சினிமா
1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் பாடல் வெளியீடு?
1997-ல் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் பாடல் வெளியீடு?
1997-ல் ஷூட்டிங் நடத்தப்பட்டு பின்னர் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் ஒரு பாடலை தற்பாது இணையத்தில் வெளியிட ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த் சாமி, மாதுரி தீக்சித் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம் ‘இன்ஜினீயர்’. துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் ஷூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டதால் படம் வெளியாகவில்லை. சுஜாதா இப்படத்திற்கு வசனம் எழுதிய நிலையில் வைரமுத்து பாடலாசிரியராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ‘இன்ஜினீயர்’ படத்தின் ஒரு பாடலை தற்போது இணையத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை கயல் தேவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.