தமிழில் வருகிறது பிரியா வாரியரின், ’ஒரு அடார் லவ்’

தமிழில் வருகிறது பிரியா வாரியரின், ’ஒரு அடார் லவ்’

தமிழில் வருகிறது பிரியா வாரியரின், ’ஒரு அடார் லவ்’
Published on

மலையாளத்தில் உருவாகியுள்ள படம், ‘ஒரு அடார் லவ்’. பிரியா வாரியர், நூரின் ஷெரீப் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, ’ஹேப்பி வெட்டிங்’, ’சங்க்ஜ்’ ஆகிய மலையாளப் படங்களை இயக்கிய ஒமர் லுலு இயக்கியுள்ளார். 

இதில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் பிரியாவின் புருவ அசைவுகள் மற்றும் கண் சிமிட்டல் காட்சிகள் வைரலானது. ஒரே இரவில் லட்சக்கணக்கானோர் பார்த்ததன் மூலம், பலரின் மனங்களையும் கொள்ளையடித்தார் பிரியா வாரியர். சமூக வலைத்தளங்களில் மூன்று நாட்கள் இந்தப் பாடல் காட்சி டிரெண்டிங்கில் இருந்தது. இந்தப் படத்தில் இடம் பெறும் விரல்களில் முத்தமிடும் காட்சிகளும் அதிகம் பரபரப்பானது. 

பிரியா வாரியர் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் நபராக இருந்தார். பாடல் மற்றும் அதில் இடம்பெற்ற முத்தக் காட் சிகளுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றம் வரை சென்றது. அதனால், பிரியா வாரியர் நீண் ட நாள் பேசு பொருளாக இருந்தார்.

இந்தப் படம் கன்னடம் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இப்போது தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இதை தயாரிப் பாளர் எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் மூலம் பிப்ரவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com