BAD BOYS | SWEET TOOTH | அஞ்சாமை | MAIDAAN
BAD BOYS | SWEET TOOTH | அஞ்சாமை | MAIDAANBAD BOYS | SWEET TOOTH | அஞ்சாமை | MAIDAAN

BAD BOYS | SWEET TOOTH | WEAPON | MAIDAAN... இந்த வார தியேட்டர் OTT LIST இதோ..!

BAD BOYS | SWEET TOOTH | WEAPON | MAIDAAN... இந்த வார தியேட்டர் OTT LIST இதோ..!

1. Star Wars: The Acolyte (English) Hotstar - June 4

Star Wars: The Acolyte
Star Wars: The AcolyteHotstar

Star Wars franchiseஐ சேர்ந்த தொடர் `Star Wars: The Acolyte'. ஹை ரிபப்ளிக் ஈராவில் நிகழும் படி கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. Clipped (English) Hotstar - June 4

Clipped
ClippedHotstar

ESPN 30 for 30 என்ற podcastல் வந்த The Sterling Affairsஐ மையமாக வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `Clipped’. லாஸ் ஏஞ்சல்ஸ் க்ளிப்பர்ஸ் அணியின் உரிமையாளர் டொனால்டின் வீழ்ச்சியைப் பற்றி சொல்கிறது.

3. Sweet Tooth: S3 (English) - June 6

Sweet Tooth: S3
Sweet Tooth: S3netflix

Sweet Tooth என்ற டிசி காமிக்ஸை மையமாக வைத்து அதே பெயரில் உருவானது சீரிஸ். இதுவரை இரண்டு சீசன்கள் வெளியாகியிருக்கிறது, தற்போது மூன்றாவது சீசன் வருகிறது. மனிதன் பாதி, மான் மீதி என வினோத கலவையில் இருக்கும் சிறுவனை சுற்றி நடக்கும் கதை.

4. Gullak: S4 (Hindi) Sony LIV - June 7

Gullak: S4
Gullak: S4 Sony LIV

மிஷ்ரா குடும்பத்தின் கதையே `Gullak' சீரிஸ். வர இருக்கும் நான்காவது சீசனை Shreyansh Pandey இயக்கியுள்ளார்.

5. Hierarchy (Korean) Netflix - June 7

Hierarchy
HierarchyNetflix

Bae Hyeon-jin இயக்கியுள்ள சீரிஸ் `Hierarchy’. மிகப்பெரிய பள்ளி ஒன்றில் நடக்கும் விஷயங்களைப் பற்றி சொல்கிறது இந்த தொடர்.

6. Blackout (Hindi) Jio Cinema - June 7

Blackout
BlackoutJio Cinema

Devang Bhavsar இயக்கியுள்ளா படம் `Blackout’. ஒரு குற்ற புலனாய்வு பத்திரிகையாளர் சந்திக்கும் சிக்கல்களே படத்தின் கதை.

7. Hit Man (English) Netflix - June 7

Hit Man
Hit ManNetflix

Boyhood படம் மூலம் பலரையும் கவனிக்க வைத்த Richard Linklater, தற்போது இயக்கியுள்ள படம் `Hit Man'. கல்லூரி பேராசிரியர் சிக்கிக் கொள்ளும் ஒரு பிரச்சனை, அதனைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களே கதை.

8. The End We Start From (English) Jio Cinema - June 8

The End We Start From
The End We Start From Jio Cinema

Mahalia Belo இயக்கியுள்ள படம் `The End We Start From'. பிறந்த குழந்தையுடன் பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஒரு தாயின் கதை.

9. Maidaan (Hindi) Prime - June 5

Maidaan
Maidaanprime Video

`Badhaai Ho’ படத்தை இயக்கிய Amit Sharma இயக்கி அஜய் தேவ்கன் நடித்த படம் `Maidaan’. இந்திய கால்பந்து பயிற்சியாளர் Syed Abdul Rahim வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர் இந்திய கால்பந்து அணியை எப்படி தயார் செய்தார் என்பதை தழுவி உருவான படம்.

