\
’சிங்கம் 3’ படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லியில் கைது!

’சிங்கம் 3’ படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லியில் கைது!

’சிங்கம் 3’ படத்தில் நடித்த நைஜீரிய பிரபலம் டெல்லியில் கைது!
Published on: 

தமிழில் 'சிங்கம் 3' மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள நைஜீரிய பிரபலம், டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நைஜீரியாவைச் சேர்ந்தவர் முகமது அகான்பி ஒஜரா என்ற ஓலா ஜேசன் (Olamilekan Mohammed Akanbi Ojora, known as Ola Jason). இவர், சூப்பர் ஸ்டோரி, கிங் ஆப் மை வில்லேஜ்’ உட்பட சில நைஜீரிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தியா வந்த அவர், இந்தியில் தங்கல், கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், சூர்யா நடித்துள்ள சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ’எஸ்:3’ படத்திலும் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார்.

இவர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். அவரிடம் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட் அவரிடம் இருந்தது. பாஸ்போர்ட்டை பார்த்த போது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரிய வந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியிருந்துள்ளார்.

இதுபற்றி விசாரித்தபோது முன்னுக்குப் பின்னாகப் பதிலளித்தார். இதையடுத்து கைதுசெய்யப்பட்ட அவர், உளவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com