Godzilla x Kong: The New Empire | Aadujeevitham  lover renegade Nell
Godzilla x Kong: The New Empire | Aadujeevitham lover renegade NellCanva

Godzilla x Kong: The New Empire | Aadujeevitham | இந்த வார OTT தியேட்டர் லிஸ்ட் இதோ..!

இந்த வார ஓடிடி திரையில் புதிய திரில்லர், காமெடி மற்றும் ஆவணப் படங்கள்!

1. Inspector Rishi (Tamil) Prime - Mar 29

Inspector Rishi
Inspector RishiPrime

திரு திரு துறு துறு, கேடி என்கிற கருப்பு துரை படங்களை இயக்கிய நந்தினி ஜே எஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ். நவீன் சந்திரா, சுனைனா, கண்ணா ரவி ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். ரிஷி நாதன் என்ற காவலதிகாரி விசாரிக்கும் கேஸ், அதன் பின் இருக்கும் மர்மங்கள் என நகரும் தொடர்.

2. Renegade Nell (English) Hotstar - Mar 29

Renegade Nell
Renegade Nell Hotstar

Ben Taylor, Amanda Brotchie, MJ Delaney மூவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Renegade Nell'. பயங்கரமான கொள்ளைகாரியாக வாழும் நீல் ஜாக்சனின் வாழ்வில் பில்லி ப்லைண்ட் வந்த பின் என்ன திருப்பம் நிகழ்கிறது என்பதே கதை.

3. Madu (English) Hotstar - Mar 29

Madu
MaduHotstar

ஆண்டனி மது என்ற பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு பாலே நடனம் கற்ற வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஒரு ஆண் பாலே கற்றுக்கொள்ள விரும்புவது என்னவாகிறது என்பதைப் பற்றிய ஆவணத் தொடரே `Madu’.

4. Patna Shukla (Hindi) Hotstar - Mar 29

Patna Shukla
Patna ShuklaHotstar

விவேக் இயக்கத்தில் ரவீணா டாண்டன் இயக்கியிருக்கும் படம் `Patna Shukla'. பகுதி நேர வக்கீலாகவும், முழு நேர இல்லத்தரசியாகவும் வாழ்க்கை நடத்தும் பெண்ணிடம் ஒரு உதவி கேட்டு வருகிறார் மாணவி. அந்த உதவி என்ன? அதன் பின் நடக்கும் விஷயங்கள் என்ன என்பதே கதை.

5. The Beautiful Game (English) Netflix - Mar 29

The Beautiful Game
The Beautiful Game Netflix

Thea Sharrock இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Beautiful Game'. கால்பந்து விளையாட்டில் சாதிக்க விரும்பும், பெருளாதாரத்தில் பின் தங்கிய சில விளையாட்டு வீரர்கள் எப்படி சாதிக்கிறார்கள் எனபதே கதை.

6. Heart of the Hunter (English) Netflix - Mar 29

Heart of the Hunter
Heart of the HunterNetflix

Mandla Dube இயக்கியிருக்கும் படம் `Heart of the Hunter’. ரிட்டையர்ட் வாங்கிக் கொண்டு அமைதியாக வாழும் கான்ட்ராக்ட் கில்லர், அரசாங்க சதியை வெளியிட்ட தன் நண்பனைக் காப்பாற்ற மீண்டும் கோதாவில் இறங்குகிறார். அதன் பின் நடக்கும் அதிரடிகளே கதை.

7. The Great Indian Kapil Show (Hindi) Hotstar - Mar 30

The Great Indian Kapil Show
The Great Indian Kapil ShowHotstar

தொகுப்பாளர் கபில் ஷர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சியே `The Great Indian Kapil Show'. இம்முறை இந்த நிகழ்ச்சியில் என்னென்ன காமெடிகள் நடக்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

8. Ferrari (English) Prime - Mar 25

Ferrari
FerrariPrime

Michael Mann இயக்கத்தில் Adam Driver, Penélope Cruz, Shailene Woodley நடித்த படம் `Ferrari’. பிரபல கார் நிறுவனம் ஃபெராரியின் உரிமையாளர் Enzo Ferrariயின் பயோபிக்காக உருவான இப்படம், அவரின் ஒரு இக்கட்டான காலகட்டத்தை பற்றிய பதிவு செய்திருக்கிறது.

