“சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா?” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்

“சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா?” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்

“சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா?” - அருண் விஜயின் ‘மாஃபியா’ டீசர்
Published on

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘மாஃபியா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் கார்த்திக் நரேன். அதன் பிறகு ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார். ஆனால் பல காரணங்களால் அது வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் அருண் விஜயை வைத்து ‘மாஃபியா’ என்ற திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். 

‘தடம்’,‘சஹோ’ திரைப்படத்துக்கு பிறகு அருண் விஜய் மாஃபியாவில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் முருகதாஸ் படத்தின் டீசரை வெளியிட்டார். அருண் விஜயும், பிரசன்னாவும் சரிசமமாக தங்களது பலம் குறித்து பேசுவது போல டீசர் வெளியாகியுள்ளது. “சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா?” என இரு தரப்பும் கேள்வி எழுப்பியவாறு இந்த டீசர் அமைந்துள்ளது

இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கெனவே பார்த்து பாராட்டியதாக அருண் விஜய் தெரிவித்திருந்தார். ரஜினியுடன் இயக்குநர் கார்த்திக் நரேன் எடுத்துகொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com