக்கிறார். ரிட்டா அந்த கொலைகளைப் பற்றி விசாரிக்க உதவ ஆர்வம் காட்டுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

17. Red Sandal Wood (Tamil) Aha - Oct 20

Red Sandal Wood
Red Sandal WoodAha

குரு ராமானுஜன் இயக்கத்தில் உருவான படம் `ரெட் சாண்டல் வுட்’. சென்னையிலிருந்து தனது சகோதரனைத் தேடி ரேனிகுண்டா வருகிறார் ஹீரோ. வந்த இடத்தில் அவர் தெரிந்து கொள்ளும் உண்மைகளே படத்தின் கதை.

18. Mama Mascheendra (Telugu) Prime - Oct 20

Mama Mascheendra
Mama Mascheendra Prime

சுதீர் பாபு மூன்று வித வேடங்களில் நடித்த தெலுங்கு படம் ` Mama Mascheendra’. பரசுராம் மற்றும் அவரது இரு மருமகன்கள் இவர்களை சுற்றி நடக்கும் கலாட்டாக்களும், காதலும் தான் கதை.

19. Dream Girl 2 (Hindi) Netflix - Oct 20

Dream Girl 2
Dream Girl 2Netflix

ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இந்திப் படம் `Dream Girl 2’. கரம் என்ற இளைஞனின் வாழ்க்கையில் வரும் சிக்கல்கள்தான் படத்தின் கதை.

20. Transformers: Rise of the Beasts (English) Prime - Oct 20

Transformers: Rise of the Beasts
Transformers: Rise of the BeastsPrime

Transformers பட சீரிஸின் லேட்டஸ் வரவு `Transformers: Rise of the Beasts'. வழக்கம் போல், வாகனங்கள் எல்லாம் ரோபோ அவதாரம் எடுத்து எதிரிகளை பந்தாடுவதே கதை.

21. Leo (Tamil) - Oct 19

Leo
Leo

22. Bhagavanth Kesari (Telugu) - Oct 19

Bhagavanth Kesari
Bhagavanth Kesari

அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜூன் ராம்பால் நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Bhagavanth Kesari’. தனது அண்ணன் மகளை ஆர்மீயில் சேர்க்க வேண்டும் எனத் தீவிரமாக பயிற்சியளிக்கிறார் பகவந்த் கேசரி. அதே சமயம் பெரிய பிஸ்னஸ்மேனால் ஒரு பிரச்சனை வருகிறது. இது இரண்டையும் எப்படி அவர் கையாள்கிறார் என்பதே படம்.

23. Ghost (Kannada) - Oct 19

Ghost
Ghost

சிவராஜ்குமார் நடிப்பில் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருக்கும் கன்னடப் படம் `Ghost’. ஒரு குழு ஜெயிலை ஹைஜாக் செய்து, கோஸ்ட்டை விடுதலை செய்யச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். இல்லை என்றால் மொத்த கைதிகளையும் ரிலீஸ் செய்வோம் என்கிறார்கள். யார் இந்த கோஸ்ட்?

24. Tiger Nageswara Rao (Telugu) - Oct 20

Tiger Nageswara Rao
Tiger Nageswara Rao

ரவிதேஜா, அனுபம் கேர் நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Tiger Nageswara Rao'. ஆந்திரா, சதுர்புரத்தில் வாழ்ந்த ஒரு கொள்ளைக்காரன் நாகஸ்வர ராவ் பற்றிய படம். 70களில் போலீஸில் சிக்காமல் அவன் செய்த கொள்ளை சம்பவங்களை கற்பனை கலந்து சினிமாவாக்கியிருக்கிறார்கள்.

25. Ganapath: A Hero is Born (Hindi) - Oct 20

Ganapath: A Hero is Born
Ganapath: A Hero is Born

Queen, Super 30, Goodbye போன்ற தரமான இந்தி படங்களை இயக்கிய விகாஷ் பால், இப்போது இயக்கியிருக்கும் ஆக்‌ஷன் படம் `Ganapath: A Hero is Born'. ஒரு டிஸ்ட்ரோபியன் உலகத்தில் வாழும் குட்டு எப்படி கண்பத் ஆக மாறி மக்களை காப்பாற்றுகிறான் என்பதே கதை.

26. Yaariyan 2 (Hindi) - Oct 20

Yaariyan 2
Yaariyan 2

Radhika Rao, Vinay Sapru இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Yaariyan 2'. 2014ல் வெளியான Yaariyanக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பிரபலமான தலைப்பு என்பதால் அதை வைத்துக் கொண்டு, அஞ்சலி மேனன் இயக்கிய மலையாளப்படமான `Bangalore Days' படத்தை ரீமேக்கியிருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com