கூழாங்கல்
கூழாங்கல்Sonyliv

ஒரு வழியா கூழாங்கல் வந்துடுச்சே... இந்த வார ஓடிடி, சீரிஸ் லிஸ்ட் இதோ..!

இந்த வாரம் Life on Our Planet , கூழாங்கல்,Killers of the Flower Moon என நிறைய முக்கிய படைப்புகள் வெளியாகவிருக்கின்றன.

Master Peace (Malayalam) Hotstar - Oct 25

Master Peace
Master Peace Hotstar

ஸ்ரீஜித் இயக்கத்தில் நித்யா மேனன் நடித்திருக்கும் மலையாள சீரிஸ் `Master Peace'. பிஜோய் தொழிலதிபராகும் முயற்சியில் இருக்கிறார், அவருக்கு உறுதுணையாக மனைவி ரியா வீட்டு விவகாரங்களை கவனித்துக் கொள்கிறார். இவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே சீரிஸின் கதை.

Aspirants S2 (Hindi) prime   - Oct 25

Aspirants S2
Aspirants S2prime

அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் உருவாகி 2021ல் வெளியான இந்தி சீரிஸ் Aspirants. தற்போது அவரது இயக்கத்திலேயே அதன் இரண்டாவது சீசன் தயாராகியிருக்கிறது. UPSC பரிட்சைகளை பின்னணியாக வைத்து உருவாகியிருக்கிறது சீரிஸ்.

Life on Our Planet (English) Netflix - Oct 25

Life on Our Planet
Life on Our Planet Netflix

நான்கு பில்லியன் ஆண்டுகள் கொண்ட பூமியின் பயணத்தை பதிவு செய்யும் ஆவணப்படம் `Life on Our Planet’. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் executive producerராக பங்காற்றியிருயிருக்கும் இந்த ஆவணப்படத்தின் நரேட்டர், நடிகர் மார்கன் ஃப்ரீமன்.

Yellow Door: '90s Lo-fi Film Club (Korean) Netflix - Oct 27

Yellow Door: '90s Lo-fi Film Club
Yellow Door: '90s Lo-fi Film ClubNetflix

90களில் கொரிய சினிமாவை ஆராதிக்கும் ரசிகர்கள் பல்வேறு குழுக்களை ஆரம்பித்து சினிமா பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அப்படியான ஒரு குழு, Yellow Door Film Club. இப்போது உலகளவில் கவனம் பெற்றிருக்கும் இயக்குநர் Bong Joon Ho இந்தக் குழுவில் ஒருவர். இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் கொரிய சினிமாவின் வளர்ச்சியும், ரசனையும் பற்றி பேசும் ஆவணப்படமாக உருவாகியிருக்கிறது `Yellow Door: '90s Lo-fi Film Club'.

Koozhangal (Tamil) SonyLIV - Oct 27

Koozhangal
Koozhangal SonyLIV

ஆஸ்கருக்கான இந்திய பரிந்துரை வரை சென்று உலகளவில் கவனம் குவித்த சினிமா வினோத் ராஜ் இயக்கிய `கூழாங்கல்’. படம் திரையரங்கில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்க, படம் தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. வீட்டில் இருந்து கோபித்து சென்ற மனைவியை திருப்பி அழைத்து வர கிளம்புகிறார் கணவனும், அவரின் மகனும். இந்தப் பயணத்தில் என்ன ஆகிறது என்பதை மிக நேர்த்தியான சினிமாவாக தந்திருக்கிறார்.

Consecration (English) Prime - Oct 27

Consecration
ConsecrationPrime

சினிமா ரசிகர்களிடம் பெரிய பாராட்டுகளைப் பெற்ற `Triangle' பட இயக்குநர் க்றிஸ்டோஃபர் ஸ்மித் இயக்கி வெளியாகும் படம் `Consecration’. பாதிரியாராக இருக்கும் தனது சகோதரர் தற்கொலை செய்து இறந்துவிட்டார் என்ற தகவல் க்ரேஸுக்கு கிடைக்கிறது. உண்மையிலேயே இந்த மரணத்திற்கு பின் இருக்கும் காரணம் என்ன என ஆரய்கிறார் க்ரேஸ். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.

Pain Hustlers (English) Netflix - Oct 27

Pain Hustlers
Pain Hustlers Netflix

ஹரி பார்ட்டர் படத்தில் நான்கு பாகங்கள், அதனுடைய ஸ்பின் ஆஃப்பான, Fantastic Beasts பட வரிசையை இயக்கியவர் டேவிட் யடெஸ். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகும் படம் `Pain Hustlers'. லிஸா தன் மகளுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என நினைக்கிறார். ஒரு ஃபார்மஸியிலும் வேலை கிடைக்கிறது. அதன் பின் அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை.

Sister Death (Spanish) Netflix - Oct 27

Sister Death
Sister DeathNetflix

பேகோ ப்ளாஸா இயக்கியிருக்கும் ஸ்பானிஷ் மொழிப் படம் `Sister Death'. நார்சிசா புதிதாக கன்னியாஸ்திரியாக சேர்கிறார். அவருக்கு சில சக்திகளும் உள்ளது. அவர் இளம் மாணவிகளுக்கு ஆசிரியையாக பணியமர்த்தப்படுகிறார். இதன் பின் நடப்பதே கதை.