9. Lover (Tamil) Hotstar - Mar 27

Lover
LoverHotstar

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவான படம் `லவ்வர்’. ஆறு வருடமாக காதல் உறவில் இருக்கும் அருண் - திவ்யா இடையில் ஒரு பிரச்சனை வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

10. Rahel Makan Kora (Malayalam) manoramaMAX - Mar 27

Rahel Makan Kora
Rahel Makan KoramanoramaMAX

உபய்னி இயக்கத்தில் வெளியான படம் `Rahel Makan Kora'. ரகேல், கோரா, கௌதமி இம்மூவரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளே படத்தின் கதை.

11. Next Goal Wins (English) Hotstar - Mar 27

Next Goal Wins
Next Goal WinsHotstar

Thor: Ragnarok, Thor: Love and Thunder, Jojo Rabbit போன்ற படங்களை இயக்கிய Taika Waititi இயக்கத்தில் உருவான படம் `Next Goal Wins'. அமெரிக்காவின் Samoa soccer team பற்றிய படமே இது. 2001 FIFA, 31க்கு 0 என்ற கணக்கில் இமாலய தோல்வியடைந்த அந்தக் குழுவை வெற்றி பெற வைக்க ஒரு பயிற்சியாளர் அனுப்பி வைக்கப்படுகிறார். அதன் பின் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.

12. Joshua (Tamil) Prime - Mar 28

Joshua
JoshuaPrime

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் `ஜோஷ்வா இமை போல் காக்க’. ஒரு போதைப் பொருள் கடத்தல் தலைவனுக்கு எதிராக வாதாடும் ஹீரோயின் உயிருக்கு ஆபத்து. அவரைக் காப்பாற்ற வருகிறார் ஹீரோ. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்ததுதான் படம்.

13. Sundaram Master (Telugu) Aha - Mar 28

Sundaram Master
Sundaram MasterAha

கல்யாண் சந்தோஷ் இயக்கிய படம் `Sundaram Master'. அரசுப்பள்ளி ஆசிரியர் மிர்யலமெட்டா என்ற கிராமத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்கிறது படம்.

14. Em Chesthunnav (Telugu) Etv win - Mar 28

Em Chesthunnav
Em ChesthunnavEtv win

பரத் மித்ரா இயக்கத்தில் உருவான படம் `Em Chesthunnav’. வாழ்க்கையில் எந்த தெளிவும் அற்ற ஒரு இளைஞனைப் பற்றிய கதை.

15. Birthmark (Tamil) Aha - Mar 29

Birthmark
BirthmarkAha

விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர், மிர்ணா நடித்த படம் `Birthmark’. ஆறு மாத கர்ப்பிணியான தன் மனைவியை ஒரு பிரத்யேக இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் டேனியல். அங்கு நிகழும் சம்பவங்களே கதை.

16. Double Engine (Telugu) Aha - Mar 29

Double Engine
Double Engine Aha

ரோஹித் பெனுமஸ்தா இயக்கத்தில் உருவான இண்டிபெண்டண்ட் ஃபிலிம் `Double Engine’. டேனி மற்றும் அவனது நண்பர்கள் இருதலை நாகத்தை தேடும் முனைப்பில் இருக்கிறார்கள். அந்த தேடுதலனூடே நடக்கும் விஷயங்களே படம்.

17. Aadujeevitham (Malayalam) - Mar 28

Aadujeevitham
Aadujeevitham

ப்ளஸ்ஸி இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்துள்ள படம் `Aadujeevitham’. பிழைப்பு தேடி சவுதி செல்லும் நஜீப், அங்கு சிக்கிக் கொண்டு படம் அவஸ்தைகளும், அங்கிருந்து தப்ப எடுக்கும் முயற்சிகளுமே கதை. நஜீப் என்பவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து பென்யாமின் எழுதிய `ஆடுஜீவிதம்’ நாவலின் சினிமா வடிவமே படம்.

18. Kaa (Tamil) - Mar 29

Kaa
Kaa

நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா, சலீம் கவுஸ் நடித்த படம் `கா’. ஒரு காட்டுப் பகுதியில் மாட்டிக் கொள்ளும் பெண், அங்கு வரும் சிக்கல்களை எதிர் கொண்டு தப்பினாரா இல்லையா என்பதே கதை.

19. Boomer Uncle (Tamil) - Mar 29

Boomer Uncle
Boomer Uncle

ஸ்வதேஷ் இயக்கத்தில் யோகிபாபு, ஓவியா நடித்திருக்கும் படம் `பூமர் அங்கிள்’. வழக்கம் போல ஒரு காமெடி ஹாரர் படமாக உருவாகியிருக்கிறது.

