\
ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு!

ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு!

ஒரே படத்தில் விஜய்சேதுபதி, சிம்பு!
Published on

கதாநாயன் படத்தில் விஜய்சேதுபதியுடன் சிம்பு பணியாற்றியுள்ளார்.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள படம் கதாநாயகன். கடந்த மாதம் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் விஜய்சேதுபதி  சிறப்புத் தோற்றத்தில் நடித்து  இருந்தது உறுதியானது. நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுத்து உருவாகி வரும் இப்படத்திற்கு சிம்புவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் பின்னணி  குரல் கொடுத்துள்ளார். அவரது நண்பரான இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடை பாடியுள்ளார். தா.முருகானந்தம் இயக்கி வரும் இப்படத்தில் நாயகியாக  கேத்ரின் தெரசா நடித்துள்ளார். ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு பல படங்களை கையில் வைத்துள்ள  விஜய்சேதுபதி நட்புக்காக சில படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்தும், படத்தை ப்ரமோட் செய்யவும் உதவி வருகிறார். அதேபோல சிம்புவும் பல படங்களில்  நட்புக்காக பங்களித்து வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com