\
ப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு

ப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு

ப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு
Published on

‘ஒரு அடார் லவ்’ படத்தில் நடித்துள்ள நூரின் ஷெரிப் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

விரைவில் வெளியாக உள்ள மலையாள திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. அதில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்ய மலரே பூவி’பாடல் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்தப் பாடல் காட்சியில் இடம் பெற்ற ப்ரியா வாரியர் தனது புருவத்தை வில் போல் வளைத்திருந்தார். மேலும் அவர் கண்களை சிமிட்டும் காட்சிகள் வைரலாக பரவியது. ஒரே இரவில் அவர் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரமாக ஆனார்.

இப்பாடலை அடிப்படையாக வைத்து பல பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்பட்டன. தமிழில் ப்ரியா வாரியரை நடிக்க வைக்க பலரும் வலை வீசினர். அவர் தனக்குத் தமிழில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதே பாடலில் ப்ரியா வாரியருடன் சேர்ந்து நடித்த நூரின் ஷெரிப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அசூர வேகத்தில் ஆடும் பரத நாட்டியத்தை பார்த்து அரண்டுப் போய் உள்ளனர் நெட்டிசன்கள். இந்த வீடியோவை ப்ரியா வாரியர் அளவுக்கு வைரலாக்க ஒரு பெரும் கூட்டமே போட்டிப் போட்டுக் கொண்டு வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com