20. The Boys (Tamil) - Mar 29

The Boys
The Boys

இருட்டு அறையில் படத்தின் இரு பாகங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார், மீண்டும் அடல்ட் ஸோனில் இறங்கியிருக்கும் படமே `The Boys. ஒரே வீட்டில் வசிக்கும் சில நண்பர்களின் வாழ்வில் நடக்கும் பலானது பலானது தான் கதை.

21. Hotspot (Tamil) - Mar 29

Hotspot
Hotspot

அடியே படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக், அவரது யூ-ட்யூப் ஷாட்ர்ஃபிலிம் ஸ்டைலில் இயக்கியிருக்கும் படம் `ஹாட்ஸ்பாட்’. காதல், திருமண உறவு பற்றி பேசக் கூடிய படமாக உருவாகியிருக்கிறது.

22. Idi Minnal Kadhal (Tamil) - Mar 29

Idi Minnal Kadhal
Idi Minnal Kadhal

பாலாஜி மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `இடி மின்னல் காதல்'. ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் விபத்தும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களுமே கதை.

23. Veppam Kulir Mazhai (Tamil) - Mar 29

Veppam Kulir Mazhai
Veppam Kulir Mazhai

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `வெப்பம் குளிர் மழை’. கணவன், மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் அவர்களது குடும்பத்தில். ஆனால் குழந்தை பிறந்த பின்பு அவர்களுக்குள்ளேயே ஒரு பிரச்சனை. அது எப்படி தீர்ந்தது என்பதே கதை.

24. Netru Indha Neram (Tamil) - Mar 29

Netru Indha Neram
Netru Indha Neram

சாய் ரோஷன் இயக்கியுள்ள படம் `நேற்று இந்த நேரம்’. நீலகிரியில் நடக்கும் சீரியல் கில்லரின் கொலைகளும், அதை விசாரிக்கும் போலீஸுமே கதைக்களம்.

25. Tillu Square (Telugu) - Mar 29

Tillu Square
Tillu Square

2022ல் விமல் இயக்கி பெரிய ஹிட்டான படம் `DJ Tillu'. அதன் தொடர்ச்சியாக மாலிக் ராம் இயக்கியிருக்கும் படம் `Tillu Square'. இந்த முறை டில்லு என்ற இளைஞன் சிக்கிக் கொள்ளும் புதிய பிரச்சனையும் அதை சுற்றி நடக்கும் காமெடிகளுமே கதை.

26. Yuva (Kannada) - Mar 29

Yuva
Yuva

கன்னடத்தில் `Mr. and Mrs. Ramachari', `Raajakumara', `Yuvarathnaa' போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் அனந்த்ராம் தற்போது இயக்கியுள்ள படம் `Yuva’. கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் குடும்பத்திலிருந்து சினிமாவில் களமிறங்கும் இன்னொரு நட்சத்திரம் யுவராஜ்குமார் தான் ஹீரோ. தனது குடும்பத்தைக் காப்பதற்காக ஹீரோ எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரமே படத்தின் கதை.

27. Crew (Hindi) - Mar 29

Crew
Crew

Lootcase படம் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் கிருஷ்ணன் தற்போது இயக்கியிருக்கும் படம் `Crew’. தபு, கரீனா கபூர், க்ரித்தி சனோன் நடித்திருக்கும் இப்படம் காமெடி ஹெய்ஸ்ட் படமாக உருவாகியிருக்கிறது.

28. Godzilla x Kong: The New Empire (English) - Mar 29

Godzilla x Kong: The New Empire
Godzilla x Kong: The New Empire

2021ல் வெளியான Godzilla vs. Kong படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது `Godzilla x Kong: The New Empire’. இம்முறை காட்ஸில்லாவும், காங்கும் எந்த யுத்தத்தில் கலந்து கொள்கிறது என்பதே கதை.

படத்தின் விமர்சனத்தைப் படிக்க க்ளிக் செய்யுங்கள்

29. Knox Goes Away (English) - Mar 29

Knox Goes Away
Knox Goes Away

Michael Keaton இயக்கி நடித்துள்ள படம் `Knox Goes Away'. ஜான் நாக்ஸ் என்ற கான்ட்ராக்ட் கில்லருக்கு அறிய வகை மறதி நோய் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் அவரது மகன் ஒரு உதவி கேட்டு வருகிறான். அதன் பிறகு நடக்கும் திருப்பங்களே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com