\
ஆஸ்கர் திருவிழா: துணை நடிகர் பிராட் பிட்... இன்னும் சில விருதுகள்!

ஆஸ்கர் திருவிழா: துணை நடிகர் பிராட் பிட்... இன்னும் சில விருதுகள்!

ஆஸ்கர் திருவிழா: துணை நடிகர் பிராட் பிட்... இன்னும் சில விருதுகள்!
Published on

சிறந்த திரைப்படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92-வது முறையாக நடைபெறும் ஆஸ்கர் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது டாய் ஸ்டோரி 4-க்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது ஹேர் லவ்-க்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது, ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘பிராட் பிட்’க்கே வழங்கப்பட்டது. 'Once upon a time in hollywood' படத்திற்காக, சிறந்த நடிகர் விருதுக்கு லியோனர்டோ டிகாப்ரியோவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அதே படத்தில் நடித்த பிராட் பிட்க்கு துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருதை கொரிய மொழியில் வெளியான Parasite திரைப்படம் வென்றது. வேலைக்கே செல்லாமல் அனைத்து வசதிகளையும் பெற நினைக்கும் கிம் குடும்பத்தையும், அந்த ஊரிலேயே வசதிப்படைத்த 'பார்க்' குடும்பத்தையும் சுற்றி நடக்கும் வகையில் Parasite படம் எடுக்கப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com