j baby shaitaan maharani gaami
j baby shaitaan maharani gaamicanva

J பேபி... Shaitaan... Maharani... இந்த வார தியேட்டர், OTT லிஸ்ட் இதோ..!

சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடித்துள்ள படம் `J பேபி

1. The Regime (English) HBO max - Mar 3

Stephen Frears மற்றும் Jessica Hobbs இயக்கத்தில் Kate Winslet நடித்துள்ள பொலிடிகல் சட்டையர் சீரிஸ் `The Regime'. கற்பனையான ஐரோப்பாவில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியும், அதன் அதிபர் செய்யும் வேலைகளுமே கதை.

2. Maharani S3 (Hindi) SonyLIV - Mar 7

ஹூமா குரேஷி நடிப்பில் 2021ல் வெளியான சீரிஸ் `Maharani'. இப்போது இதன் மூன்றாவது சீசன் வருகிறது. அரசியல் காரணங்களுக்காக லல்லு பிரசாத் யாதவ் தன் மனைவி ரப்ரி தேவியை முதல்வர் ஆக்கிய நிகழ்வைத் தழுவி எடுக்கப்பட்ட சீரிஸ். இந்த சீசனின் நடக்கப் போகும் அரசியல் திருப்பங்கள் என்ன எனப் பார்ப்போம்.

3. The Gentlemen (English) Netflix - Mar 7

Guy Ritchie தன் இயக்கத்தில் 2019ல் வெளியான The Gentlemen படத்தின் ஸ்பின் ஆஃபாக அதே பெயரில் சீரிஸை இயக்கியிருக்கிறார். எட்டி ஹால்ஸ்டல் தன்னுடய தந்தையின் போதை சாம்ராஜ்யத்தை கையில் எடுக்கும் சமயத்தில், அறிந்து கொள்ளும் உண்மைகள் என்ன? அதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.

4. Heart Beat (Tamil) Hotstar - Mar 8

தீபக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `ஹார்ட் பீட்’. ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் நிகழும் விஷயங்களே கதை

5. Showtime (Hindi) Hotstar - Mar 8

இம்ரான் ஹாஸ்மி, நஷ்ருதீன் ஷா, மௌனி ராய் நடித்துள்ள சீரிஸ் `Showtime’. பாலிவுட்டின் ஆஃப் கேமராவில் நடக்கும் அக்கிரமங்களையும், அதிகாரத்திற்கான போராட்டங்களையும் பற்றிய சீரிஸாக தயாராகியுள்ளது.

6. Valari (Telugu) Etv Win - Mar 6

ம்ருதிகா இயக்கத்தில் இயக்கியுள்ள படம் `Valari'. கடந்த காலத்தில் நடந்த தவறு, நிகழ்காலத்தை சோதிக்க வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

7. Ricky Stanicky (English) Prime - Mar 7

Ricky Stanicky
Ricky Stanicky

Dumb and Dumber, Dumb and Dumber போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கிய Peter Farrelly தற்போது இயக்கியுள்ள படம் `Ricky Stanicky'. குழந்தைப் பருவத்திலிருந்தே நண்பர்களாக பயணிக்கும் மூவரும், அவர்கள் கற்பனையாக உருவாக்கி வைத்திருக்கும் கதாப்பாத்திரமும் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

8. Damsel (English) Netflix - Mar 8

Damsel
Damsel

Stranger Things, Enola Holmes மூலம் பிரபலமான Millie Bobby Brown நடிப்பில் உருவாகியுள்ள படம் `Damsel’. இளவரசன் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் எலோடி. ஆனால் அந்த திருமணமே, மணமகன் குடும்பத்தின் பலி கொடுக்கும் சடங்கிற்காக எனத் தெரிந்து கொள்கிறார். அதன் பின் நடக்கும் அதிரடிகளே படம்.

9. Bachelor Party (Kannada) Prime - Mar 4

Bachelor Party
Bachelor Party

அபிஜித் இயக்கத்தில் உருவான படம் `Bachelor Party'. மனைவியின் பிக்கல் பிடுங்கல் தாங்க முடியாத கணவன், நண்பனின் பேச்சுலர் பார்ட்டிக்கு செல்கிறான். அதன் பின் நடக்கும் காமெடிகளே படம்.

10. Rani: The Real Story (Malayalam) manorama MAX - Mar 7

Rani: The Real Story
Rani: The Real Story

ஷங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் `Rani: The Real Story’. எம்.எல்.ஏ ஒருவர் கொலை செய்யப்பட, அதில் குற்றவாளியாக அவரது வீட்டு பணிப்பெண் கைது செய்யப்படுகிறார். அதன் பின் நடக்கும் போராட்டங்களே கதை.

11. Breath (Telugu) Aha - Mar 8

Breath
Breath

வம்சி கிருஷ்ணா இயக்கத்தில், என்.டி.ஆர் குடும்பத்தைச் சேர்ந்த நந்தமுரி சைதன்ய கிருஷ்ணா நடித்த படம் `Breath’. கோல்ஃப் விளையாட்டின் போது மயங்கி விழும் முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அவரின் உயிரைக் காப்பாற்றி, எதிரிகளை பிடித்தாரா ஹீரோ என்பதே கதை.

12. Sound Party (Telugu) Aha - Mar 8

Sound Party
Sound Party

சஞ்சய் இயக்கத்தில் வெளியான படம் `Sound Party'. தந்தை - மகன் இணைந்து ஒரு உணவகத்தை துவங்குகிறார்கள். ஒரு பிரச்சனையால் உணவகம் மூடப்பட, அதன் பின் நடப்பவையே கதை.

