DUNE 2 | POR | SHOGUN | Joshua
DUNE 2 | POR | SHOGUN | JoshuaCanva

DUNE 2 | POR | SHOGUN | Joshua | இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

இந்த வாரமும் தமிழக திரையரங்குகளை ரீரிலீஸ் படங்களும், மலையாள படங்களுமே ஆக்கிரமித்திருக்கின்றன.

1. Shōgun (English) Hotstar - Feb 27

Shogun
ShogunHotstar

1975ல் James Clavell எழுதிய Shōgun நாவல் அதே பெயரில் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது. கப்பல் ஒன்று ஜப்பானின் கிராமத்துப் பகுதியில் கரை ஒதுங்குகிறது. அதிலிருந்த வீரர்கள் கிராமத்திற்குள் வந்த பிறகு நடக்கும் யுத்தங்களே கதை. மொத்தம் பத்து எப்பிசோட்களில் முதல் இரண்டு எப்பிசோடுகளை பிப் 27ம் தேதியும், அதன் பின் வாரம் ஒரு எப்பிசோட் என ஏப்ரல் 23 வரை வெளியிட உள்ளனர்.

ஷோகன் தொடரின் விமர்சனத்தைப் படிக்க SHOGUN REVIEW

2. Iwájú (English) Hotstar - Feb 28

Iwájú
IwájúHotstar

Ziki Nelson இயக்கியிருக்கும் அனிமேஷன் வெப் சீரிஸ் `Iwájú’ னைஜீரியாவில் உள்ள லகோஸ் நகரில் எதிர்காலத்தில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது கதை. தோலா என்ற சிறுமிக்கு கிடைக்கும் செல்லப் பிராணி செய்யும் சாகசங்களே கதை.

3. The Impossible Heir (Korean) Hotstar - Feb 28

The Impossible Heir
The Impossible HeirHotstar

Min Yeon-hong இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `The Impossible Heir'. Kang In-haவுக்கு தான் ஒரு பணக்கார குடும்பத்தின் வாரிசு எனத் தெரிந்த பின், என்னென்ன செய்கிறான் என்பதே கதை.

4. Maamla Legal Hai (Hindi) Netflix - Mar 1

Maamla Legal Hai
Maamla Legal Hai Netflix

ராகுல் பாண்டே இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Maamla Legal Hai'. பட்பர்கன்ஜ் மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான் கதைக் களம்.

5. American Conspiracy: The Octopus Murders (English) Netflix - Feb 28

American Conspiracy: The Octopus Murders
American Conspiracy: The Octopus MurdersNetflix

அரசியல் சதிகளைப் பற்றி எழுதும் புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர், அவரது ஹோட்டல் ரூமில் இறந்து கிடந்தார். அவரின் இன்னொரு பெயர் ஆக்டோபஸ். அவர் சேகரித்த செய்திகள் பற்றியும், அவரது மரணத்தைப் பற்றியும் சொல்கிறது இந்த `American Conspiracy: The Octopus Murders' ஆவணத்தொடர்.

6. Code 8 Part II (English) Netflix - Feb 28

Code 8 Part II
Code 8 Part IINetflix

2019ல் வெளியான Code 8 படத்தின் sequelலாக உருவாகியிருக்கிறது Code 8 Part II. தன்னுடைய சகோதரனை கொலை செய்த போலீஸ் அதிகாரியை சட்டத்தின் முன்னிறுத்த போராடும் ஒரு பெணின் பயணமே கதைக் களம்.

7. My Name Is Loh Kiwan (Korean) Hotstar - Mar 1

My Name Is Loh Kiwan
My Name Is Loh Kiwan Hotstar

Cho Hae-jin எழுதிய `I Met Loh Kiwan' நாவலின் சினிமா வடிவமே `My Name Is Loh Kiwan'. நார்த் கொரியாவிலிருந்து, பிழைப்பு தேடி பெல்ஜியனில் அகதி அடையாளம் பெற போராடுகிறார் Loh Kiwan. அங்கு அவர் சந்திக்கும் சிரமங்களே படத்தின் கதை.

