விஷால் நிறுவனத்தில் சோதனையா?: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மறுப்பு
நடிகர் விஷால் நிறுவனத்தில் சோதனை நடத்தியதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவின் சென்னை மண்டல அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. இதில் உண்மை ஏதுமில்லை. ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விஷாலின் நிறுவனத்தில் எந்தவொரு சோதனையும் செய்யவில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வடபழனியில் உள்ள விஷாலுக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் சுமார் 3 மணிநேரம் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.

