\
நிக்கி கல்ராணிக்கு நடிகர் பிரபு மேக் அப்: வைரல் வீடியோ

நிக்கி கல்ராணிக்கு நடிகர் பிரபு மேக் அப்: வைரல் வீடியோ

நிக்கி கல்ராணிக்கு நடிகர் பிரபு மேக் அப்: வைரல் வீடியோ
Published on

நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் பிரபு மேக் அப் செய்துவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் பிரபு நடிக்கும் திரைப்படம் சார்லிசாப்லின்2. இதில் பிரபுதேவாவும் நடிக்கிறார். இதனை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப்படத்தின் ஷூட்டிங் போது நடிகர் பிரபு நடிகை நிக்கி கல்ராணிக்கு மேக் அப் போட்டு விட்டிருக்கிறார். 

மிக அழகாக நிக்கி கன்னத்தில் திருஷ்டி பொட்டும் இட்டு விட்டிருக்கிறார். அதற்கான வீடியோவை நடிகை நிக்கி கல்ராணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றிவிட்டு அதில், “எனது சினிமா அப்பா என் மீது அதிகமான அக்கறை எடுத்து கொண்டார்.”என்று  குறிப்பிட்டுள்ளார். அதாவது எனக்கு பிரபு திருஷ்டி பொட்டு வைத்து விட்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com