\
விஷ்ணு விஷால் ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்!

விஷ்ணு விஷால் ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்!

விஷ்ணு விஷால் ஜோடியானார் நிவேதா பெத்துராஜ்!
Published on

தமிழில், ’ஒருநாள் கூத்து’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். இவர் இப்போது விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை எழில் இயக்குகிறார். மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இ.முருகன் கதை. ஈஷான் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் துஷ்யந்த், அபிராமி துஷ்யந்த் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று காலை நடந்தது.

‘இதுவும் காமெடி கதைதான். ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்துக்குப் பிறகு எழில்-விஷ்ணுவிஷால் இணைவதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அந்தப் படத்தை விட இதில் இதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசை அமைக்கிறார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார்’ என்றது படக்குழு.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com