\
"சில சமயத்துல அந்த தைரியத்துக்கு” -அனிருத் இசையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR30’'

"சில சமயத்துல அந்த தைரியத்துக்கு” -அனிருத் இசையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR30’'

"சில சமயத்துல அந்த தைரியத்துக்கு” -அனிருத் இசையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'NTR30’'
Published on

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் ‘என்டிஆர் 30’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ கடந்த மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி ரூ.1000 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது. இதனைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார். நாளை மே 20 ஆம் தேதி ஜூனியர் என்டிஆர் தனது 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் விதமாக கொரட்டலா சிவா- ஜூனியர் என்டிஆர் இணையும் ‘என்டிஆர் 30’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே, அனிருத் பவன் கல்யாணின் ‘அஞ்யாதவாசி’, நானியின் ‘கேங்லீடர்’, ‘ஜெர்ஸி’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜூனியர் என்டிஆரின் மிரட்டும் கெட்டப்பில் ’என்டிஆர்30’ படத்தின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது படக்குழு. “சில சமயத்துல அந்தத் தைரியத்துக்கு தெரியாது. அது அளவுக்குமீறி பாயக்கூடாதுன்னு. அந்த சமயத்துல பயத்துக்கு தெரியணும் தடுக்கவேண்டிய நேரம் வந்துடுச்சின்னி” என்ற வசனங்களுடன் வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோ ‘கேஜிஎஃப்’ ஸ்டைலில் மிரட்டுகிறது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆச்சார்யா’ படுதோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. கொரட்டலா சிவாவும் ஜூனியர் என்டிஆரும் ‘ஜனதா கரேஜ்’ படத்தில் ஏற்கனவே இணைந்திருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com