இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!
இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!pt

3BHK to Bhoghee வரை... இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

3BHK to Bhoghee வரை... இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ..!

1. Series

Chief of War (English) Apple TV+ - Aug 1

Jason Momoa நடித்துள்ள சீரிஸ் `Chief of War'. ஹவாய் தீவுகளில் நடக்கும் அதிகார போராட்டமே கதை.

2. Post Theatrical Digital Streaming

Black Bag (English) Jio Hotstar - July 28

Steven Soderbergh இயக்கத்தில் Cate Blanchett நடித்த படம் `Black Bag'. மனைவி கேத்தரின் தேச துரோக வழக்கில் சிக்க, அவளது கணவன் என்ன செய்கிறார் என்பதே கதை.

3. 3BHK (Tamil) Prime - Aug 1

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா, சைத்ரா நடித்த படம் ` 3BHK'. சொந்த வீடு வாங்க, ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம் சந்திக்கும் பிரச்சனைகளே கதை.

4. Thammudu (Telugu) Netflix - Aug 1

வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் நிதின் நடித்த படம் `Thammudu'. அக்கா - தம்பி பற்றிய பாசத்தை, த்ரில்லர் கலந்து சொல்லும் அட்வெஞ்சர் கதை.

5. Surabhila Sundara Swapnam (Malayalam) Sun NXT - Aug 1

டோனி மேத்திவ் இயக்கியுள்ள படம் `Surabhila Sundara Swapnam'. பிரச்சனை ஒன்று நடந்த பின் அதை செய்தது யார் என்ற தேடலே கதை.

6. Theatre

Kingdom (Telugu) - July 31

கௌதம் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் `Kingdom'.  ஒரு அண்டர்கவர் ஏஜென்ட் பற்றிய கதை.

7. Housemates (Tamil) - Aug 1

ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், ஆர்ஷா நடித்துள்ள படம் `ஹவுஸ்மேட்ஸ்'. புதுமண தம்பதி கார்த்திக் - அணு குடியேறும் வீட்டில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களே கதை.

8. Surrender (Tamil) - Aug 1

கௌதமன் இயக்கத்தில் தர்ஷன், லால் நடித்துள்ள படம் `சரண்டர்'. எலக்ஷன் பின்னணியில் நிகழும் காவல்துறைக்கும் - கேங்க்ஸ்டருக்கு இடையே நடக்கும் மோதலே கதை.

9. Mr Zookeeper (Tamil) - Aug 1

புகழ் நடித்துள்ள படம் `Mr Zookeeper'. அருங்காட்சியக காவலருக்கு மிருகங்களுடன் ஏற்படும் நட்பு பற்றிய கதை.

10. Accused (Tamil) - Aug 1

பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ள படம் `அக்யூஸ்ட்'. ஒரு கைதிக்கு காவலருக்குமான கதை.

11. Usurae (Tamil) - Aug 1

நவீன் இயக்கத்தில் திஜே - ஜனனி நடித்துள்ள படம் `உசுரே'. ராகவா - ரஞ்சனாவின் காதல் கதையே படம்.

12. Bhoghee (Tamil) - Aug 1

விஜய சேகரன் இயக்கியுள்ள படம் `போகி'. மலைக்கிராமம் ஒன்றிலிருந்து டாக்டருக்கு படிக்க செல்லும் மாணவி இறந்து போகிறார். அதன் பின் என்ன என்பதே கதை.

13. Meesha (Malayalam) - Aug 1

கதிர் - சைன் டாம் சாக்கோ நடித்துள்ள படம் `Meesha'. மிதுன் தன் நண்பர்களை ஒரு விருந்துக்கு அழைக்கிறான். ஆனால் இந்த விருந்துக்கு பின் ஒரு பெரிய திட்டம் இருக்கிறது. ஆனால் விருந்துக்கு திட்டத்தோடு வருவது மிதுன் மட்டுமல்ல. 

14. Sumathi Valavu (Malayalam) - Aug 1

அர்ஜூன் அசோகன் நடித்துள்ள படம் `Sumathi Valavu'. சுமதி என்ற பெண் ஒரு வளைவில் நடந்த விபத்தில் இறந்த பின், அந்த இடத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதன் பின் இருக்கும் மர்மம் என்ன என்பதே கதை.

15. Dhadak 2 (Hindi) - Aug 1

பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக்தான் `Dhadak 2'. சட்டம் பயிலும் மாணவனுக்கு சாதியால் ஏற்படும் பாதிப்புகளே கதை.

16. Son of Sardaar 2 (Hindi) - Aug 1

அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் `Son of Sardaar 2'. தன் மனைவியை சமாதானப்படுத்த, அவரது வீட்டுக்கு வரும் ஹீரோவுக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

17. The Bad Guys 2 (English) - Aug 1

Pierre Perifel இயக்கியுள்ள அனிமேஷன் படம் `The Bad Guys 2'. ஒரு குழு இணைந்து செய்யும் கொள்ளை திட்டமே கதை.

18. The Naked Gun (English) - Aug 1

Liam Neeson நடித்துள்ள படம் `The Naked Gun'. Frank Drebin Jr. இம்முறை சந்திக்கும் பிரச்சனையும், அதன் தீர்வுமே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com