நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் உருவான தொடர் Special OPS. இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. ஒரு சிறப்பு குழு மூலம் நாட்டுக்கு வரும் அச்சுறுத்தல்கள் எப்படி தடுக்கப்படுகிறது என்பதே கதை.
மோஹினி - ஃபாடியா இயக்கத்தில் உருவான சீரிஸ் `Four Years Later'. லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப்பை எதிர்கொள்ளும் ஒரு ஜோடியின் கதை.
சைன்ஸ் ஃபிக்ஷன் சீரிஸ் `Foundation'. இதன் மூன்றாவது சீசன் வெளியாவுள்ளது. கேலக்டிக் எப்பையர் சார்ந்தவர்களின் மோதல்கள் கதை.
விவேக் சோனி இயக்கத்தில் மாதவன், பாத்திமா சனா நடித்துள்ள படம் `Aap Jaisa Koi'. ஸ்ரீரேணு - மது ஜோடியின் வாழ்வில் நடப்பவையே கதை.
வினோத் இயக்கியுள்ள படம் `Moonwalk'. நடன போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பற்றிய கதை.
பிரமோத் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரத்தா நடித்த படம் `கலியுகம்'. 2064ல் உலகத்தில் உணவு, தண்ணீர் மற்றும் மனிதத்திற்கு மிகப்பெரிய தட்டுப்பாடு இருக்க, உயிர் பிழைத்திருக்க நடக்கும் போராட்டங்களே கதை.
அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள படம் `Narivetta'. பழங்குடி மக்களின் போராட்டத்தை காவல்துறை எப்படி எதிர்கொள்கிறது என்பதே கதை.
பனிந்த்ரா நரஷெட்டி இயக்கிய படம் `8 Vasantalu'. எட்டு வருட காதல் பயணமே கதை.
பவித்ரன் இயக்கத்தில் உருவான படம் `Karki'. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தின் கன்னட ரீமேக்தான் இப்படம். கல்லூரி மாணவன் எதிர்கொள்ளும் சாதிய கொடுமைகளே கதைக்களம்.
மது சந்திரா இயக்கிய படம் `Mr.Rani'. நடிகனாக ஆசைப்படும் இளைஞர், பெண் வேடம் அணிந்து நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
சத்யசிவா இயக்கத்தில் சசிக்குமார், லிஜோ மோல் நடித்துள்ள படம் `ஃப்ரீடம்'. இலங்கை அகதிகளுக்கு நடந்த நிஜ சம்பவத்தை வைத்து உருவாகியிருக்கும் படம்.
எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் `தேசிங்குராஜா 2'. மூன்று நண்பர்கள் தங்கள் வாழ்வில் எடுக்கும் முடிவுகளால் என்ன விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதே கதை.
ராகவேந்திரா இயக்கியுள்ள படம் `மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளனின் கதாப்பாத்திரங்கள் அவனையே எதிர்க்க துவங்குகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
வனிதா இயக்கியுள்ள படம் `Mrs and Mr'. உறவுச்சிக்கலை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்.
சுஹாஸ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள படம் `Oh Bhama Ayyo Rama'. சினிமா மீது ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் வாழ்வில் ஒரு பெண் வந்த பின் நடப்பவையே கதை.
யூஜின் இயக்கியுள்ள படம் `Soothravakyam'. கிறிஸ்டோ சேவியர் என்ற போலீஸ் அதிகாரி, ஒரு பக்கம் மாணவர்களுக்கான கல்வி நிலையத்தையும், இன்னொரு புறம் ஒரு வழக்கின் விசாரணையையும் எப்படி நடத்துகிறார் என்பதே கதை.
ராஜ்குமார் ராவ் நடித்துள்ள படம் `Maalik'. கேங்க்ஸ்டர் ஒருவனின் வாழ்க்கையே கதைக்களம்.
விக்ராந்த் மாஸே நடித்துள்ள படம் `Aankhon Ki Gustaakhiyan'. பார்வை சவால் கொண்ட இருவரின் ரிலேஷன்ஷிப் சிக்கல்களே கதை.
ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள படம் `Superman'. சூப்பர்மேன் கதையின் மார்டன் வெர்ஷனாக உருவாகியிருக்கிறது.