"நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை" - விஜயகாந்த் புகழஞ்சலி

"நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை" - விஜயகாந்த் புகழஞ்சலி

"நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை" - விஜயகாந்த் புகழஞ்சலி
Published on

நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் "நடிகர் விவேக்கின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஈடு இணை செய்ய முடியாத அவரது இழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது"

"தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து 'சின்ன கலைவாணர்' என போற்றப்பட்ட நடிகர் விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை. தன்னலம் பார்க்காமல் சமூக அக்கறையோடு சேவை புரிந்து வந்த நடிகர் விவேக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com