Koffee with Karan: S8 (Hindi) Hotstar - Oct 25

Koffee with Karan: S8
Koffee with Karan: S8 Hotstar

மிகப் பிரபலமான இந்தி ஷோ `Koffee with Karan' எட்டாவது சீசன் வருகிறது. முதல் விருந்தினர்களாக வரும் ஜோடி, ரன்வீர் சிங், தீபிகா படுகோன். இந்த முறை என்ன சர்ச்சைகள் வருகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

Paramporul (Tamil) Aha - Oct 24

Paramporul
ParamporulAha

அரவிந்த்ராஜ் இயக்கத்தில் சரத்குமார், அமிதேஷ் நடித்த படம் `பரம்பொருள்’. ஒரு சிலையை விற்பதற்கு காவலதிகாரி போடும் திட்டம் தான் படத்தின் கதை.

Chandramukhi 2 (Tamil) Netflix - Oct 26

பி.வாசு இயக்கத்தில் உருவான படம் `சந்திரமுகி 2’. வேட்டையபுறம் அரண்மனைக்கு வரும் ஒரு குடும்பம், சந்திரமுகியால் எப்படி பாதிக்கப்படுகிறது, அதிலிருந்து எப்படி தப்புகிறது என்பதே கதை.

Iraivan (Tamil) Netflix - Oct 26

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராகுல் போஸ், நயன்தாரா நடித்த படம் `இறைவன்’. நகரத்தை பதரவைக்கும் சீரியல் கொலைகாரன். அவனைப் போலீஸ் பிடித்ததா இல்லையா என்பதே கதை.

Rangoli (Tamil) Prime - Oct 26

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் வெளியான படம் `ரங்கோலி’. ஒரு பள்ளி மாணவன் தொடர்ந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் தன்னால் குடும்பம் சந்திக்கும் சங்கடங்களை பார்த்த பின்பு என்ன செய்கிறான் என்பதே படம்.

Skanda (Teugu) Hotstar - Oct 27

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் `Skanda’. தன் குடும்பத்தில் வரும் பிரச்சனைக்காக பழி தீர்க்க, ஆந்திரா - தெலுங்கானா என இரண்டு மாநிலங்களின் முதலமைச்சரையும் எதிர்க்கிறார் ஹீரோ. பின்பு நடக்கும் அடிதடி மாஸ் மசாலாவே கதை.

Pulimada (Malayalam) - Oct 26

சஜன் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் மலையாளப் படம் `Pulimada' வின்சென்ட் தனது திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். திருமணம் நடைபெற வேண்டி நாளன்று ஊருக்குள் புலி புகுந்துவிடுகிறது. இதன் பிறகு நடக்கும் கலாட்டாக்கள் தான் படம்.

Margazhi Thingal (Tamil) - Oct 27

Margazhi Thingal
Margazhi Thingal

மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கும் படம் `மார்கழி திங்கள்’. பள்ளியில் படிக்கும் ஒரு ஜோடி காதலிக்கத் துவங்குகிறார்கள். அவர்களுக்கு வரும் சிக்கல்கள் என்ன என்பதே படத்தின் கதை.

Martin Luther King (Telugu) - Oct 27

Martin Luther King
Martin Luther King

தமிழில் மடோன் அஸ்வின் இயக்கிய `மண்டேலா’ படத்தின் தெலுங்கு ரீமேக் `Martin Luther King’. ஒரு ஓட்டுக்காக இரு கட்சிகளை சுத்தலில் விடும், ஒரு சாமானியனின் கதை தான் படம்.

Otta (Malayalam) - Oct 27

Otta
Otta

ரசூல் பூக்குட்டி இயக்குநராக களம் இறங்கியிருக்கும் பட `Otta'. எழுத்தாளர் எஸ் ஹரிஹரன் தனது பால்ய காலத்தை மையமாக வைத்து எழுதிய 'Runaway Children' என்ற புத்தகத்தை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்.

12th Fail (Hindi) - Oct 27

12th Fail
12th Fail

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `12th Fail’ மனோஜ்குமார் சர்மா என்ற ஐபிஎஸ், ஷ்ரத்தா ஜோஷி ஐ.ஆர்.எஸ் அதிகாரி இருவரின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம்.

Tejas (Hindi) - Oct 27

Tejas
Tejas

கங்கனா ரணாவத் நடித்திருக்கும் இந்திப் படம் `Tejas’. தேஜஸ் கில் என்ற Indian Air Force pilot நடத்திய ஒரு ரெஸ்க்யூ மிஷன் தான் படத்தின் கதை

Sajini Shinde Ka Viral Video (Hindi) - Oct 27

Wrong Side Raju என்ற குஜராத்தி படம் மூலம் பிரபலமான முகில் முசல் இயக்கியிருக்கும் இந்திப் படம் `Sajini Shinde Ka Viral Video'. சைஜ்னி என்பவர் காணாமல் போன வழக்கை விசாரிக்கிறார் பெலா. சைஜ்னிக்கு என்ன ஆனது? என தேடும் தேடுதலே படத்தின் கதை.

Killers of the Flower Moon (English) - Oct 27

Killers of the Flower Moon
Killers of the Flower Moon

மார்டின் ஸ்கார்சசி இயக்கத்தில் லியோனர்டோ டி காப்ரியோ, ராபர்ட் டி நீரோ நடித்திருக்கும் படம் `Killers of the Flower Moon'. 1910 - 1930 வரை ஓசேஜ் பழங்குடிகள் தொடர் கொலை செய்யப்பட்டதையும், அதன் பின் நடந்த விசாரணைகள் பற்றியுமான படமாக உருவாகியிருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com