\
‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி

‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி

‘ஒரு குப்பைக் கதை’ இசை நிகழ்ச்சி - விஜய் படத்தை குறிப்பிட்டு பேசிய உதயநிதி
Published on

நடன அமைப்பாளர் தினேஷ் நடித்துள்ள ‘ஒரு குப்பைக் கதை’ படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது.

தேசிய விருது பெற்ற நடன அமைப்பாளர் தினேஷ். இவர் தற்போது ‘ஒரு குப்பைக் கதை’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் அஸ்லம் தயாரிக்க, அவரது உதவி இயக்குநர் காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத் மற்றும் இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய சீனுராமசாமி, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கு பாராட்டுக்கள்” என்றார். 

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “விஜய் நடித்த ‘குருவி’ படம் மூலமாக தயாரிப்பில் இறங்கி, பத்து வருடம் வெற்றிகரமாக ஓடிவிட்டது. இதுவரை பல படங்களை கூட கொடுத்துள்ளோம். ஆனால் இந்தப் படம் ‘மைனா’ போல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம்.” என்றார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com