இனி தமிழில் Amazon MiniTV... ஜியோவைத் தொடர்ந்து அமேசானிலும் இலவசம்..!

இலவச அமேசான் மினிடிவி ஸ்ட்ரீமிங்கானது அமேசான் ஷாப்பிங் ஆப் உள்ளகத்திலிருந்தும், பிரைம் வீடியோ, ஃபயர் டிவி, ஸ்மார்ட் டிவிகளிலும் வெளியிடப்படும் அல்லது அதற்கான ஆப்ஐ பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
amazon Mini TV
amazon Mini TVAmazon

அமேசான் மினிடிவி (Amazon miniTV) தனது பிராந்திய பகுதி பார்வையாளர்களுக்காக பிரபலமான 200+ டப் செய்யப்பட்ட ஷோஸ் மற்றும் சினிமாக்களை வெளியிடுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பிரிவுகளில் காலடி எடுத்து வைக்கிறது . ஹண்டர் - டூடேகா நஹி தோடேகா, ரக்ஷக் – இந்தியாஸ் பிரேவ்ஸ், பிசிக்ஸ் வாலா போன்ற இன்னும் பல ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற ஷோஸ் மற்றும் படங்களின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளைப் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அமேசான் மினிடிவியில்(Amazon miniTV) இலவசமாக பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும்

டப் செய்யப்பட்ட மனதைக் கொள்ளைகொள்ளும் இந்த அற்புதமான திரைப்படங்களின் வரிசையில், மற்றவற்றுக்கிடையில் ஹண்டர்-டூடேகா நஹி தோடேகா, ஃபிசிக்ஸ் வாலா, அதிரடி காட்சிகள் நிறைந்த தேசபக்தித் தொடர் ரக்ஷக்-இந்தியாஸ் பிரேவ்ஸ், இளம் காதல் தொடர் ஹைவே லவ் போன்ற உன்னதமான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மினிடிவியின் ஹிந்தி அசல் திரைப்படங்களும் அடங்கும். இது தவிர, twilight,Now You See Me, Hunger Games தொடர்கள், Step Up ஃபிரான்சைஸ், ரெட் போன்ற இன்னும் பல காலத்தால் அழியாத கலைப்படைப்புக்கள் உட்பட, தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்ட ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களின் தொகுப்பையும் பார்வையாளர்கள் கண்டு அனுபவித்து மகிழலாம். மேலும் முழுமையான சிறந்த உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருட்டு, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்ட கொரியன், துருக்கிய மற்றும் மாண்டரின் மொழி ஷோஸ் மற்றும் மூவீஸ்களை இந்த சேவையானது வழங்கும்..

“மினி டிவி வாடிக்கையாளர்கள் பிரபலமான நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை அனுபவித்து மகிழும் வகையில் பல்வேறு மொழிகளில் விரிவுபடுத்தி வழங்கி அவர்களின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மென்மேலும் மேம்படுத்துவதில் நாங்கள் மிகப் பெரும் உற்சாகமடைந்திருக்கிறோம். இந்த முன்முயற்சி ஒரு குறிப்பிடத்தக்க சாதனையின் மைல் கல்லாக விளங்குவதோடு எங்கள் பிராந்திய பகுதியின் பார்வையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் எங்களுக்குள்ள தீவிரமான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. புதிய விளம்பரதாரர்களுடனான தொடர்புகளை எங்களுக்கு உருவாக்குவதோடு, கூட்டாண்மைகளை கட்டமைப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கவும் இந்த முன் முயற்சிகள் எங்களுக்கு உதவும்” என்று அருணா தர்யானனி டைரக்டர் அண்ட் பிசினஸ் ஹெட், அமேசான் மினிடிவி தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த பிராந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட இலவச அமேசான் மினிடிவி ஸ்ட்ரீமிங்கானது அமேசான் ஷாப்பிங் ஆப் உள்ளகத்திலிருந்தும், பிரைம் வீடியோ, ஃபயர் டிவி, ஸ்மார்ட் டிவிகளிலும் வெளியிடப்படும் அல்லது அதற்கான ஆப்ஐ பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com