யுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்

யுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்

யுடியூப் ட்ரெண்டில் ‘நோட்டா’ டிரெய்லர் முதல் இடம்
Published on

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் பரவலாக பேசப்பட்டவர் விஜய் தேவரகொண்டா. இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு விஜய் தேவரகொண்டா மொழியை தாண்டி விரும்பப்படும் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவர் தமிழில் அறிமுகமாக உள்ள திரைப்படம் ‘நோட்டா’. இதனை ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியான வேகத்தில் யுடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 

ஆனந்த சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெஹ்ரீன், சத்யராஜ், நாசர், காமெடி நடிகர் கருணாகரன் போன்ற பலர் நடித்துள்ளனர். தெலுங்கு மற்றும் தமிழ் இருமொழிகளில் தயாராகி உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 54 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால் அதனுடன் ஒப்பிடும் போது தமிழ் டிரெய்லர் கொஞ்சம் வேகம் குறைவுதான். ஆனாலும் தமிழ் டிரெய்லர் லட்சக்கணக்கான ரசிகர்கள் கண்டு களித்ததால் யுடியூப்பில் டிரெண்ட்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

அது சரி டிரெய்லர் எப்படி?

டிரெய்லர் தொடக்கத்திலேயே தமிழக அரசியலை கிழித்து எடுத்துள்ளது. “சிட்டிக்குள்ள எல்லா ஏரிகளுமே நிரம்பிவிட்டது. இந்த நேரத்தில் அணையின் கதவை திறந்துவிட்டால் பல இடங்கள் தண்ணீர் உள்ள போயிடும்” என்ற வசன எச்சரிக்கை மணியோடு வேகம் எடுக்கிறது. கட்டுமஸ்தான உடல்வாகுடன் விஜய் தேவரகொண்டா கச்சிதமாக கதாப்பாத்திரத்திற்கு பொறுத்தமாக டிரெய்லரில் தெரிய ஆரம்பிக்கிறார். நடிகர் சத்யராஜின் எடக்கு மடக்கான அரசியல் நெடி கலந்த வசனத்தால் அடுத்து என்ன? என்று டிரெய்லர் மேலும் கவனத்தை ஈர்க்க வைக்கிறது.

’நானும் உன்ன விட ஓவரா நக்கல் அடிச்சவன்தான்’ என்று சத்யராஜ் உச்சரிக்கும் வசனம் அவர் நடிப்பு வாழ்க்கையோடு நெருங்கி வந்துள்ளது டிரெய்லரின் பலம் எனக் கூறலாம். மேலும் அவர் ‘இப்ப நடு ராத்திரியில் அறிக்கை கொடுப்பதுதான் ஃபேஷனாக போய்விட்டது இல்ல’ என்று சொல்லும் போது மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஞாபகத்திற்கு வந்து போகிறது. நாசர் தன் பங்கிற்கு ‘இது எனக்கான அக்னி பரீட்சை’ என்கிறார். அந்த இடம் செம பஞ்ச். நெளிவான காட்சிகள், சிறப்பான மோதல்கள் என டிரெய்லர் ஒவ்வொரு அடியையும் கவனமாக நகர்த்திக் கொண்டு போகிறது. தெலுங்கு மொழியை போலவே தமிழில் விஜய் தேவரகொண்டா தனித்த முத்திரையை பதிப்பார் என இப்போதைக்கு நம்பலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com