8. Spaceman (English) Netflix - Mar 1

Spaceman
SpacemanNetflix

உலகையே அதிர வைத்த `Chernobyl' பேரழிவை, மிகுந்த தாக்கத்துடன் சீரிஸாக கொடுத்தவர் Johan Renck. தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Spaceman’. ஆறு மாதமாக தனி ஆளாய் சூரிய குடும்பத்தை ஆய்வு செய்கிறார் ஜேக்கப். அங்கு அவருக்குத் துணையாய் ஒரு உயிரினம் வருகிறது. அதன் பின் நடப்பவையே கதை.

9. Bootcut Balaraju (Telugu) Aha - Feb 26

Bootcut Balaraju
Bootcut Balaraju Aha

ஸ்ரீனிவாஸ் கோனேட்டி இயக்கத்தில் உருவான படம் `Bootcut Balaraju’. மகாலக்‌ஷ்மியை காதலிக்கும் பால்ராஜு, அவளை திருமணம் செய்ய போடும் திட்டங்களே படத்தின் கதை.

10. My Name Is Shruthi (Telugu) Aha - Feb 28

My Name Is Shruthi
My Name Is ShruthiAha

ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடித்த படம் `My Name Is Shruthi'. மனித உடலின் தோலை கடத்தும் கும்பல் பற்றிய த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

11. Blue Star (Tamil) Prime - Feb 29

Blue Star
Blue StarPrime

ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, திவ்யா துரைசாமி நடித்த படம் `ப்ளூ ஸ்டார்’. அரக்கோணத்தைச் சேர்ந்த இரு கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களுக்கு இடையிலான மோதலும், விளையாட்டில் கலக்கும் சாதிய அரசியலுமே கதைக் களம்.

12. Ambajipeta Marriage Band (Telugu) Aha - Mar 1

Ambajipeta Marriage Band
Ambajipeta Marriage BandAha

துஷ்யந்த் இயக்கத்தில் சுஹாஸ் நடித்த படம் `Ambajipeta Marriage Band'. 2000ல் அம்பஜிபேட்டா என்ற பகுதியில் நடக்கும் கதை. மல்லிகார்ஜூனா தனது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான். சாதிய பிரச்சனை ஒன்று குறுக்கே வர, அதன் பின் நடப்பவையே கதை.

13. Priscilla (English) MUBI - Mar 1

Priscilla
PriscillaMUBI

Sofia Coppola இயக்கத்தில் Cailee Spaeny, Jacob Elordi நடித்த படம் `Priscilla’. இசைக்கலைஞர் Elvis Presley மற்றும் Priscilla Beaulieu இடையேயான காதல், அவர்களின் திருமண உறவு, அதில் வந்த சிக்கல்கள் போன்றவற்றை சொல்கிறது படம்.

14. Eagle (Telugu) etv WIN - Mar 2

Eagle
Eagleetv WIN

கார்த்திக் இயக்கத்தில் ரவிதேஜா நடித்த படம் `Eagle’. சகாதேவ் என்ற காண்ட்ராக்ட் கில்லரைப் பற்றி சொல்லும் ஆக்‌ஷன் படம்.

15. Por (Tamil) - Mar 1

Por
Por

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், TJ பானு, சஞ்சனா நடராஜன் நடித்துள்ள படம் `போர்’. கல்லூரியில் படிக்கும் இரண்டு நண்பர்கள், ஒரு சம்பவத்தால் விரோதிகள் ஆகிறார்கள். அதன் பின் நடக்கும் கலவரங்களே கதை. இதே படத்தின் இந்தி வெர்ஷனில் ஹர்ஷவர்தன் ரானே, இயான் பட் நடித்து `Dange' என்ற பெயரில் வெளியாகிறது.

16. Joshua (Tamil) - Mar 1

Joshua
Joshua

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், ராஹீ நடித்திருக்கும் படம் `ஜோஷ்வா’. லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பெண் ஒருவரின் உயிருக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது. அவரைப் பாதுகாக்க ஒரு பாடிகார்ட் வருகிறார். அந்தப் பெண்ணுக்கும் - பாடிகார்ட்டுக்கும் இடையே காதல் மலர, அதன் பின் நடப்பவையே கதை.

