தன் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த அமிதாப் பச்சன்

தன் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த அமிதாப் பச்சன்

தன் திருமண ரகசியத்தை போட்டு உடைத்த அமிதாப் பச்சன்
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மனைவி ஜெயா இன்று 46வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அமிதாப் பச்சன். இன்றும் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் 1973ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி தனது தந்தையின் குடும்ப நண்பரின் மகளான ஜெயாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அபிஷேக் பச்சன் என்ற மகனும், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர். இன்று அமிதாப் மற்றும் ஜெயா பச்சன் தம்பதி 46வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அமிதாப் தனக்கு திருமணம் ஆன நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், “1973ஆம் ஆண்டு குடும்ப நண்பர்கள் எல்லாம் சேர்ந்து லண்டனுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். இதுதொடர்பாக எங்கள் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளவில்லை. 

ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் சிலரின் தந்தைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஜெயா என்னுடன் புறப்பட்டு வந்தார். நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருந்தோம். ஆமாம். நாங்கள் இருவரும் தனியாக செல்ல வேண்டுமென்றால் திருமணம் செய்துகொண்டு செல்லலாம் என என் தந்தை கூறினார். அடுத்த நாளே மலபார் சென்று நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டோம். அத்துடன் அன்றிரவே நாங்கள் லண்டன் புறப்பட்டு சென்றோம்” என அமிதாப் குறிப்பிட்டுள்ளார். அமிதாப் பச்சனின் தந்தை ஹரிவன்ஷிராய் பச்சன் ஒரு எழுத்தாளர்.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com