2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம்

2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம்

2 பாகமாக வெளியாகும் என்.டி.ஆர் திரைப்படம்
Published on

பாலகிருஷ்ணா, வித்யாபாலன் நடிப்பில் உருவாகும் என்.டி.ஆரின் வாழ்க்கைப் படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ். தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டு வருகிறது. திரை உலகிலும், அரசியல் அரங்கிலும் பல சாதனைகள் புரிந்த இவர். இவரது படத்திற்கு ‘யாத்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்.டி.ஆரின் வாழ்க்கைப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்.டி.ஆரின் திரை வாழ்க்கை அடுத்தாண்டு ஜனவரி மாதமும், அரசியல் வாழ்க்கை பிப்ரவரி மாதமும் இரண்டு பாகங்களாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com