சினிமா
‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
‘பிகில்’ சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தீபாவளியையொட்டி வெளியாகும் ‘பிகில்’ உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும், சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தீபாவளியையொட்டி வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கான அதிக கட்டண புகார் குறித்து கேட்டதற்கு, தீபாவளியையொட்டி திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார். அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது என்றும் கூறினார்.
அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை தெரிவித்தார்.