10. Bade Miyan Chote Miyan (Hindi) Netflix - June 6

Bade Miyan Chote Miyan
Bade Miyan Chote MiyanNetflix

பாலிவுட் கமர்ஷியல் பட இயக்குநர் Ali Abbas Zafar இயக்கத்தில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், ப்ரித்விராஜ் நடித்த படம் `Bade Miyan Chote Miyan'. ஃபிரோஸ் - ராகேஷ் என்ற இரு வீரர்கள், மிக ஆபத்தான ஆயுதங்களை ஒரு பயங்கரவாதியிடமிருந்து மீட்டு வர அனுப்பப்படுகிறார்கள். அவர்களின் சாகசப்பயணமே படம்.

11. Boomer Uncle (Tamil) Aha - June 7

Boomer Uncle
Boomer UncleAha

ஸ்வதீஷ் இயக்கத்தில் உருவான படம் `பூமர் அங்கிள்’. கணவனும் மனைவியும் விவாகரத்துக்கு முன் ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். அங்கு நடக்கும் சம்பவங்களே கதை.

12. Varshangalkku Shesham (Malayalam) SonyLIV - June 7

Varshangalkku Shesham
Varshangalkku SheshamSonyLIV

`Hridayam' பட ஹிட்டுக்குப் பிறகு Vineeth Sreenivasan இயக்கிய படம் `Varshangalkku Shesham'. சென்னை மெட்ராஸாக இருந்த காலத்தில், இங்குள்ள சினிமா உருவாக்கம் பற்றியும், அதில் பணியாற்ற வந்த இரு நண்பர்கள் பற்றிய கதை.

13. Bad Boys: Ride or Die (English) - June 6

Bad Boys: Ride or Die
Bad Boys: Ride or Die

Bad Boys பட வரிசையில் நான்காவது பாகம் `Bad Boys: Ride or Die'. மைக் - மார்கஸ் இவர்களின் முன்னாள் கேப்டன் ஒரு வழக்கில் குற்றவாளியாக சிக்க வைக்கப்படுகிறார். அவரை நிரபராதி என நிரூபிக்க மைக் - மார்கஸ் செய்யும் சாகசங்களே கதை.

14. Anjaamai (Tamil) - June 7

Anjaamai
Anjaamai

சுப்பராமன் இயக்கத்தில் விதார்த், வாணி போஜன், ரஹ்மான் நடித்திருக்கும் படம் `அஞ்சாமை’. நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஒரு குடும்பம், அதற்கு எதிராக நடத்தும் நீதிப் போராட்டமே கதை.

15. Weapon (Tamil) - June 7

Weapon
Weapon

குகன் இயக்கத்தில் வசந்த் ரவி, சத்யராஜ் நடித்துள்ள படம் `வெப்பன்’. சூப்பர் ஹூமனை தேடும் படலத்தில் நடக்கும் விஷயங்களே கதை.

16. Haraa (Tamil) - June 7

Haraa
Haraa

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடித்துள்ள படம் `ஹரா’. ஒரு சாதாரண மனிதன் செய்யும் அசாதாரண விஷயங்களும், அதற்கு பின் இருக்கும் காரணமும் தான் கதை.

17. Satyabhama (Telugu) - June 7

Satyabhama
Satyabhama

காஜல் அகர்வால் லீட் ரோலில் நடித்துள்ள படம் `Satyabhama’. ஏசிபி சத்யபாமா, தொலைந்து போன நபர் பற்றிய கேஸை விசாரிக்கிறார். அதில் வெளிவரும் உண்மைகள் என்ன என்பதே கதை.

18. Manamey (Telugu) - June 7

Manamey
Manamey

ஸ்ரீராம் இயக்கத்தில் ஷர்வாணந்த், க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள படம் `Manamey’. ஒரு குழந்தையுடன் பயணிக்கும் ஜோடியைப் பற்றிய கதை.

19. Rakshana (Telugu) - June 7

Rakshana
Rakshana

ப்ரந்தீப் இயக்கத்தில் பாயல் ராஜ்புத் இயக்கியிருக்கும் படம் `Rakshana’. ஏசிபி கிரண் குற்றங்களை தடுக்க செய்யும் செயல்கள் அவற்றின் விளைவுகள் இவையே கதை.

20. Little Hearts (Malayalam) - June 7

Little Hearts
Little Hearts

ஆண்டோ ஜோஷ் இயக்கியுள்ள படம் `Little Hearts’. மூன்று தனித்துவமான காதல் கதைகளை பற்றி கூறுகிறது படம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com