சினிமா
பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
பிக்பாஸ் முகேன் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகர் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் ‘வேலன்’ படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
கவின் மூர்த்தி இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை மீனாக்ஷி கோவிந்த ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சூரி, பிரபு, தம்பி ராமையா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்தப்படத்தில் முகேன் பள்ளி மாணவன், கல்லூரி இளைஞர் என இருவேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்கள் வெளியான நிலையில், தற்போது முகேன் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‘வேலன்’ கதாபாத்திரத்தில் முகேன் நடிக்கிறார்.