வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகாததால், அவர் மீதான அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
பட்டியலினத்தோரை இழிவாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மீரா மிதுன் மீது பட்டியலினத்தோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு நேற்று காலை 10 மணிக்கு ஆஜராக, மீரா மிதுனுக்கு சைபர் கிரைம் காவல்துறையினர் சம்மன் அளித்திருந்தனர்.
இந்நிலையில், தன்னை யாரும் கைது செய்திட முடியாது என்றும், அது கனவில்தான் நடக்கும் என்று காவல் துறையினருக்கு சவால் விடும் விதமாக மீரா மிதுன் வீடியோ வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.