Ghilli | Finder | Siren
Ghilli | Finder | SirenCanva

கில்லி... இந்த வார OTT தியேட்டர் லிஸ்ட் இதோ.!

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான `கில்லி’ 20 வருடங்கள் நிறைவடைவதையொட்டி பிரம்மாண்டமாக ரீரிலீஸ் செய்யப்படுகிறது. வேலு ரெய்ட பாக்க ரெடியா?

1. The Sympathizer (English) Jio Cinema - Apr 14

The Sympathizer
The Sympathizer Jio Cinema

`City of God' பட இயக்குநர் Fernando Meirelles உடன் இணைந்து Park Chan-wook மற்றும் Marc Munden இயக்கி, Robert Downey Jr முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் `The Sympathizer’. அமெரிக்காவில் அகதிகளுடன் தங்கியுள்ள ஸ்பை ஒருவன் செய்யும் விஷயங்களே சீரிஸ்ன் கதை.

2. Chief Detective 1958 (Korean) Hotstar - Apr 19

Chief Detective 1958
Chief Detective 1958Hotstar

`Chief Inspector’ சீரிஸின் ப்ரீக்குவலாக உருவாகியிருக்கிறது `Chief Detective 1958’. 1950 - 60 காலகட்டங்களில் பார்க் யங் என்ற டிடெக்டிவ் தனது சகாக்களுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக செய்யும் செயல்களே சீரிஸின் கதை.

3. Pon Ondru Kanden (Tamil) Jio Cinema - Apr 14

Pon Ondru Kanden
Pon Ondru Kanden Jio Cinema

`கண்ட நாள் முதல்’ பட இயக்குநர் ப்ரியா இயக்கத்தில் அஷோக் செல்வன், ஐஸ்வர்ய லெஷ்மி, வசந்த் ரவி நடித்துள்ள படம் `பொன் ஒன்று கண்டேன்’. நண்பர்களான சாய் மற்றும் சிவா இருவரும் ஒரே பெண்ணைக் காதலிக்க, அதில் நடக்கும் கலாட்டாக்களே கதை.

4. Silence 2 (Hindi) Zee5 - Apr 16

Silence 2
Silence 2Zee5

2012ல் வெளியான `Silence... Can You Hear It?’ படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது `Silence 2: The Night Owl Bar Shootout'. மும்பையின் Night Owl Barல் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலை விசாரிக்கிறார் அவிஷான் வெர்மா. குற்றவாளிகளை அவர் கண்டுபிடித்தாரா என்பதே கதை.

5. My Dear Donga (Telugu) Aha - Apr 19

My Dear Donga
My Dear DongaAha

சர்வங்கா இயக்கியுள்ள படம் `My Dear Donga'. சுஜாதா என்ற பெண்ணின் வீட்டுக்குள் ஒரு திருடன் நுழைகிறான். பணம், நகை வேண்டாம் உங்கள் நட்பு தான் வேண்டும் என அவன் கேட்க, பின்பு நடக்கும் சம்பவங்களே கதை.

6. Rebel Moon – Part Two: The Scargiver (English) Netflix - Apr 19

Rebel Moon – Part Two: The Scargiver
Rebel Moon – Part Two: The Scargiver Netflix

Zack Snyder இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான `Rebel Moon' படத்தின் இரண்டாம் பாகமே `Rebel Moon – Part Two: The Scargiver’. கோரா அவளுடைய வீரர்களுடன் அதிகாரத்தை எதிர்த்து தனது போராட்டத்தை தொடர்வதே இந்த பாகத்தின் கதை.

7. Siren (Tamil) Hotstar - Apr 19

Siren
Siren Hotstar

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி நடித்த படம் `சைரன்’. ஆம்புலன்ஸ் ட்ரைவராக இருந்த நாயகன், ஒரு கொலை பழியின் காரணமாக சிறைக்கு செல்கிறார். அவர் பரோலில் வெளிவரும் போது நடக்கும் சம்பவங்கள், அவரின் கடந்த காலத்தையும் வெளிக் கொண்டு வருகிறது. அவை என்ன என்பதே படம்.