17. Sathamindri Mutham Tha (Tamil) - Mar 1

Sathamindri Mutham Tha
Sathamindri Mutham Tha

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `சத்தமின்றி முத்தம் தா’. நினைவுகள் எதுவும் இல்லாத ஒரு பெண், ஒருபுறம் அவளது கணவர் அந்தப் பெண்ணை காணவில்லை என புகார் கொடுக்க, இன்னொரு புறம் அவளை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறார் ஒரு நபர். இதன் பின் என்ன ஆனது என்பதே கதை.

18. Athomugam (Tamil) - Mar 1

Athomugam
Athomugam

சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `அதோமுகம்’. மலைப் பிரதேசத்தில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

19. Operation Valentine (Telugu) - Mar 1

Operation Valentine
Operation Valentine

சக்தி பிரதாப் சிங் இயக்கத்தில் வருண் தேஜ், மனுஷி சில்லர் நடித்திருக்கும் படம் `Operation Valentine’. இந்திய விமானப்படையினர் எதிர்கொள்ளும் ஒரு சவாலும், அதை எப்படி ஜெயித்தார்கள் என்ற முயற்சிகளுமே படம்.

20. Bhoothaddam Bhaskar Narayana (Telugu) - Mar 1

Bhoothaddam Bhaskar Narayana
Bhoothaddam Bhaskar Narayana

புருஷோத்தம் ராஜ் இயக்கத்தில் உருவகியிருக்கும் படம் `Bhoothaddam Bhaskar Narayana’. கிராமத்து டிடெக்டிவ் ஒருவருர், குற்றவாளியைப் பிடிக்க செய்யும் சாகசங்களே கதை.

21. Chaari 111 (Telugu) - Mar 1

Chaari 111
Chaari 111

வெண்ணலா கிஷோர் லீட் ரோலில் நடித்துள்ள படம் Chaari 111'. ரோவன் அட்கின்சன் நடித்த ஜானி இங்க்லீஷ் பட பாணியிலான ஒரு காமெடி ஸ்பை த்ரில்லர் படம். ஹைதராபாத்திற்கு வில்லனால் வரும் ஆபத்திலிருந்து, சாரி காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

22. Laapataa Ladies (Hindi) - Mar 1

Laapataa Ladies
Laapataa Ladies

ஆமீர்கானின் முன்னாள் மனைவியும் `Dhobi Ghat' படத்தின் இயக்குநருமான, கிரண் ராவ் தற்போது இயக்கியிருக்கும் படம் `Laapataa Ladies'. புதிதாக திருமணமாகி முக்காடிட்ட மனைவியுடன், வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி. தன் மனைவிக்கு பதிலாக வேறொரு பெண்ணை அழைத்து வந்திருக்கிறார். இதன் பின் நடப்பவற்றை காமெடியாகவும், குழந்தை திருமணங்களின் பாதிப்பு பற்றியும் பேசுகிறது படம்.

23. Kaagaz 2 (Hindi) - Mar 1

Kaagaz 2
Kaagaz 2

வி கே பிராகாஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Kaagaz 2'. இறந்து போன தனது மகளுக்கான நீதியை கேட்கும் ஒரு தந்தையின் போராட்டமே கதை.

24. The Zone Of Interest (English) - Mar 1

The Zone Of Interest
The Zone Of Interest

Under the Skin படத்தை இயக்கிய Jonathan Glazer தற்போது இயக்கியுள்ள படம் `The Zone Of Interest'. ஆஸ்கரில் 5 விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது படம். கமாண்டர் Rudolf Höss மற்றும் அவரது மனைவி Hedwig செய்யும் ஒரு விஷயமும், அது ஏற்படுத்தும் விளைவுகளுமே படம்.

25. May December (English) - Mar 1

May December
May December

Todd Haynes இயக்கத்தில் Natalie Portman, Sophie Mas நடித்துள்ள படம் `May December'. ஒரு தம்பதியரின் வாழ்க்கை, அவர்களின் வாழ்வுக்குள் ஒரு நடிகை வந்த பின்பு தலைகீழாகிறது. அதன் பின் வரும் பிரச்சனைகளே கதை.

26. Dune 2 (English) - Mar 1

Dune 2
Dune 2

2021ல் வெளியான `Dune’ படத்தின் தொடர்ச்சியாக வருகிறது `Dune 2'. தன் குடும்பத்தை சிதைத்த பகைவர்களை, பால் எப்படி பழி தீர்க்கிறான் என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com