\
அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்

அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்

அவரு கூடவா நடிக்க போற? ஆனந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகைகள்
Published on

கோடம்பாக்கம், ராமன்தேடிய சீதை உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெகன்நாத். இவர் இப்போது இயக்கி இருக்கும் படம், ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.ஏன் பாஸ் இப்படியொரு டைட்டில்? என்று கேட்டதும் சொன்னார்.

‘காதலியோட செருப்பைத் தேடி ஹீரோ அலையற கதைதான் இது. ஆனா, படம் முடிஞ்சு வரும்போது ஒரு நல்ல படத்தைப் பார்த்துட்டு வந்த திருப்தி கண்டிப்பா இருக்கும். தியேட்டர்ல உட்கார்ற இரண்டரை மணி நேரம் உங்களை சிரிக்க வச்சுக்கிட்டே இருக்க நான் கியாரண்டி. இதுல ஹீரோயினா ஆனந்தி நடிக்கிறாங்க. அவங்ககிட்ட கதையை சொன்னதும் கண்டிப்பா இந்தப் படத்துல நடிக்கிறேன்னாங்க. அப்புறம்தான் ஹீரோவை தேடினேன். பசங்க படத்துல நடிச்ச பக்கோடா பாண்டிய தமிழ்னு பெயரை மாற்றி, இதுல ஹீரோவா அறிமுகப்படுத்தறேன். அப்புறம் ஆனந்திகிட்ட, அவருக்கு வேண்டிய சில நடிகைகள், சினிமாக்காரங்க இருப்பாங்கள்ல, அவங்க போய், ’பக்கோடா ஜோடியாவா நடிக்க போற’ன்னு பயங்காட்டியிருக்காங்க. இதனால யோசிச்சாங்க. நான் போயி, அவர் நடிச்ச சில காட்சிகளை ஆனந்திகிட்ட காண்பிச்சதும் ஆச்சரியப்பட்டு, கண்டிப்பா இவரோட நடிக்கிறேன்னு சொன்னாங்க. பாண்டி, இந்தப் படம் மூலம் நடிப்புல வேற இடத்துக்கு போவார்’ என்றார் நம்பிக்கையாக.

படத்தை டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், விஜயன் தயாரிக்கிறார்கள். ‘அதென்னங்க முருங்கைக்காய் புரொடக்‌ஷன்’என விஜயனிடம் கேட்டால், ‘எங்க ஊர்ல (வெடிக்காரன் பட்டி) இயற்கை விவசாயம் பண்றோம். முருங்கைக்காய்தான் அதிகமா வளர்க்கிறோம். அதுல வந்த காசுலதான் தயாரிக்கிறோம். அதனாலதான் கம்பெனிக்கு இப்படியொரு பெயர்’ என்கிறார் சிரிக்காமல்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com