8. Yaavarum Vallavare (Tamil) Aha - Apr 19

Yaavarum Vallavare
Yaavarum VallavareAha

ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த படம் `யாவரும் வல்லவரே’. ராணுவ வீரர் ஒருவரின் மறைவுக்குப் பின் அவரது உடல் வீட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. அந்த துக்க நிகழ்வை சாதி அரசியலாக்க பார்க்கும் சிலரின் முயற்சிகளால் என்ன நடக்கிறது என்பதே கதை.

9. All India Rank (Hindi) Netflix - Apr 19

All India Rank
All India RankNetflix

வருண் க்ரோவர் இயக்கத்தில் உருவான படம் `All India Rank’. 17வயது மாணவன் விவேக் ஐஐடி தேர்வு எழுத தயாராகிறான். அதில் அவன் சந்திக்கும் சிக்கல்களை பேசுகிறது படம்.

10. Dream Scenario (English) Lionsgate Play - Apr 19

Dream Scenario
Dream ScenarioLionsgate Play

Nicolas Cage நடிப்பில் வெளியான படம் `Dream Scenario'. தெரிந்தவர் தெரியாதவர் என பலரின் கனவுகளில் வருகிறார் பால் மேத்திவ்ஸ் என்ற கல்லூரி பேராசிரியர். அதன் பின் நிகழும் சம்பவங்களே கதை.

11. Vallavan Vaguthathada (Tamil) - Apr 19

Vallavan Vaguthathada
Vallavan Vaguthathada

விநாயக் துரை இயக்கியுள்ள படம் `வல்லவன் வகுத்ததடா’. பணம் இல்லாததால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஐந்து நபர்களை சுற்றி நகரும் கதை.

12. Do Aur Do Pyaar (Hindi) - Apr 19

Do Aur Do Pyaar
Do Aur Do Pyaar

சிரிஷா குஹா இயக்கத்தில் வித்யா பாலன், இலியான, பிரதீக் காந்தி, செந்தில் ராமமூர்த்தி நடித்துள்ள படம் `Do Aur Do Pyaar'. இரு திருமண ஜோடிகள், அந்த பந்தத்திலிருந்து விடுபட நினைக்கிறார்கள். உண்மையை தனது இணையரிடம் தெரிவிக்க காத்திருக்கும் சந்தர்பத்தில் நிகழும் திருப்பங்களே கதை.

13. Love Sex Aur Dhokha 2 (Hindi) - Apr 19

Love Sex Aur Dhokha 2 LSD2
Love Sex Aur Dhokha 2 LSD2

திபாகர் பேனர்ஜி இயக்கி 2010ல் வெளியான படம் `Love Sex Aur Dhokha’. அதன் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கியுள்ளார். மார்டன் ரிலேஷன்ஷிப்பில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசுகிறது படம்.

14. Appu (English) - Apr 19

Appu
Appu

Prosenjit Ganguly இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Appu'. யானை வேட்டையாடுபவர்களிடம் சிக்கிக் கொண்ட தன் தந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கும் அப்புவின் கதை.

15. Civil War (English) - Apr 19

Civil War
Civil War

Annihilation படம் இயக்கிய Alex Garland இயக்கியுள்ள படம் `Civil War'. எதிர்கால அமெரிக்காவில் பத்திரிகையாளர்களும், ராணுவ வீரர்களும் பயணிக்கும் பயணமே கதை.

16. Ghilli (Tamil) - Apr 20

Ghilli
Ghilli

தரணி இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான `கில்லி’ 20 வருடங்கள் நிறைவடைவதையொட்டி பிரம்மாண்டமாக ரீரிலீஸ் செய்யப்படுகிறது. வேலு ரெய்ட பாக்க ரெடியா?

17. Finder (Tamil) - Apr 20

Finder
Finder

சார்லீ நடித்துள்ள படம் `ஃபைன்டர்’. செய்யாத குற்றத்திற்காக சிறை சென்ற தன் தந்தையை மீட்கப் போராடும் மகளின் கதை.

18. Siragan (Tamil) - Apr 20

Siragan
Siragan

வெங்கடேஷ்வராஜ் இயக்கியுள்ள படம் `சிறகன்’. எம்.எல்.ஏ ஒருவர், தொலைந்து போன தன் மகனைத் தேடுகிறார். இந்த தேடல் என்ன ஆகிறது என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com