ஒரு பக்க கதை படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நாயகனாக அறிமுகமாக இருந்த திரைப்படம், ஒரு பக்க கதை. இந்தப் படத்தில் இவர் ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கும் போதே ‘மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்தப் படம் ஒருபக்கக் கதை வெளியாவதற்கு முன்பே திரைக்கு வந்துவிட்டது. மேலும் ஒரு பக்க கதை வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் நிலவியது.
இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ஒரு பக்க கதையின் ட்ரெய்லரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிடுகிறார் என படக்குழு அறிவித்துள்ளது. பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கி இருந்தார். அந்தப் படம் விஜய்சேதிபதிக்கு பெரும் வெற்றியை சம்பாதித்துக் கொடுத்தது.

