''அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' - ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர்

''அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' - ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர்

''அம்மாவாக இருக்க குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை'' - ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர்
Published on

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘குயின்’ வெப் சீரீஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் தமிழக முதலமைச்சர் ஆனவர் ஜெயலலிதா. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பலரும் தற்போது திரைப்படமாக எடுத்து வருகின்றனர். தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜயும், ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் பிரியதர்ஷினியும் ஜெயலலிதாவின் பயோபிக்கை எடுக்கிறார்கள். இதில், ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

 அதேபோல், ‘தலைவி’ படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ராவத் நடித்து வருகிறார். இதேபோல், கௌதவ் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘குயின்’ என்ற பெயரில் வெப் சீரியஸ் தயாராகி வருகிறது. இதில், கௌதம் உடன் பிரசாத் முருகேசன் என்பவரும் இயக்குநராக பணியாற்றுகிறார்.

 நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘குயின்’ வெப் சீரீஸின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் பள்ளிக்காலம், இளமைக்காலம், திரையுலக காலம், அரசியல் பிரவேசம், எம்ஜிஆர் இறப்பு என பல காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், ஜெயலலிதாவின் பெயர் சக்தி ஷேசாஸ்திரி என இடம்பெற்றுள்ளது. அதேபோல், எம்.ஜி.ஆர் பெயர் ஜி.எம்.ஆர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com