பாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ்

பாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ்

பாலியல் தொல்லையை நானும் சந்தித்தேன்: நிவேதா பெத்துராஜ்
Published on

’சினிமாவில் பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்து இருக்கிறேன் என்று நடிகை நிவேதா பெத்துராஜ் கூறினார்.

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘திமிரு புடிச்சவன்’. கணேஷா இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா ஆண்டனி தயாரித்து இருக்கிறார். இந்தப் படக்குழு சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தது.

அப்போது நடிகை நிவேதா பெத்துராஜ் கூறும்போது, ‘இந்தப் படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து இருக்கிறேன். முதலில் மோசமான போலீஸ் அதிகாரியாக இருந்து நல்ல போலீஸ் அதிகாரியாக மாறுகிற கேரக்டர். கேரக்டருக்காக  புல்லட் வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன். திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். செய்தேன்.

டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. படம் முழுக்க நிறைய செய்ய சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் நடித்ததிலேயே முக்கியமான படமாக இது இருக்கும். எனக்கு அதிக பட வாய்ப்புகள் வராததற்கு காரணம், நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டு நிற்பதில்லை. என்னை தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்’ என்றார்.

அவரிடம் சினிமாவில் பாலியல் தொல்லை பிரச்னையைச் சந்தித்து இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன். ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில் அதை எதிர்கொண்டேன். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. நான் அந்த பார்ட்டிக்கு சென்றிருக்கக் கூடாது. போகாமல் இருந்தால் அந்த பாலியல் தொல்லையை தவிர்த்து இருக்கலாம். இணைய தளங்களில் என் கவர்ச்சி படங்கள் நடமாடுகின்றன. அந்த படங்கள் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, ‘மாடலாக’ இருந்தபோது எடுக்கப்பட்டவை’ என்றார். 

விஜய் ஆண்டனி கூறும்போது, 'தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர்தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க இயக்குனர் கணேஷா மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன்’ என்றார் .

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com