13. Anweshippin Kandethum (Malayalam) Netflix - Mar 8

Anweshippin Kandethum
Anweshippin Kandethum

Darwin Kuriakose இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் `Anweshippin Kandethum'. இரு பெரும் குற்றச்சம்பவங்களை விசாரிக்கும் காவலதிகாரியின் கதை.

14. Merry Christmas (Hindi) Netflix - Mar 8

Merry Christmas
Merry Christmas

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்த படம் `Merry Christmas'. முன்பின் அறிமுகமில்லாத ஆணும் - பெண்ணும் கிறிஸ்துமஸ் இரவில் சந்திந்துக் கொள்கிறார்கள். அந்த இரவில் நடக்கும் பரபர நிகழ்வுகளே படத்தின் கதை.

15. Thankamani (Malayalam) - Mar 7

Thankamani
Thankamani

ரதீஷ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப் நடித்துள்ள படம் `Thankamani’. 1986ல் தங்கமணி என்ற கிராமத்து இளைஞர்களுக்கும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனையை மைப்படுத்தி உருவாகியிருக்கிறது.

16. J Baby (Tamil) - Mar 8

J Baby
J Baby

சுரேஷ் மாரி இயக்கத்தில் ஊர்வசி, தினேஷ், மாறன் நடித்துள்ள படம் `J பேபி'. மகனுக்கும் - அம்மாவுக்கும் இடையேயான பிணைப்பைப் பற்றி கூறும் படமாக உருவாகியிருக்கிறது.

17. Guardian (Tamil) - Mar 8

Guardian
Guardian

குருசரவணன் - சபரி இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் `Guardian’. வில்லன்களை பழி வாங்க வரும் ஆவியின் வேட்டை தான் கதை.

18. Singappenney (Tamil) - Mar 8

Singappenney
Singappenney

சதீஷ் இயக்கத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ள படம் `சிங்கப்பெண்ணே’. கிராமத்திலே வளர்ந்த ஒரு பெண், நீச்சல் போட்டியில் சாதிக்க போராடும் கதை.

19. Arimapatti Sakthivel (Tamil) - Mar 8

Arimapatti Sakthivel
Arimapatti Sakthivel

ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `அரிமாபட்டி சக்திவேல்’. ஹீரோ தன் ஊரிலும், தன் குடும்பத்திலும் சந்திக்கும் பிரச்சனைகளே படம்

20. Nalla Perai Vaanga Vendum Pillaigale (Tamil) - Mar 8

Nalla Perai Vaanga Vendum Pillaigale
Nalla Perai Vaanga Vendum Pillaigale

சித்தார்த் நடித்த `எனக்குள் ஒருவன்’ படத்தை இயக்கிய பிரசாந்த் ராமர் இப்போது இயக்கியிருக்கும் படம் `நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. கிராமத்தி இளைஞர்கள் சிலர், பைக் பயணத்தின் போது ஒரு பெண்ணை சந்திக்கிறார்கள். அதன் பின் அந்த பயணத்தில் நடப்பவையே கதை. இந்தப் படத்தின் மூலம் பாடகர் பிரதீப் குமார் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

21. Bhimaa (Telugu) - Mar 8

Bhimaa
Bhimaa

கன்னட இயக்குநர் ஹர்ஷா தெலுங்கில், கோபிசந்த் நடிப்பில் இயக்கியிருக்கும் படம் `Bhimaa’. வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு கோவிலில் சில மர்மமான விஷயங்கள் நடக்கிறது. அதை விசரிக்க வரும் காவலதிகாரி என்ன மர்மம் என கண்டுபிடித்தாரா? என்பதே கதை.

22. Gaami Telugu) - Mar 8

Gaami
Gaami

வித்யாதர் இயக்கத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள படம் `Gaami'. ஷங்கர் தனது வினோதமான வியாதிக்கான மருந்தை தேடி, இமாலயத்திற்கு செல்கிறான். அவனது அட்வெஞ்சர் பயணமே கதை.

23. Shaitaan (Hindi) - Mar 8

Shaitaan
Shaitaan

2023ல் வெளியான குஜராத்தி படம் `Vash’ன் இந்தி ரீமேக்காக உருவாகியிருக்கிறது `Shaitaan. `Queen’, `Super 30' போன்ற படங்களை இயக்கிய விகாஷ் பால் இயக்கத்தில் மாதவன், அஜய் தேவ்கன், ஜோதிகா நடித்திருக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் தான் கதைக் களம்.

24. The Color Purple (English) - Mar 8

The Color Purple
The Color Purple

Blitz Bazawule இயக்கத்தில் உருவாகியிள்ள படம் `The Color Purple'. 1909 -1947 காலகட்டங்களில் ஜார்ஜியாவின் சிறு நகரத்தில், ஆஃப்ரிக்க அமெரிக்க பெண்கள் படும் அவதிகளை பதிவு செய்யும் படம்.

25. All of Us Strangers (English) - Mar 8

All of Us Strangers
All of Us Strangers

Andrew Haigh இயக்கியுள்ள படம் `All of Us Strangers'. இழந்த தனது குடும்பத்தினரின் நினைவில் வாடும் ஒரு எழுத்தாளருக்கு கிடைக்கும் நட்பு, எப்படி அவரது காயங்களை ஆற்றுகிறது என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com