பிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்

பிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்
பிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனர் தம்பி கன்னன்தானம் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

மலையாளத்தில் பிரேம் நசீர் நடித்த ’பாஸ்போர்ட்’, மோகன்லாலை ஹீரோவாக உயர்த்திய ‘ராஜாவின்டே மாக்கான்’, மோகன்லால் நடித்த ’இந்திரஜாலம்’, மோகன்லால், பிரியா ராமன் நடித்த ‘மாந்திரீகம்’ உட்பட 16 படங்களை இயக்கியவர் தம்பி கன்னன்தானம். இவர் இயக்கத்தில் மோகன்லால் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. அதனால் 80 மற்றும் 90 களில் இவர்களின் காம்பினேஷனுக்கு மலையாள சினிமாவில் அதிக வரவேற்பு இருந்தது. இவர் ஐந்து படங்களை தயாரித்தும் உள்ளார். சில படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக, கல்லீரல் பிரச்னை காரணமாக கொச்சியில் உள்ள அஸ்டர் மெடிசிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று பகல் 12.50 மணிக்கு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

மறைந்த தம்பி கன்னன்தானத்துக்கு குஞ்சுமோல் என்ற மனைவியும்  ஐஸ்வர்யா, அய்ஞ்சல் என்ற மகள்களும் உள்ளனர்.

இசை அமைப்பாளரும் வயலின் இசைக்கலைஞருமான பாலபாஸ்கர் இன்று அதிகாலை மரனமடைந்தார். அவரது மரணச் செய்தி கேரள ரசிகர்களுக்கும் திரைத்துறைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இயக்குனர் தம்பி கன்னன்தானத்தின் மறைவு மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com