“கொரோனாவில் இருந்து எப்படி மீண்டேன்” - ஹாலிவுட் நடிகை அட்வைஸ்

“கொரோனாவில் இருந்து எப்படி மீண்டேன்” - ஹாலிவுட் நடிகை அட்வைஸ்

“கொரோனாவில் இருந்து எப்படி மீண்டேன்” - ஹாலிவுட் நடிகை அட்வைஸ்
Published on

கொரோனா வைரஸ் தக்குதலில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பது குறித்த தகவல்களை ஹாலிவுட் நடிகை ஓல்கா குர்லென்கோ பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹாலிவுட் நடிகை ஓல்கா குர்லென்கோ. பிரெஞ்ச் சினிமா உலகில் அதிகம் அறியப்பட்ட நடிகையாக வலம் வருகிறார். இவர் ஒரு மாடலும் கூட. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அப்லிவியன்’ (oblivion) பெரிய அளவில் பேசப்பட்டது. இவருக்கு சில நாட்கள் முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இவர் கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்துவிட்டதாகவும், இப்போது தான் நன்றாக இருப்பதாகக் கூறினார். இதனிடையே 'குவாண்டம் ஆஃப் சோலஸ்' நடிகரும் கொரோனா வைரஸ் பற்றிய விவரங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து நடிகை ஓல்கா குர்லென்கோ பகிர்ந்து கொண்டுள்ள செய்தியில், “இது கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சல் மட்டுமல்ல என்று எனக்கு எப்படித் தெரியும் ? என்கிறீர்களா ? கொரோனா வைரஸுக்காக ஒரு பரிசோதனையை செய்து கொண்டேன். அதில் பாசிடிவ் என்று வந்தது. உடனே மருத்துவர்கள் சிகிச்சையாக பரிந்துரைத்த மருந்துகள் யாவை ?” எனக் கூறியுள்ள அவர் மேலும் இது குறித்து எழுதியுள்ளார்.

“எனக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தால் அல்லது அதிக வலி ஏற்பட்டால், பாராசிட்டமல் எடுத்துக் கொள்ளும்படி என்னிடம் மருத்துவர்கள் கூறினர். இருப்பினும், நான் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கூடுதல் மருந்துகளை எடுத்துக் கொள்கிறேன். இந்த வைட்டமின் மாத்திரைகள் கொரோனா வைரஸைக் குணப்படுத்தாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக இருக்க அவை உதவுகின்றன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் அது போராட உதவும்!” என்று குர்லென்கோ கூறியுள்ளார்.

இந்த நிலையை சமாளித்து அவர் மீண்டு எழுவதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் விரிவான பட்டியலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இவருக்கு முன்னதாக கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட மற்றும் ஒரு ஹாலிவுட் நடிகர் ஜோடி டாம் ஹாங்க்ஸ். அடுத்தவர் ரீட்டா வில்சன். உடனே இந்தப் பிரபல தம்பதியினர் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும், ஹாலிவுட்டில் இசையமைப்பாளர் ஆண்ட்ரூ வாட், நடிகர் கிறிஸ்டோபர் ஹிவ்ஜு மற்றும் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆகியோரும் கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்பட்டு தற்போது போராடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com