\
த்ரில்லர் கதைக்களத்தில் நரேன் நடிக்கும் ’குரல்’:  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

த்ரில்லர் கதைக்களத்தில் நரேன் நடிக்கும் ’குரல்’: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி

த்ரில்லர் கதைக்களத்தில் நரேன் நடிக்கும் ’குரல்’: ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கார்த்தி
Published on: 

நடிகர் நரேன் நடித்துள்ள ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.

’கைதி’ வெற்றிக்குப்பிறகு நடிகர் நரேன் கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அதோடு ‘குரல்’ என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். இன்று நரேனின் 42 வது பிறந்தநாளையொட்டி ‘குரல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கார்த்தி வெளியிட்டிருக்கிறார். இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் சுகீத் தமிழில் இயக்கியிருக்கிறார்.

நாயகியாக ஷ்ரதா சிவதாஸ் நடித்திருக்கிறார். இவர் சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தில் நடித்தவர். முக்கிய கதாபாத்திரங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புள்ள இப்படம் ”ரசிகர்களை கவரும் விதத்தில் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, நரேனின் மாறுபட்ட கெட்டபும், நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும்” என்று சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com