\
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு!
Published on

விஜய் ஆண்டனியில் ‘கோடியில் ஒருவன்’ திரைபப்டம் வரும் ஏப்ரலில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

ஜீவாவின் ’டிஷ்யூம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. ஆனால், முதலில் வெளியானது ‘சுக்ரன்’ படம்தான். அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர், 14 வது படமாக ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். இந்நிலையில், நேற்று பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், இன்று விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கோடியில் ஒருவன்’ ஏப்ரலில் தியேட்டர்களில் வெளியாகிறது என்று அறிவித்திருக்கிறார். ஆனால், இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com