சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்web

’சர்ப்ரைஸ் காத்திருக்கிறது..’! SK 25 படத்திற்கான புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் SK 25 படத்திற்கான புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

300 கோடிக்கும் மேல் வசூல்செய்த அமரன் போன்ற ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK25 திரைப்படம் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சுதா கொங்கரா இயக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் ஜெயம்ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் சேர்ந்து நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், ஜிவிபிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் பணியாற்றவிருக்கும் நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சுவாரசியமான அறிவிப்பு காத்திருக்கிறது..

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா இணையும் SK25 படமானது இந்தி திணிப்பை எதிர்க்கும் கதையாக சொல்லப்படும் நிலையில், இந்த படத்தின் பெயர் ’பராசக்தி’ என்ற தகவல் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் படத்திற்கான சுவாரசியமான அறிவிப்பு நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி நாளை மாலை 5 மணிக்கு புதிய அப்டேட் வெளியாகும் என்றும், அது எக்சைட்டிங் அறிவிப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படத்திற்கான டைட்டில் டீசராக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com