ராமனை வம்புக்கு இழுக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ டீசர்
விஜய் சேதிபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இதை ஆறுமுககுமார் இயக்கி வருகின்றார். இப்படத்தில் நாயகியாக நிகாரிகா கொனிதலா அறிமுகமாகிறார். படத்தில் ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். அதன் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்கிறார்.
தற்சமயம் வெளியாகியுள்ள டீசரில், “புருஷோத்தமா ராவணன் சீதையை தூக்கிப் போய் பத்திரமா வச்சிருந்தானா? ஆனா அவன நாம அரக்கன்னு சொல்றோமா? அதே ராமன் சீதையை காப்பாத்திக் கொண்டுப்போய் தீயில போட்டு கொன்னானா? அவன நாம கடவுள்னு சொல்றோமா?” என தடாலடியான வசனம் பேசுகிறார் விஜய் சேதுபதி. இதனால் விரைவில் இந்த வசனங்கள் குறித்த சர்ச்சை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.