“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர்

“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர்

“விஜய் கருத்தில் எந்தத் தவறும் இல்லை” - டி.ராஜேந்தர்
Published on

எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் விஜய் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை எ‌ன லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்

நான் முதல்வரானால், நடிக்க மாட்டேன் உண்மையாக இருப்பேன் என ‘சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மேலும் தான் முதல்வராக பொறுப்பேற்றால் ஊழல், லஞ்சத்தை ஒழிப்பேன் என்று தெரிவித்தார். நேற்று முதல் விஜயின் அரசியல் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் டி.ராஜேந்தர், எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் விஜய் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 

“ஊழல் பற்றி நடிகர் விஜய் தெரிவித்த கருத்தில் எந்தத் தவறும் இல்லை. அதுகுறித்து பேசுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. தமிழகத்தில் பெரிய தலைவர்கள் யாரும் இல்லை. தலையும்,பூவும் சேர்ந்தால்தான் நாணயம் செல்லும். தலை சரியில்லை என்றால் எந்தக்கட்சியும், ஆட்சியும் வெல்லாது,  செல்லாது” என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய் பேசியது பற்றி கருத்து தெரிவித்த  தமிமுன் அன்சாரி ‘’போராட்டக்களங்களுக்கு வராத நடிகர்கள் கமிஷனுக்காக மட்டுமே வாயை திறக்கிறார்கள்’’ என்று  தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com